தைப்பூசம் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தைப்பூசம் விழா ஆண்டுதோறும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம்.) கொண்டாடப்படுக்கிறது. பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நாளில் தான் முருகப் பெருமான் ஞானபழத்திற்கு ஏமாந்து தற்போதைய தமிழகத்தில் உள்ள பழனி மலையில் ஆண்டி கோலத்தில் குடி கொண்ட நாளாக கடைப்பிடிக்கபடுகிறது. இருபத்தியேழு நட்சத்திரங்களின் வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா பூச நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும். நேரம் நடத்தப்படுகிறது.
முருகப் பெருமானுக்கு சிறப்பு செய்யும் வகையில் பல விழாக்கள் கொண்டாடப்பட்டாலும் அவற்றுள் மிகவும் சிறப்பானதாக தைப்பூசம் கருதப்படுகிறது. தைப் பூசம் விழாவை இந்துக்கள் முக்கியமான காரணத்திற்காக கொண்டாடுகிறார்கள். முருகப் பெருமான் தனது தாயிடம் இருந்து சக்தி வேலினைப் பெற்ற தினம் தை பூசம் ஆகும். தைப் பூசம் என்பது முக்கியமாக முருகப் பெருமானை சார்ந்த விழா ஆகும். முருகனின் வேலின் சிறப்பை கூறும் தினமாகவே தைபூசம் கொண்டாடப்படுகிறது. தை பூச தினத்தில் முருகனை வழிபட்டு, பக்தர்கள் காவடி எடுத்து விரதத்தை மேற்கொள்கிறார்கள்.தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது. சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.
இந்த நாளில் முருகப் பெருமானுக்கு விரதம் இருந்து பாதயாத்திரை செல்வது, காவடி எடுப்பது, அலகு குத்துவது, பால்குடம் எடுப்பது, அன்னதானம் செய்வது என பல விதங்களில் பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவார்கள். சஷ்டி விரதம் போல இந்த நாளும் சிறப்பு விரத நாளாக கொண்டாடப்படுகிறது இந்த விரதம் மேற்கொள்ள ஒரு சிலர் ஒரு மண்டலம் விரதம் இருப்பார்கள். ஒரு சிலர் இருபத்தியொரு நாட்கள் விரதம் இருப்பார்கள். அந்த வகையில் முருகப் பெருமானுக்கு என்றில் இருந்து விரதம் இருக்கலாம் என்பதை இந்தப் பதிவில் மூலம் அறிந்து கொள்வோம் வாருங்கள். 2025 ஆம் வருட தைப்பூசம், பிப்ரவரி 11ஆம் தேதி வருகிறது. தை பூசம் விரதம் 2024 டிசம்பர் 25ஆம் தேதி புதன்கிழமை துவங்கினால், தைப்பூசம் அன்று 48 நாட்கள் விரதம் இருந்த பலனை நீங்கள் பெறுவீர்கள். 48 நாள் விரதம் இருக்க முடியாது என்று நினைப்பவர்கள் 21 நாள் விரதம் இருக்க முடியும் என்றால் வரும் ஜனவரி 22-ம் தேதி விரதத்தை துவங்கினால், தைப்பூசம் முடியும்போது 21 நாட்கள் கணக்கு வரும்.
தினமும் காலையில் எழுந்து தலைக்கு குளித்து, வீட்டில் விளக்கு ஏற்றி விட்டு முருகன் கோவிலுக்கு சென்று விரதம் இருந்தால் தான் பலன் கிடைக்குமா என்று கேட்டால், நிச்சயம் கிடையாது. மேலே சொன்னவற்றை உங்களால் முடியும் என்றால் செய்யலாம். ஆனால் இன்றைய காலகட்டம் எல்லாருக்கும் அவசர யுகமாக இருக்கிறது. தினமும் அலுவலகம் செல்ல வேண்டும். குழந்தைகளை வளர்க்க வேண்டும். அவர்களுக்கு வேண்டியதை செய்ய வேண்டும். வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். அதற்கே நேரம் சரியாகி விடும் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். மேலும் ஒரு சிலருக்கு விரதம் இருக்க உடல் ஆரோக்கியம் ஒத்துழைக்காமல் போகலாம். இவர்கள் என்ன செய்வது? எப்படி விரதம் இருப்பது என்று யோசிக்கலாம். வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். உடம்புக்கு மட்டும் குளித்தால் போதும். வாரத்தில் ஒரு நாள் செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை தலைக்கு குளித்தால் போதும். அசைவம் சாப்பிடக்கூடாது. வீட்டில் சண்டை சச்சரவுகள் கூடாது. மனதில் வஞ்சம் இருக்கக்கூடாது. அடுத்தவர்கள் மீது பொறாமை குணத்தை கொள்ளக்கூடாது. பேச்சில் சாந்தம் இருக்க வேண்டும். தினமும் குளித்து முடித்துவிட்டு ‘ஓம் சரவணபவ’ என்று சொல்லி திருநீறு பூசி உங்களுடைய அன்றாட வேலையை துவங்குங்கள். உங்களுடைய விரதமும் துவங்கிவிடும். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது முருகனை கோவிலுக்கு சென்று வாருங்கள். வேலையில்லாமல் ஓய்வு எடுக்கும் நேரத்தில் முருகா முருகா என்று அவன் நாமத்தை சொல்லுங்கள். அவ்வளவுதான். தினமும் வீட்டில் இருக்கும் முருகப்பெருமானை பார்த்தாலே போதும். அவனுக்கு ஒரு பூ தினமும் முடிந்தால் வையுங்கள். இவ்வளவுதான் வழிபாடு. இவ்வளவுதான் விரதம். இந்த 48 நாட்கள் முருகனை நினைத்து நீங்கள் விரதம் இருந்து, இந்த தைப்பூசத்திற்கு முருகப்பெருமானை சென்று தரிசனம் செய்து வந்தால், வாழ்வில் இருக்கும் மீத நாட்களை பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். அந்த முருகப்பெருமானின் அருள் உங்களை எப்பொழுதும் காக்கும்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025