1) ஆஞ்சநேயர் சிவபெருமானின் அம்சம் ஆவார்.
2) அவருக்கு சிரஞ்சீவி என்ற பெயர் உண்டு. சிரஞ்சீவி என்றால் என்றும் அழிவில்லாதவர் என்று பொருள்.
3) இவரை சிறிய திருவடி என்று அழைப்பார்கள்
4) சொல்லின் செல்வன் என்ற பட்டம் இவருக்கு உண்டு.
5) ஆஞ்சநேயர் என்றால் பளிங்கு போல் களங்கமற்ற மனம் உடையவன் என்று பொருள்.

6) ஆஞ்சநேயருக்கு ஐந்து சகோதரர்கள் உள்ளனர்கள்
7) அவருக்கு ஒரு மகன் இருப்பதாகவும் புராணங்கள் சொல்கின்றன. அனுமானின் மகனின் பெயர் மகர்தவஜா.
8) ஆஞ்சநேயர் வாலில் நவக்கிரகங்கள் இருப்பதாக ஒரு ஐதிகம் உள்ளது.
9) அனுமன் ஒரு முறை சூரியனை பழுத்த மாம்பழம் என்று எண்ணி அதை பிடிக்க முற்பட்டார். உடனே இந்திர பகவான் தனது வஜ்ர ஆயுதத்தால் அனுமனை தடுத்து விட்டார். இதனால் அனுமனின் தாடை காயம் பட்டு சீரற்ற அமைப்பை பெற்றது.
10) அனுமன் ராமனின் நலம் கருதி செந்தூரத்தை தன் உடல் முழுவதும் பூசிக் கொண்டார்
October 27, 2025
September 19, 2025
September 17, 2025