Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
வாஸ்து குறைபாடு மற்றும் கல் உப்பு பரிகாரம் – வீட்டு வளம் தரும் எளிய வழிமுறை
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

வாஸ்து குறைபாடு மற்றும் கல் உப்பு பரிகாரம்

Posted DateSeptember 17, 2025

இந்திய பாரம்பரியத்தில் வாஸ்து சாஸ்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது. வாஸ்து என்பது இல்லங்கள், கட்டிடங்கள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் காந்த சக்தி மற்றும் ஆற்றலை சரி செய்யவும் அதனை முழுமையாகப் பெறுவதற்குமான  அறிவியல் அமைப்பு முறை எனலாம். அந்தக் காலத்தில் எல்லாம் அதிகமாக தனி வீடுகள் இருந்தன. ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு அல்லது மூன்று வாசல்கள் இருக்கும். ஒவ்வொரு வீட்டிற்கும் முன் வாசல் பின் வாசல் என இரண்டு வாசல்கள் இருக்கும். ஒரு வாசலில் இருந்து பார்த்தால் மற்றொரு வாசல் தெரியம். அதனால் காற்றின் ஓட்டம் தடைபடாமல் இருக்கும். சூரிய வெளிச்சம் வீட்டிற்குள் மிதமாகப் பாயும். கிருமிகள் அண்டாமல் இருக்கும். அது மட்டும் இன்றி வீட்டின் அறைகள் மற்றும் புழங்கும்  இடங்கள் இந்திந்த திசைகளில் இருக்க வேண்டும் என்ற நியதி இருக்கும். இதுவே வாஸ்து சாஸ்திரம் ஆகும். இதனை முறையாக கடைபிடிக்காவிட்டால்  வாஸ்து குறைபாடுகள் ஈற்படும்.

வாஸ்து குறைபாடு என்பது எந்த இடத்திலும் ஐந்து தத்துவங்களின் (பூமி, நீர், அக்னி, காற்று, ஆகாசம்) சமநிலை குலைவு ஏற்பட்டால் தோன்றும். உதாரணமாக, வடகிழக்கு மூலையில் கழிப்பறை அமைந்தால், தென்கிழக்கில் நீர் அமைந்தால் அல்லது வீட்டின் நடுப்பகுதியில் சுமை தூண்கள் இருந்தால், அது வாஸ்து குறைபாடாகக் கருதப்படும்.

 முன்பே கூறியது போல வாஸ்து சாஸ்திரம் என்பது வீட்டில் மற்றும் பணியிடத்தில் சக்தி சமநிலையை உருவாக்கும் பண்டைய இந்திய அறிவியல். ஆனால் சில நேரங்களில் வீட்டின் திசை அமைப்பு, அறை இடம், கழிப்பறை அமைப்பு போன்ற காரணங்களால் வாஸ்து குறைபாடு ஏற்படலாம். வாஸ்து குறைபாடுகள் ஏற்படும் போது வீட்டில் நிதி நெருக்கடி, உடல் நலப் பிரச்சினை, மனஅழுத்தம், குடும்பத்தில் சண்டை, வேலை வியாபாரத்தில் தடைகள் போன்றவை உண்டாகும் என நம்பப்படுகிறது. இதைச் சரி செய்யாமல் விட்டால் வாழ்க்கை பாதிக்கப்படும் என நம்பப்படுகிறது.

 ஆனால், எல்லோரும் வீட்டை இடித்து மீண்டும் கட்ட முடியாது. அப்படி முடியாத சூழலில், பரிகாரங்கள் மூலமாக குறையை குறைக்கலாம். அவற்றில் முக்கியமானதும் எளிதானதும் கல் உப்பு பரிகாரம் ஆகும்.

வாஸ்து குறைபாட்டை குறைக்க பல பரிகாரங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் மிக எளிமையானது கல் உப்பு பரிகாரம் ஆகும்.

கல் உப்பின் (Rock Salt) சக்தி

கல் உப்பு இயற்கையாக உருவான ஒரு கனிமம். இதில் எதிர்மறை ஆற்றலை உறிஞ்சி, நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் தன்மை உள்ளது. இது காற்றில் உள்ள நெகட்டிவ் எனர்ஜியை ஈர்த்து, சூழலை தூய்மைப்படுத்தும். மனஅழுத்தம், கோபம் போன்ற அதிர்வுகளை குறைத்து அமைதியை அளிக்கிறது. நாம் வாழும் இடத்தை  மற்றும் ஆற்றலை சமநிலைப்படுத்துகிறது. இதனால் கல் உப்பு பரிகாரம் வாஸ்து குறைபாடுகளை குறைக்கும் மிகச் சிறந்த மற்றும் சுலபமான வழியாக கருதப்படுகிறது.

கல் உப்பு பரிகாரம் செய்வது எப்படி?

1. அறைகளில் கல் உப்பு வைத்து பரிகாரம்

∙ வீட்டின்  ஒவ்வொரு அறையின் மூலையிலும் சிறிய கிண்ணத்தில் கல் உப்பு வைக்கவும்.

∙ மாதம் ஒருமுறை அந்த உப்பை மாற்றி புதிய கல் உப்பு வைக்க வேண்டும்.

∙ பழைய உப்பை குப்பையில் போடாமல், ஓடையில் அல்லது கிணற்றில் கரைத்து விட வேண்டும்.

2. துடைப்பதில் பயன்படுத்துதல்

∙ தண்ணீரில் சிறிது கல் உப்பை கரைத்து வீட்டை துடைத்தால், எதிர்மறை அதிர்வுகள் நீங்கி, நேர்மறை சக்தி அதிகரிக்கும்.

∙ இது குறிப்பாக வியாபார கடைகள், அலுவலகங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

3. வடகிழக்குப் பகுதியில் பரிகாரம்

∙ வீட்டின் வடகிழக்கில் (ஈஷான்ய மூலை) சுத்தமான பாத்திரத்தில் கல் உப்பு வைத்து, அருகில் நீருடன் கூடிய குவளை வைப்பது நன்றாகக் கருதப்படுகிறது.

∙ இது அந்த திசையின் ஆற்றலை அதிகரிக்கும்.

4. படுக்கையறையில் மனஅமைதிக்காக

∙ படுக்கையின் கீழ் அல்லது மூலையில் கல் உப்பு வைக்கலாம்.

∙ இதனால் மனஅழுத்தம் குறைந்து நல்ல நித்திரை கிடைக்கும்.

 வாஸ்து குறைபாடு மற்றும் கல் உப்பின் விளைவுகள்

 நிதி நெருக்கடி: பணவரவு குறைவாக இருந்தால், வியாபார இடத்தில் மற்றும் வீட்டில் கல் உப்பு வைப்பது ஆற்றல் சமநிலையை உருவாக்கும்.

∙ குடும்ப கலகம்: சண்டைகள், மனக்கசப்புகள் அதிகமாக இருந்தால், கல் உப்பு வைத்து பரிகாரம் செய்தால் மன அமைதி ஏற்படும்.

∙ ஆரோக்கிய பிரச்சினைகள்: உப்பின் அயோனிக் சக்தி காற்றில் உள்ள கிருமிகளை குறைக்கும், அதனால் ஆரோக்கியத்துக்கும் நல்லது என நம்பப்படுகிறது.

∙ தீய சக்தி/கண்ணோட்டம்: கல் உப்பை வீட்டின் நுழைவாயிலில் வைப்பது தீய அதிர்வுகளைத் தடுக்க உதவும்.

கல் உப்பு பரிகாரம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை

∙ எப்போதும்  இயற்கையான கல் உப்பு பயன்படுத்த வேண்டும்.

∙ உப்பு ஈரமாகாமல் வைக்க கிண்ணம் சுத்தமாக இருக்க வேண்டும்.

∙ பரிகாரம் செய்த உப்பை உணவில் பயன்படுத்தக்கூடாது.

∙ மாதந்தோறும் மாற்றுவது அவசியம்.