Ashta Aishwarya Program: 9-Month Program to Manifest Eight Types of Wealth Join Now
கையில் கருப்பு கயிறு கட்டுவதன் காரணம்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கையில் கருப்பு கயிறு கட்டுவதன் காரணம்

Posted DateJuly 30, 2024

விஞ்ஞானம் வானளவில் வளர்ந்தாலும் இன்றும் நம்மிடையே முன்னோர்கள் விட்டுச் சென்ற பழக்க வழக்கங்கள் புழக்கத்தில் உள்ளன. அவற்றுள் ஒன்று தான் கையில் கயிறு கட்டும் வழக்கம். இன்றைய நவீன உலகில் ஆண் பெண் என இருவரும் கையில் விதவிதமாக கயிறு கட்டி இருப்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

கண் திருஷ்டி நீக்கும் கயிறு:

அது மட்டும் அன்றி தற்போதைய  ஆண்களும் பெண்களும் தங்கள் காலிலும்  கருப்பு கயிறு கட்டுவது பிரபலம் ஆகி வருகிறது. வெறும் கயிறு மட்டும் அல்லாமல், அத்துடன் வேறு மணிகள் , ரத்தினக் கற்கள்,  முத்து என சில லாக்கெட்டுகளையும் இணைத்து போடுகிறார்கள்.  இது தற்போதைய இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் மத்தியில் ட்ரெண்ட் ஆகி வந்தாலும் பழங்காலத்தில் இருந்தே நமது முன்னோர்களால் பின்பற்றப்படும் சில விஷயங்களில் ஒன்று. நமது முன்னோர்கள் எதையும் காரணம் இன்றி செய்ததில்லை.கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது என்பார்கள். நமது முன்னோர்கள் பழங்காலத்தில் யாருக்காவது உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்து வந்தாலோ, அல்லது விபத்துக்கள் ஏற்பட்டாலோ கருப்பு கயிறு அல்லது தலை முடியினால்  உருவாக்கப்பட்ட கயிறை கட்டுவார்கள். ஏனென்றால், அது கண் திருஷ்டியை நீக்கிவிடும் என்பது ஐதீகம்.இவ்வாறு கண் திருஷ்டியை போக்க உருவாக்கப் பட்டது தான் கயிறு கட்டும் பழக்கம்.

கருப்பு கயிறு:

இப்பொழுதெல்லாம் கோவில்களில் கூட இந்த கயிற்றை பூஜை செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கிறார்கள். ஆனால் இந்தக் கயிறுகள் பச்சை, சிகப்பு என பல வண்ணங்களில் கிடைக்கும். என்றாலும்  கண் திருஷ்டியை போக்க பெரும்பாலோனர் கட்டுவது கறுப்பு கயிறு தான். எனவே பெரும்பாலும் திருஷ்டி தோஷங்களைப் போக்க கருப்பு கயிறு கட்டப்படுகிறது. என்றாலும் ஜோதிட ரீதியாக இதற்கு சில காரணங்களையும் சொல்கிறார்கள். கறுப்பு கயிறை காலில் கட்டுவதன் மூலம் சனி கிரகத்தால் ஏற்படும் பாதிப்புகள்  நீங்குவதாக கருதப்படுகிறது. ஒரு முறை கயிற்றை கட்டினால் அதன் ஆற்றல்  48 நாட்கள் வரை தான் இருக்கும். எனவே 48 நாட்களுக்கு ஒரு முறை இந்தக் கயிற்றை மாற்ற வேண்டும்.

கருப்பு கயிறு கட்டிக் கொள்வதற்கான காரணங்கள் :

கண் திருஷ்டி தாக்காமல் காக்கும்

எதிர்மறை சக்கதிகளை ஈர்த்து, தீய சக்திகளிடம் இருந்து நம்மை காப்பாற்றும் என நம்பபடுகிறது.

சனி பகவானுடன் தொடர்புடையது என ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது. இதனால் கருப்புக் கயிறு கட்டிக் கொள்வதால் சனியின் கெட்ட பார்வை, அதனால் ஏற்படும் தோஷம் மற்றும் தீய தாக்கங்களில்  இருந்து விடுபட முடியும்.