Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
வைத்தீஸ்வரன் கோயில் | vaitheeswaran temple in Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

வைத்தீஸ்வரன் கோயில்

Posted DateNovember 6, 2023

வைத்தீஸ்வரன் கோவில் அறிமுகம்

வைத்தீஸ்வரன் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயங்களுள் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இந்தக் கோவில் சீர்காழியிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. “வைத்தியம்” என்ற சொல் ‘குணப்படுத்துதல்’ என்பதைக் குறிக்கிறது, மேலும் “ஈஸ்வரன்” என்ற சொல் ‘சிவபெருமானை’ குறிக்கிறது. இதனால் நோய் தீர்க்கும் இறைவனாகவும், ஆரோக்கியம் தரும் கடவுளாகவும் வைத்தீஸ்வரன் திகழ்கிறார். சிவபெருமான் வைத்தீஸ்வரன் என்ற திருநாமத்திலும்  பார்வதி தேவி தையல்நாயகி என்ற திருநாமத்திலும் இத்தலத்தில் குடிகொண்டு அருள் பாலிக்கின்றனர். இது அங்காரகன் என்றும் அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட நவக்கிரக கோவில்களில் ஒன்றாகும். முருகப் பெருமானுக்கு இந்த கோவிலில் ஒரு தனி சந்நிதி உள்ளது மற்றும் மிகவும் போற்றப்படுகிறது. சிவபெருமானின் தீவிர பக்தர்களான நாயன்மார்களால் போற்றப்பட்ட புகழ்பெற்ற கோயில்களில் இதுவும் ஒன்று. இந்த கோவிலுக்கு பல தேவர்கள் மற்றும் துறவிகள்   சென்று வழிபட்டுள்ளனர், மேலும் இது சிவன் கோவில்களில் முக்கியமானது.

வைத்தீஸ்வரன் கோயிலின் வரலாறு மற்றும் புராணம்

வைத்தீஸ்வரன் கோவில்

அங்காரகனுக்கு தொழு நோய் ஏற்பட்டது. வேறு எங்கும் மருந்து கிடைக்காத அங்காரகனின் தொழுநோயை சிவபெருமான் குணப்படுத்தியதால் வைத்தீஸ்வரன் என்ற பெயர் ஏற்பட்டது. பறவைகளின் அரசனான ஜடாயு இக்கோயிலில் முக்தி பெற்றதாகக் கூறப்படுகிறது எனவே இதிகாசமான ராமாயணத்துடன் இந்தக் கோயில் தொடர்புடையது.   இங்கு சிறப்பு வாய்ந்த கோயில் குளம் உள்ளது, மேலும் ஜடாயுவின் புனித சாம்பல் பொதுமக்களின் பார்வை மற்றும் வணக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், முருகப்பெருமானுக்கு ஒரே ஒரு முகம் மட்டுமே உள்ளது. வழக்கமாக, அவர் எப்போதும் ஆறு முகங்களுடன் சித்தரிக்கப்படுவார். அவர் தனது தாயிடமிருந்து ‘வேல்’ என்ற ஆயுதத்தைப் பெற்று, ‘சூரபத்மன்’ என்ற அரக்கனை அழித்தார். முருகப்பெருமான் சூரபத்மனுடன் போரிட்ட போது ஏற்பட்ட காயங்களை சிவபெருமான் குணப்படுத்தினார். இன்றும், மூலிகைகள் மற்றும் மண்ணால் செய்யப்பட்ட ஒரு சிறப்பு மருத்துவ உருண்டை, பல நோய்களை குணப்படுத்தும் மருந்தாக வழங்கப்படுகிறது.

வைத்தீஸ்வரன் கோயிலின் கட்டிடக்கலை

இக்கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது, மேலும் இவை நாயக்கர் காலத்தில் புதுப்பிக்கப்பட்டதாக பல கல்வெட்டுகள் கூறுகின்றன. இக்கோயிலில் சிவன்-வைத்தீஸ்வரன், பார்வதி-தையல் நாயகி, சுப்ரமணியர், செல்ல முத்துக்குமாரசுவாமி, அங்காரகன் எனப் போற்றப்படும் செவ்வாய் கிரகம், ஆகியவற்றிற்கு தனிச் சன்னதிகள் உள்ளன. மற்றொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், நவ கிரகங்கள்  வழக்கமான அமைப்பைப் போலல்லாமல் ஒரே நேர்கோட்டில் வைக்கப்பட்டுள்ளன, பைரவர் மற்றும் சட்டநாதர் சன்னதிகள் மிகவும் அழகாகவும் மிகவும் பிரமிக்கும் வகையிலும் சித்தரிக்கப்பட்டுள்ளன. கோயில் நடைபாதையில் பல தூண்கள் உள்ளன, அவை இந்த கோயிலுக்கு அழகு சேர்க்கின்றன. இந்த கோவிலின் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால், சூரியக் கதிர்கள் ஒரு வருடத்தில் சில நாட்கள் சிவலிங்கத்தின் மீது நேரடியாகப் படுகிறது. தற்போது இக்கோயில் தருமபுரம் ஆதீனத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

வைத்தீஸ்வரன் கோவில் தொடர்பான திருவிழாக்கள்

தமிழ் மாதமான தையில் (ஜனவரி நடுப்பகுதி முதல் பிப்ரவரி நடுப்பகுதி வரை) 10 நாள் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 28 நாட்கள் நடைபெறும் “பங்குனி பிரம்மோத்ஸவம்” திருவிழா உலகம் முழுவதிலுமிருந்து மக்களை ஈர்க்கிறது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் “ஐப்பசி ஸ்கந்த சஷ்டி” 6 நாட்களும் ஆடம்பரமாகவும் மகிமையுடனும் கொண்டாடப்படுகிறது. வைகாசி மாத அன்னாபிஷேகம் மற்றும் மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திர நாட்களும் இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. அங்காரகனின் பூஜை  செவ்வாய்க் கிழமைகளில் நடத்தப்படுகிறது, மேலும் அவர் கோயிலின் மாடவீதிகளில் பக்தர்கள் புடை சூழ ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகிறார். அதோடு, மகா சிவராத்திரி , தீபாவளி , தமிழ்ப் புத்தாண்டு போன்ற பண்டிகைகள் அனைத்தும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

வைத்தீஸ்வரன் கோயிலை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்

கருணை மிக்க இறைவன் இந்த ஆலயத்தில் நோயால் பாதிக்கப்பட்ட அனைத்து பக்தர்களையும் குணப்படுத்துவதாக ஐதீகம். அங்காரக (செவ்வாய்) கிரகம், நிலம் அல்லது சொத்து தொடர்பான பிரச்சினைகளில் இருந்து பக்தர்களைப் பாதுகாக்கிறது. குடும்பச் சண்டைகள் மற்றும் வாழ்க்கையில் பிரச்சனைகள் உள்ளவர்கள் இக்கோயிலுக்கு வந்து பரிகாரம் தேடி, புது வாழ்வு பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறார்கள். சிவபெருமான் தனது பக்தர்கள் அனைவருக்கும் இரட்சிப்பை வழங்குகிறார் மற்றும் வாழ்க்கையில் நேர்மறையான முன்னேற்றங்களைக் காண உதவுகிறார். ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் (செவ்வாய் தோஷம்) உள்ளவர்கள் விரைவில் திருமணம் நடக்க வேண்டுதல் வைத்து இந்தக் கோவிலுக்கு வருகிறார்கள்.

வைத்தீஸ்வரன் கோயிலுக்கு எப்படி செல்வது

விமானம் மூலம்

அருகிலுள்ள விமான நிலையம் திருச்சிராப்பள்ளியில் உள்ளது, இது வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து கிட்டத்தட்ட 118 கிமீ தொலைவில் உள்ளது. மாற்றாக, பாண்டிச்சேரி விமான நிலையமும் நகரத்திலிருந்து 108 கி.மீ தொலைவில் உள்ளது.

ரயில் மூலம்

வைத்தீஸ்வரன் கோவிலுக்கு மிக அருகில் ரயில் நிலையம் உள்ளது. இது ரயில்வே மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது, மேலும் பெரும்பாலான ரயில்கள் இந்த நிலையத்தில் நிற்கின்றன.

சாலை வழியாக

உள்ளூர் போக்குவரத்து கோவிலுடன் இணைக்கப்பட்டுள்ளது. பேருந்துகள், உள்ளூர் ஆட்டோக்கள் மற்றும் டாக்சிகள் அதிக எண்ணிக்கையில் கிடைக்கின்றன, இது தடையற்ற பயணத்தை உறுதி செய்கிறது.