வாஸ்து என்பது ஒரு கட்டிடத்தின் உயிரோட்டம் எனப்படும். பஞ்ச பூதங்களின் சரியான சேர்க்கையே சரியான வாஸ்து ஆகும்.நெருப்பு நிலம், நீர், காற்று, ஆகாயம் என இந்த ஐந்தும் பஞ்ச பூதங்கள் ஆகும். இவற்று/ள் ஒன்று சரியாக இல்லாவிட்டாலும் அது வாஸ்து குறைபாட்டை சுட்டிக் காட்டும். இதனால் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும். இந்த குறைபாட்டை சரி செய்யாவிட்டால் அந்த வீட்டில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையிலோ அல்லது பல வகையிலோ பாதிக்கப்படலாம். ஆரோக்கியத்தில் பிரச்சினை, பணம் சம்பாதிப்பதில் பிரச்சினை, திருமண வாழ்வில் பிரச்சினை, உறவுப் பிரச்சினை என ஏதாவது ஒரு பிரச்சினை வந்த வண்ணமே இருக்கும். வாஸ்துவை சரி செய்வதன் மூலம் இந்த பிரச்சினைகளில் இருந்து வெளிவரலாம். வாடகை வீட்டில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி, சொந்த வீடு வைத்திருந்தாலும் சரி சில எளிய பரிகாரம் செய்வதன் மூலம் இந்த வாஸ்து பிரச்சினைகளில் இருந்து நாம் விடுபடலாம். வீடு கட்டும் போது இந்த திசையில் இந்த அறை இருக்க வேண்டும் என்ற நியதி பின்பற்றப் பட வேண்டும். அதனை மாற்றி அமைக்கும் போது வீட்டின் காந்தப் புலம் பாதிப்படைகிறது. அதன் மூலம் சில பல பிரச்சினைகள் எழுகிறது.
வாஸ்து பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய எளிய ஒரு பரிகார முறையைத் தான் இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம். இந்த வாஸ்து பரிகாரத்தை செய்ய வீட்டை இடித்து கட்டுவதோ அமைப்பை மாற்றிக் கட்டுவதோ அவசியம் இல்லை. நாம் வசிக்கும் வீட்டிலேயே சில பொருட்களை சரியான இடத்தில் சரியான திசையில் வைப்பதன் மூலம் வாஸ்து பிரச்சினைகளை சரி செய்யலாம். இது நமது வீட்டில் நேர்மறை ஆற்றலை கொண்டு சேர்க்கும். வீட்டில் மின் காந்த அலைகளின் ஓட்டம் அல்லது சுழற்சி சமன் செய்யப்படும்.
வீட்டின் தென்மேற்கு திசையில் வடகிழக்கு திசையை பார்த்தவாறு வயிறு பெருத்த பொம்மையை வாங்கி வைக்க வேண்டும். வயிறு பெருத்த குபேர பொம்மை, விநாயகர் அல்லது மகாராஜா போன்ற தோற்றமுடைய பொம்மை இவற்றை வாங்கி வைக்கலாம்.தென்மேற்கு திசையில் நிருதி மூலை அல்லது கன்னி மூலை என்று சொல்வார்கள். கோவிலில் இந்த மூலையில் விநாயகரை பிரதிஷ்டை செய்திருப்பார்கள். கோவில்களில் ஏற்படும் வாஸ்து தோஷத்தை நீக்கக் கூடிய இந்த முறையை தான் நாம் வீட்டிலும் பின்பற்றுகிறோம். இந்த ஒரு பரிகாரம் வாஸ்து பிரச்சனையை பெருமளவு சரி செய்யக் கூடியது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
வாஸ்து நிவர்த்தி செய்யும் பொருட்களில் ஒன்று எலுமிச்சம் பழம் ஆகும். இந்தக் கனியை தெய்வக் கனி என்றும் கூறுவார்கள். வாஸ்து பரிகாரம் செய்ய இதனை பயன்படுத்தலாம். கரும் புள்ளிகள் இல்லாத ஒரு எலுமிச்சைப் பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நடுவில் முன் பக்கத்தில் இருந்து பின் பக்கம் வரை ஒரு ஓட்டை போட்டுக் கொள்ளுங்கள். அந்த ஓட்டையில் சிறிது அருகம்புல்லை முன் பக்கத்தில் இருந்து பின் பக்கம் வருமாறு சொருக வேண்டும். இதனை வீட்டின் வாசற்படியில் கட்டி தொங்க விடலாம். இல்லாவிடில் வீட்டில் ஏதாவது ஒரு மூலையில் கால் படாதவாறு வைத்து விடலாம். வாரம் ஒரு முறை இதனை மாற்றுவது வேண்டும்.
இந்த எளிய பரிகாரத்தின் மூலம் வாஸ்து குறைபாடுகள் நீங்கும். திருஷ்டி தோஷங்களும் தாக்காது. வீட்டில் நேர்மறை ஆற்றல் பெருகும். எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். இதனை செய்வதற்கு அதிக பணமும் செலவாகாது. மேலே சொன்ன இரண்டு எளிய வாஸ்து பிரச்சினை நீக்கும் பொருளை நம்பிக்கையுடன் வைத்துப் பாருங்கள். மாற்றங்களை நீங்களே உணரலாம்.
September 12, 2025
September 12, 2025
September 11, 2025