தமிழ் மாதம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்ததாகும். அந்த வகையில் நாளை பிறக்கப் போகும் மாசி மாதத்திற்கும் பல சிறப்புகள் உண்டு. மாசி மக நட்சத்திரத் திருநாளில்தான் திருமால், மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தார் என்கிறது புராணம். மாசி மாதம், அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கும், அனைத்து விதமான நலன்களை பெறுவதற்கும் உகந்த மாதமாகும். ஆழ்வார்களில் ஒருவரான, குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில்தான் அவதரித்தார். பொதுவாக அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்வது வழக்கம். ஆனால், கிரஹண காலம் தவிர்த்து, பௌர்ணமி நாளில் தர்ப்பணம் செய்வது என்பது மாசி மாதத்தில் மட்டுமே.மாசி மாதம், புதிய கலைகள் கற்க, மந்திர உபதேசம் பெற, புனித நீராட, முன்னோர் தர்ப்பணம் கொடுக்க ஏற்றதாகும். மாசி மாதம், தாலிக் கயிற்றினை புதிதாக மாற்றிக் கொள்ளும் மாதம்.
இந்தியாவில் உள்ள அனைத்து புண்ணியத் தீர்த்தங்களிலும், சமுத்திரக் கரையிலும், புனித நதிகளிலும் மாசி மாதத்தில் அமிர்தம் நிறைந்திருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இதன் காரணமாகவே இந்த மாதத்தில் நீர்நிலைகளில் புனித நீராடுவதை இந்துக்கள் பழக்கமாகக் கொண்டுள்ளனர். வட இந்தியாவில் கும்பமேளா என்ற பெயரில் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். கும்ப மாதத்தில் நடைபெறும் விழா என்பதால் இது கும்பமேளா. மாசி மாதம் மகம் நட்சத்திரம் சேர்ந்து வரும் நாளை, மாசி மகம் என்று கூறுவார்கள். மாசி மகம் 12.03.2025 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிவன் வழிபாடு செய்வது, பெருமாள் வழிபாடு செய்வது, முன்னோர்களை வழிபாடு செய்வது, புனித நீராடுவது போன்றவை விசேஷமான வழிபாட்டு முறைகளாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. தற்போது கும்பமேளாவும் நடந்து கொண்டிருக்கிறது. பல கோடி கணக்கான மக்கள், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி தங்களுடைய பாவங்களை எல்லாம் கழித்து வருகிறார்கள். அங்கு சென்று நீராட வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும் என்றாலும் அனைவராலும் செல்ல முடியுமா என்றால் இல்லை. வீட்டில் இருந்தபடியே புனித நதியில் நீராட ஒரு பரிகாரம் உள்ளது. அதனைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம் வாருங்கள். இந்த பரிகாரம் செய்வதன் மூலம் நீங்களும் புனித நீரில் நீராடும் பாக்கியத்தைப் பெறலாம். இந்த பரிகாரம் செய்து நீராடுவதன் மூலம் கங்கை, யமுனை, சரஸ்வதி என மூன்று நதிகள் சங்கமிக்கும் நதியில் நீராடிய பலன் கிட்டும்.
நாளை மாசி மாதம் மகம் நட்சத்திரம் வருகிறது. மற்றும் அடுத்த மாதம் பன்னிரண்டாம் தேதியும் மகம் நட்சத்திரம் வருகிறது. என்றாலும் இபோழுது கும்ப மேளா நடப்பதால் நாளை வரும் மகம் நட்சத்திர நாளில் நீங்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரத்தை சூரிய உதயம் முன்பே செய்வது நல்லது. இன்று இரவு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு சொம்பு தண்ணீர் வருமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் அனைவரும் புனித நீரில் நீராடிய பலன் கிட்டும். அந்த நீரில் மஞ்சள் பொடி அருகம்புல் பொடி, கிராம்பு பொடி, ஏலக்காய், இரண்டு துளசி இலைகள், கொஞ்சம் உதிரி புஷ்பங்களை போட்டுக் கொள்ளுங்கள். அதனை பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். நாளை காலை பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு தூப தீபம் காட்டி மூன்று நதிகளின் பேர் சொல்லி வணங்குங்கள்.
கங்கே ச யமுநே சைவ கோதாவரி ஸரஸ்வதி.
நர்மதே சிந்து காவேரி ஜலேயஸ்மின் சன்னிதின் குரு
இந்த பிரார்த்தனையை ஜெபிப்பது புனித நதிகளின் சுத்திகரிப்பு சாரத்தை அழைக்கிறது. மனம், உடல் மற்றும் ஆன்மாவை சுத்தப்படுத்துகிறது. இது தெய்வீக அருளையும் ஆசீர்வாதங்களையும் குறிக்கும் வகையில், போற்றப்படும் நதிகளுடன் ஆழமான ஆன்மீக தொடர்பை வளர்க்கிறது.இந்த பிரார்த்தனையை ஜெபிப்பது அமைதி, நல்லிணக்கம் மற்றும் இயற்கையின் மீதான பயபக்தி உணர்வை ஏற்படுத்துகிறது, முழுமையான வாழ்க்கை முறையை வளர்க்கிறது. இந்த காலை நீராட்டு ஜெபத்தை உச்சரிப்பது உடல் உடலை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல், இயற்கையின் மீதான பயபக்தியையும் வளர்த்து, ஆன்மீக வளர்ச்சியை வளர்க்கிறது.
இந்த சுலோகம் ஜெபித்து வணங்குவதன் மூலம் மூன்று நதிகளின் தெய்வங்களும் உங்கள் முன்பு இருக்கும் தீர்த்தத்தில் வந்து ஐக்கியமாகி விடுவார்கள். பிறகு குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். சிவபெருமானையும் விஷ்ணு பகவானையும், பிரார்த்தனை செய்துகொண்டு, ஒரே ஒரு நிமிடம் கண்களை மூடி கும்பமேளாவில் நடக்கும் திருவிழாவை உங்கள் மன கண்களில் காணுங்கள். நீங்களும் கும்ப மேளாவுக்கு சென்றதாக, மானசீகமாக கற்பனை செய்து கொண்டு, இந்த தீர்த்தத்தை கொண்டு போய் குளியல் அறையில் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு நீங்கள் குளிப்பதற்கு பயன்படுத்தும் தண்ணீர் அல்லது வெந்நீர் எதுவாக இருந்தாலும் அதில் இந்த நீரை ஒரு சொம்பு ஊற்றிக் கலக்கிக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை எடுத்து உங்களுடைய தலையில் ஊற்றிக் கொண்டு வழக்கம் போல குளிக்கலாம். வீட்டில் உள்ள அனைவரும் இவ்வாறே குளிக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் திரிவேணி சங்கமத்தில் குளித்த பலனைப் பெறலாம்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025