Ashta Aishwarya Program- Join our 9-Month Program to Manifest Eight Types of Wealth in Life Join Now
வேலை தொடர்பான வேண்டுதல் நடக்க பரிகாரம்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

வேலை தொடர்பான வேண்டுதல் நடக்க பரிகாரம்

Posted DateSeptember 28, 2024

அருள் இலார்க்கு அவ்வுலகில்லை. பொருள் இலார்க்கு இவ்வுலகில்லை என்பார்கள். அதனால் தான் அந்தக் காலத்தில் திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்று நம் முன்னோர்கள் பொருள் தேடி வெவ்வேறு இடங்களுக்குச் சென்றார்கள். அன்றைய காலகட்டத்தில் உத்தியோகம் புருஷ லட்சணம் என்று இருந்தது. ஆனால் இந்த நவீன உலகத்தில், வயது வந்த ஒவ்வொருவரும் ஒரு வேலை தேடிச் செல்ல வேண்டியிருக்கிறது. ஒவ்வொருவருக்கும் வேலை அவசியம் என்பதால் வேலை கிடைப்பதும் சிலருக்கு கடினமாக இருக்கிறது. அவ்வாறே கிடைப்பினும் அது அவர்களின் படிப்பிற்கு ஏற்ற வேலையாக தேட வேண்டி இருக்கிறது. அது மனதிற்கு பிடித்ததாகவும் அமைய வேண்டி இருக்கிறது. ஒரு சிலர் அரசாங்க வேலை வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதற்கு அவர்கள் சில பல தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

ஒருவருக்கு நல்ல வேலை அல்லது தொழில் அமைய ஜாதகத்தில் ஆறாமிடம், பத்தாமிடம், சனி சூரியன் ஆகிய கிரகங்கள் வலுவாக இருக்க வேண்டும். வேலை கிடைத்தால் மட்டும் போதுமா? கிடைத்திருக்கும் வேலை நிலைக்க வேண்டும். வேலையின் மூலம் நல்ல வருமானமும் வர வேண்டும் அல்லவா?நல்ல படிப்பு, திறமை,நமது விடா முயற்சி இவை அனைத்திற்கும் மேலே இறை அருளும் நமக்குத் துணையாக இருக்க வேண்டும்.  எனவே வேலை வேண்டுபவர்கள் தங்கள் முயற்சியுடன் கூட இறை அருளைப் பெறுவதற்கான ஒரு எளிய பரிகாரத்தைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

கோதுமை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு அந்த மாவில்  ஒரு சிறிய விளக்கு போல் செய்து கொள்ளுங்கள். இந்த விளக்கிற்கு மஞ்சள் குங்குமம் வைத்து ஒரு சிறிய தாம்பாள தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.  பிறகு இதில் சுத்தமான பசு நெய் ஊற்ற வேண்டும். வெள்ளை பஞ்சு திரி போட்டு கிழக்கு பார்த்தவாறு வைத்து தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு தீபத்தை பார்த்தவாறு உங்களுடைய வேண்டுதல் என்னவோ அந்த வேண்டுதலை கூற வேண்டும். பிறகு வீட்டிற்கு வெளியே வந்து சூரிய பகவானை பார்த்து வணங்க வேண்டும். இந்த முறையில் தொடர்ச்சியாக 5 வாரங்கள் வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய வேலை தொடர்பான  வேண்டுதல்கள் நிறைவேறும்.

இந்த விளக்கேற்றி உங்கள் வேண்டுதலை வைத்து நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

“ஓம் கிரினி விவஸ்வான் ஆதித்யாய நமஹ”

இந்த மந்திரத்தை 108 முறை சூரியனை பார்த்து வணங்கிக் கூறுங்கள். ஆதித்யன் என்பது சூரியனின் பல்வேறு பெயர்களில் ஒன்றாகும். மேலே சொன்ன இந்த மந்திரத்தை சொல்வதன் மூலம் அதீத பலன்கள் கிட்டும். இந்த வழிபாட்டை ஞாயிற்றுக்கிழமை அன்று செய்வது சிறப்பு. இவ்வாறு தொடர்ந்து ஐந்து ஞாயிற்றுக்கிழமை செய்து கொண்டே வாருங்கள். உங்கள் வேண்டுதலையும் கூறி வழிபடுங்கள் இத்துடன் உங்கள் வேலை தேடும் முயற்சியையும் கைவிடாமல் தொடருங்கள். நீங்கள் நினைத்தபடி உங்களுக்கு ஏற்ற வேலை கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்களுக்கு கை மேல் பலன் கிட்டும்.