AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now
அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோவில், திருச்சுழி
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

திருச்சுழி திருமேனிநாதர்

திருச்சுழி திருமேனிநாதர் கோயில் (திருச்சுழியல்) தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சுந்தரர்  பாடல் பெற்ற இத்தலம்  தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சிவன் ஒரு சமயம் பிரளயத்தைச் சுழித்து பூமிக்குள்  புகச் செய்தார் என்பது தொன்நம்பிக்கை. ஒவ்வொரு யுகத்திலும் இவ்வூரில் பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவு உண்டாவதுண்டு. துவாபர யுகத்தில் பேரழிவு ஏற்பட்ட போது இப்பகுதியை ஆண்டுவந்த மன்னன் இந்த இயற்கை அழிவிலிருந்து இவ்வூரைக் காப்பாற்ற வேண்டிச் சிவபெருமானை வேண்டினான். அவனது வேண்டுதலை ஏற்றுக் கொண்ட சிவனும் தனது சூலத்தால் தரையில் குத்தி நிலத்தில் ஒரு பெரிய ஓட்டையிட்டு; வெள்ளத்தைப் பூமியில் புகுமாறு செய்தார். சிவபெருமானின் சூலத்தைச் சுற்றி வெள்ளம் சுழித்துச் சென்றதால் “சுழி” என்று பெயர் பெற்றுப் பின்னர் “திரு” எனும் அடைமொழி சேர்ந்து “திருச்சுழியல்” ஆயிற்று என் தலபுராணம் விவரிக்கிறது. மேலும் இது ரமண மகரிஷி  பிறந்த தலமும் ஆகும். இந்த ஊரின் முழுப்பெயர் திருச்சுழியல் எனவும் கூறப்படுகிறது.

இந்தக் கோவிலின் மூலவர், திருமேனி நாதர், இவர் சுழிகேசர், பிரளய விடங்கர், தனுனாதர், மணக்கோல நாதர், கல்யாண சுந்தரர், புவனேஸ்வரர் மற்றும் பூமீஸ்வரர் என்று பல பெயர்களில் அழைக்கப்பறார். அம்பாள்துணை மாலையம்மை, சகாயவல்லி, சொர்ணமாலை, முத்துமாலையுமையாள்,  மற்றும் மாணிக்கமாலை என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்.

கோவில் அமைப்பு :

கோவிலின் முன் பகுதியில் தெப்பக்குளம் அதன் எதிரே கல்மண்டபம் உட்பகுதியில் சிவன் மற்றும் அம்மனுக்கு தனி தனி சன்னதிகள் உள்ளன. இவை தவிர முருகன், விநாயகர், நடராஜர் இவர்களுக்கும் சன்னதிகள் உள்ளன. சிவன் கோயில் மேற்பகுதியில் காணப்படும் ஓவியங்கள் மிகவும் பழமையானது. மூலிகைகள் கொண்டு வரையப்பட்டுள்ளன. முகப்பு வாயில் வழியே உள்ளே துழைந்தால் விசாலமான வெளி முற்றம் காணப்படுகிறது. நேரே அம்பாள் சந்நிதி கோபுரமும், அதன் வலது பக்கம் இறைவன் சந்நிதி கோபுரமும் காணலாம். சுவாமி சந்நிதி கோபுத்திற்கு முன்னால ஒரு கற்தூண்களாலான மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்திற்கு முன் இவ்வாலயத்தின் ஒரு தீர்த்தமான கவ்வைக்கடல் (ஒலிப்புணரி) உள்ளது. முதல் மண்டப வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நாம் காண்பது கம்பத்தடி மண்டபம். இதில் பலிபீடம், கொடிமரம் ஆகியவற்றைக் காணலாம். நவக்கிரக சந்நிதி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், விநாயகர் ஆகியோரின் சந்நிதிகளும் இங்குள்ளன. இம்மணடபம் சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதி இரண்டிற்கும் முன்னால் இணைந்து காணப்படுகிறது. இந்த கம்பத்தடி மண்டபத்திலுள்ள தூண்களில் அநேக சிற்பங்கள் காணப்படுகின்றன. ஒரு தூணில் ஆஞ்சனேயரின் சிற்பத்தையும் காணலாம்.

இம்மண்டபத்தை அடுத்துள்ளது ஏழுநிலை கோபுரம். கோபுர வாயில் வழியே உள் நுழைந்து நந்தியை வணங்கிவிட்டு சபா மண்டபம், அந்தராள மண்டபம், அர்த்த மண்டபம் ஆகியவற்றைக் கடந்து இறைவன் கருவறையை அடையலாம். இறைவன்  சுயம்புலிங்க வடிவில் சதுர ஆவுடையார் மீது கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். கருவறை அகழி அமைப்புடையது. கருவறை சுற்றுப் பிரகாரத்தில் உஷா, பிரத்யுஷா சமேத சூரியன், அறுபத்துமூவர், சந்தானாசாரியர், சப்தமாதர்கள் சந்நிதிகள் உள்ளன. மேலும் தென்மேற்கில் விநாயகர், மேற்கில் சோமாஸ்கந்தர், காசி விசுவநாதர், விசாலாட்சி, சுழிகைக் கோவிந்தர், வடமேற்கில் முருகன் ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். கருவறை சுற்றுச் சுவரில் கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், துர்க்கை, பிரம்மா ஆகியோர் உள்ளனர். சபா மண்டபத்தில் நடராசர் சந்நிதி உள்ளது. இங்கு நடராசர் மூலவராகச் சிலாரூபத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார். அருகே நடராசர், சிவகாமி, பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகியோரின் உற்சவ மூர்த்திகள் தரிசனம்.

1,800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சுவாமி சன்னிதியில் உள்ள ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் காணப்படுகிறது. இங்கு அருளும் அம்பாள், மதுரை மீனாட்சி அம்மனைப் போலவே காட்சி தருகிறார். அம்பாள் திரிபங்கி லட்சண அமைப்பில், இடுப்பு, கழுத்து, இடது கால் போன்றவற்றை சற்றே சாய்த்து நடன அமைப்பில் தரிசனம் தருகிறாள். அம்பாள் சன்னிதிக்குள், அம்பாளுக்கு எதிரே ஸ்ரீசக்கரம் வைக்கப்பட்டுள்ளது.
இதை மையப்படுத்தி திருச்சுழியை சுற்றி எட்டு இடங்களில் அஷ்ட லிங்கங்கள் உள்ளன.

இத்தல இறைவனை சிவராத்திரி அன்று, ஒரு வில்வ இலை கொண்டு அர்ச்சித்தால், உலகம் முழுவதும் உள்ள அனைத்து சிவாலயங்களுக்கும் சென்று வழிபட்ட, அர்ச்சனை செய்த பலன்
இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அவர் இங்கு திருமணக் கோலத்தில் அருள்கிறார். எனவே இங்கு வந்து திருமணம் செய்து கொள்வதை மக்கள் பெரும் பாக்கிஎல்லா இடங்களிலும் செய்த பாவங்கள் இந்த ஆலயத்தில் வழிபட்டால் நீங்கும். ஆனால் இந்த ஊரில் செய்த பாவம், இங்கின்றி வேறு எங்கும் தீராது. இறந்தவர்களுக்கு அர்ச்சனை செய்து மோட்ச தீபம் ஏற்றும் வழக்கம் இந்த ஆலயத்தில் இருக்கும் சிறப்பாகும். அப்படி இறந்தவர்களுக்காக அர்ச்சனை செய்து மோட்ச தீபம் ஏற்றினால், இறந்தவர்களின் பாவங்கள் களையப்பட்டு, அவா்கள் 21 பிறவியைக் கடந்து சிவகதி அடைவார்கள்.

இந்தக் கோவிலில் நவராத்திரி, ஆவணி மூலம், சித்திரை விஷு, கார்த்திகை சோமவாரம், ஆடித் தபசு, தைப்பூசம், பங்குனி பிரம்மோற்சவம், தேரோட்டம் உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விழா நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து  வழிபட்டுச் செல்கிறனர்.

திருச்சுழி திருமேனிநாதர் கோவிலுக்கு எப்படிப் போவது?

மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை சென்று அங்கிருந்து 15 கி.மி. தொலைவில் உள்ளது. மதுரை, அருப்புக்கோட்டையில் இருந்து நேரடி பேருந்து வசதிகள் இருக்கின்றன. மதுரையில் இருந்து காரியாபட்டி வரை நகரப் பேருந்தில் சென்று, அங்கிருந்து மீண்டும் நகரப் பேருந்தில் திருச்சுழி வரை செல்லலாம். மதுரை – காரியாபட்டி – திருச்சுழி தான் நேர் வழி. மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை சென்று பின் திருச்சுழி செல்வது சுற்று வழியாகும்.