Skanda Shasti 2025: Invoke Warrior-God Muruga during the Six Power Days for Victory & Transformation Blessings Join Now
திருநாகேஸ்வரம் கோவில் | Thirunageswaram Temple
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

திருநாகேஸ்வரம் கோவில்

Posted DateNovember 3, 2023

திருநாகேஸ்வரம் கோவில் பற்றிய அறிமுகம்:

திருநாகேஸ்வரம் கோவில் கும்பகோணம் – காரைக்கால் பேருந்து வழித்தடத்தில் அமைந்துள்ள ராகு பகவானுக்குரிய ஸ்தலமாகும். கும்பகோணத்தில் இருந்து வெறும் 5 கி.மீ. தூரத்தில் அமைத்துள்ளது. நாகேஸ்வரர், நாகநாதர் மற்றும் ஸ்வயம்பு வடிவில் ஷண்பகாரண்யேஸ்வரர் ஆகியோர் மூலஸ்தானத்தில் உள்ளனர். அவருடைய துணைவி இக்கோயிலில் இருந்து கிரிகுஜாம்பிகை என்ற பெயரில் அருள்பாலிக்கிறாள். தேவி, லக்ஷ்மி தேவி மற்றும் சரஸ்வதி தேவியுடன் வீற்றிருக்கிறார். புனித மரம் செண்பக மரம். தீர்த்தம் (புனித நீர்) சூரிய புஷ்கரிணி என்று அழைக்கப்படுகிறது. ஆதிசேஷன், தக்ஷன், கார்கோடகன் ஆகிய தெய்வீக நாகங்கள் சிவபெருமானை வழிபட்ட தலம் என்பதால் இது திருநாகேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது. சைவ மும்மூர்த்திகள் இக்கோயிலின் இறைவனைப் போற்றிப் பல பாடல்களைப் பாடியுள்ளனர். ராகு, தனது இரு மனைவிகளான நாகவல்லி மற்றும் நாககன்னியுடன், வெளி மாடவீதியில் ஒரு சிறிய தனி சன்னதியில் இருக்கிறார்.

திருநாகேஸ்வரம் கோவில் ஸ்தல வரலாறு

இந்த கோவிலுக்கு குறிப்பிடத்தக்க புராணக்கதைகள் உள்ளன. பாதாள லோகத்திலிருந்து நாகங்களின் தலைவனான  ஆதிசேஷன்  ஒருமுறை சிவபெருமானை வேண்டித் தொழுவதற்காக இந்த சண்பகவனம் வந்தான். இங்கு ஒரு தீர்த்தம் ஏற்படுத்தி, அதன் கரையில் அமர்ந்து கடும் தவம் செய்தான். ஆதிசேஷனின் இடையறாத தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்கு காட்சியளித்தார். எனவே நாகராஜனுக்கு அருளிய மூலவர் நாகநாதசுவாமி என அழைக்கப்பட்டார். அவன் உருவாக்கிய தீர்த்தம் நாகதீர்த்தம் ஆனது. நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்து கொள்ளலாம் இத்திருக்கோயிலில், கணபதி மற்றும் நந்தி பகவான் கடும் தவம் செய்து கணங்களின் தலைவன் என்ற அந்தஸ்தையும் பெற்றனர். இந்திரன் கிரிகுஜாம்பாள் தேவியை புனுகு, மற்றும் பலவித வாசனை திரவியங்களால் வணங்கி, தனக்கு இடையூறாக இருந்த துர்நாற்றத்தில் இருந்து விடுபட்டான். கௌதமர், வசிஷ்டர், பராசரர், மன்னன் நளன், பாண்டவர்கள், பகீரதன் போன்ற பல துறவிகள் நாகநாத சுவாமியை வணங்கி நிவாரணம் பெற்றனர்.

திருநாகேஸ்வரம் கோயிலின் கட்டிடக்கலை

9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோயில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. பின்னர், 17 ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால் பல மண்டபங்கள், தாழ்வாரங்கள் மற்றும் சிறப்பு கோபுரங்கள் சேர்க்கப்பட்டன. இக்கோயிலின் தனிச் சிறப்பு என்னவென்றால், இறைவன் மனிதத் தலையுடன் காட்சியளிப்பார்; பொதுவாக அவர் ஒரு பாம்பின் தலையுடன் தோன்றுகிறார். இந்த கோவில் திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. நான்கு திசைகளிலும் நான்கு கோபுர வாயில்கள் அழகிய சிற்பங்களுடன் உள்ளன. கோயில் மதில் சுவர்களை அடுத்து பெரிய பிரகாரம் உள்ளது.  சிக்கலான சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட தூண்களுடன் கூடிய நீண்ட நடைபாதைகளை இந்த ஆலயம் கொண்டுள்ளது. .

திருநாகேஸ்வரம் கோயிலுடன் தொடர்புடைய திருவிழாக்கள்

ராகு சிலைக்கு பால் அபிஷேகம் செய்யும் போது பால் நீல நிறமாக மாறும். ராகு காலத்தில் நடைபெறும் அபிஷேகம் இக்கோயிலில் பின்பற்றப்படும் முக்கிய சடங்குகளில் ஒன்றாகும். ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் சித்திரை பிரம்மோத்ஸவம் இங்கு கொண்டாடப்படும் முக்கிய திருவிழா. திருவிழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஆடி பூரம், மாசி மகம், தை பூசம் தெப்போத்சவம் ஆகியவையும் இங்கு கொண்டாடப்படுகின்றன.

திருநாகேஸ்வரம் கோயிலில் வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள்

இந்த கோவிலில் ராகுவை வழிபட்டால் இந்த பாம்பு கிரகத்தின் தோஷங்கள் குறையும். திருமணம் செய்வதில் தாமதம், குழப்பமான தாம்பத்திய வாழ்க்கை, குழந்தை இல்லாமை, கால சர்ப்ப தோஷம் மற்றும் சர்ப்ப தோஷம் போன்வற்றிற்கு பரிகாரம் பெற மக்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

திருநாகேஸ்வரம் கோயிலை அடையும் வழி

விமானம் மூலம்

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் இந்தக் கோயிலுக்கு அருகில் உள்ள விமான நிலையம் ஆகும்.

ரயில் மூலம்

தஞ்சை ரயில் சந்திப்பு அருகில் உள்ள ரயில் நிலையம் ஆகும், இங்கிருந்து ஏராளமான உள்ளூர் போக்குவரத்து வசதிகள் உண்டு.

சாலை வழியாக

இக்கோயிலில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள கும்பகோணத்திலிருந்து பேருந்துகள் உள்ளன. உள்ளூர் போக்குவரத்தில் கோவிலுக்கு மிக அருகில் செல்லலாம்.