Skanda Shasti 2025: Invoke Warrior-God Muruga during the Six Power Days for Victory & Transformation Blessings Join Now
துன்பங்கள் துயரங்கள் தீர விருட்ச வழிபாடு | Thunbangal Thurangal Neenga virutcha Vazhipadu in Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

துன்பங்கள் துயரங்கள் தீர விருட்ச வழிபாடு

Posted DateNovember 23, 2023

ஒரு மனிதன் வாழ்க்கையில் வெற்றி பெற தேவையானது லட்சுமி கடாட்சம். லட்சுமி கடாட்சம் என்பது பணம் அல்லது செல்வத்தை மட்டும் குறிப்பது அல்ல. பதினாறு பேறும்  பெற்று பெரு வாழ்வு வாழ்வதையே லட்சுமி கடாட்சம் குறிக்கும்.  இந்த கலியுகத்தில் அத்தகைய வாழ்வு கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாக உள்ளது எனலாம். குறைந்த பட்சம் தரித்திர நிலை இல்லாமல் இருக்க வேண்டும் என்பது அனைவரின் ஆசை ஆகும். இந்த தரித்திர நிலையானது துன்பத்தையும் துயரத்தையும் அளிக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள்.

உடல் சோர்வு, பிரச்சினைகள், நோய்கள் தொழிலில் நஷ்டம், வேலையின்மை, குழந்தையின்மை  என ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான துன்பங்கள் அல்லது பிரச்சினைகள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலை நீங்க சிவன் வழிபாடு உகந்தது. விருட்சங்கள் தெய்வீக அம்சங்கள் வாய்ந்தவை. துளசி செடி, சந்தன மரம் விஷ்ணு அம்சமாக கருதப்படுகிறது. சிவாலயத்தில் இருக்கும் ஸ்தல விருட்ச வழிபாடும் மிகவும் சிறந்தது. அந்த வழிபாடு வன்னி மர வழிபாடு ஆகும் ஒவ்வொரு சிவாலயத்திலும் கண்டிப்பாக வன்னி மரம் காணப்படும். பழமை வாய்ந்த சிவாலயங்கள் அனைத்திலும் வன்னி மரம் காணப்படும்.    

இந்த வழிபாட்டை நீங்கள் சனிக்கிழமையன்று மேற்கொள்ள வேண்டும்.எட்டு சனிக்கிழமைகள் இந்த வழிபாட்டை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது சனிக்கிழமை அன்று குளித்து முடித்து சிவாலயம் செல்ல வேண்டும். அங்கு இருக்கும் வன்னி மரத்திற்கு விளக்கு ஏற்ற வேண்டும். அகல் விளக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். கருப்பு திரி போட வேண்டும். விளக்கை ஏற்றவேண்டும்.பிறகு மனதார வழிபாடு மேற்கொள்ளுங்கள். அருகே அமர்ந்து சிறிது நேரம் உங்களுடைய பிரச்சனைகளை மனதார சொல்லி வேண்டிய பிறகு 21 முறை மரத்தை வலம் வர வேண்டும். அதன் பிறகு சிவபெருமானை தரிசித்து அவரிடமும் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆலயத்தை வலம் வந்த பிறகு சிறிது நேரம் ஆலயத்தில் அமர்ந்திருந்து வீட்டிற்கு வந்து விடுங்கள். இந்த வழிபாட்டை நீங்கள் தொடர்ந்து எட்டு வாரங்கள் செய்து வரும் போது இதுவரை இருந்த சிக்கல்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக தீரும்.

எட்டு சனிக்கிழமைகள் விளக்கு ஏற்றி வர வர உங்கள் வீட்டில் தரித்திரம் விலகி விடிவு உண்டாகும். செல்வ வளம் பெருகும். உங்கள் துன்பங்கள் மற்றும் துயரங்கள் நீங்கும். மேலே கூறிய விருட்ச வழிபாட்டை நீங்கள் செய்து வந்தால் உங்கள் வாழ்வில் படிபடியாக லட்சுமி கடாட்சம் கூடுவதை கண்கூடாக நீங்கள் உணர்வீர்கள்.