Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2024 | Tamil Puthandu Palangal 2024
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2024 | Tamil New Year Rasi Palan 2024

Posted DateApril 10, 2024

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2024 : மேஷம்

இந்த தமிழ்ப் புத்தாண்டு, மேஷ ராசிக்கு அருமையான ஆண்டாக இருக்கும். இரண்டாம் இடத்தில் குருவின் சஞ்சாரம் காரணமாக வாக்கு ஸ்தானம் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வு கிட்டும். புது இடங்களுக்கு செல்வீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும். வெளிநாட்டில் குடியேறும் வாய்ப்பு கிட்டும். இந்த ஆண்டு உங்களுக்கு யோகம் அளிக்கும். புது இடத்தில் சென்று உங்கள் வாழ்வை மேம்படுத்திக் கொள்வீர்கள். பழைய வழக்குகள் மற்றும் பிரச்சினைகளில் இருந்து தீர்வு கிட்டும். நிம்மதி கிட்டும் பணப்பிரச்சினை, குடும்பப்பிரச்சினகள் ஜூலை மாதத்திற்குப் பிறகு தீரும். ஜூலை முதல் ஜனவரி வரை நல்ல நேரம் இருக்கும். முருகர் வழிபாடு. சிவனுக்கு விரதம் இருப்பதன் மூலம் பெரிய மாற்றம் கிட்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வயதானவர்கள் ஜூலை வரை கவனமாக இருக்க வேண்டும். வேலை வாய்ப்பில் கவனமாக இருக்க வேண்டும். வேலை அளிக்கும் நிறுவனத்தை ஆராய்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும். உடல் நிலையில் கவனம் தேவை. வாகனம் ஓட்டும் போது கவனம் வேண்டும். மேலும் பலன்கள் அறிய இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.

Tamil New Year 2024

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2024 :ரிஷபம்

இந்த தமிழ்ப் புத்தாண்டில், ரிஷப ராசி அன்பர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மனதில் கவலைகள் இருக்கும். சஞ்சலம் இருக்கும். வேலையில் சில சஞ்சலம் இருக்கும். மனதில் வருத்தம் இருக்கும். அரசியலில் பெரிய குழப்பங்கள் இருக்கும். வர்த்தகம் செய்பவர்கள் மாறுதலை ஏற்றுக் கொள்ளவேண்டும். ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்கள், டைமண்ட், கோல்ட் வியாபரிகள் கவனமாக இருக்க வேண்டும். திருமண முயற்சிகளை தள்ளிப் போடவும். திருப்பதி சென்று வந்தால் தடைகள் நீங்கும். குருவிற்கு பரிகாரம் செய்வது நல்லது. தூக்கம் கெடலாம். ஒன்பதாம் மாதத்திற்குப் பிறகு பெரிய மாற்றங்கள் இருக்கும். வேலையில் மாற்றும் வந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். சின்னச் சின்ன அசதிகள் ஏற்படும். இறைவழிபாடு மேற்கொள்ளுங்கள். யோகா மற்றும் தியானம் மேற்கொள்ளுங்கள். ரிஷப ராசி மாணவர்கள் மருத்துவம் கெமிக்கல், ஆடிட்டிங் போன்ற துறைகளை மேற்கொள்ளலாம். தொழில் நுட்ப துறைகளையும் மேற்கொள்ளலாம். ஒன்பதாம் மாதத்திற்குப் பிறகு வெளி நாடு செல்லலாம். மேலும் பலன்கள் அறிய இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2024 : மிதுனம்

இந்த தமிழ்ப் புத்தாண்டில் மிதுன ராசி அன்பர்களுக்கு நல்ல வழிகள் வரும். நீங்கள் வீடு வாங்கலாம். வேலையில் சில பிரச்சினைகள் வரும். முதல் இரண்டு மாதம் நல்ல பலன்கள் கிட்டாது. குரு மாற்றத்திற்குப் பிறகு, நிலைமை சீராகும். மே மாதத்திற்கு பிறகு வேலை மாற்றம் வரும். ஒன்பதாம் மாதம் வரை பெரிய மாற்றம் வரும். ஒன்பதாம் மாதத்தில் இருந்து பதினொன்றாம் மாதம் வரை மாற்றம் குறைவாக இருக்கும். கலை மற்றும் வர்த்தக துறையில் இருப்பவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். ஐடி துறையில் இருப்பவர்களுக்கு மாற்றம் வரும். கெமிக்கல் தொழில் சார்ந்த வேலை சிறப்பாக இருக்கும். மருத்துவர்களுக்கு சிறப்பான நேரம். மிதுன ராசி அன்பர்களுக்கு மே மாதத்திற்கு பிறகு சிறப்பாக இருக்கும். குல தெய்வம் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். முருகர் வழிபாடு மூலம் வேலையில் இருக்கும் பிரச்சினைகள் தீரும். மே மாதம் வரை குழப்பங்கள், சஞ்சலங்கள் இருக்கும். பொறுமை தேவை. பதினொன்றாம் மாதத்திற்குப் பிறகு சொத்துப் பிரச்சினை தீரும். மேலும் பலன்கள் அறிய இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2024 : கடகம்

இந்த தமிழ்ப் புத்தாண்டில் கடக ராசி அன்பர்களுக்கு யோகம் கிட்டும். லாப ஸ்தானத்தில் குரு இருப்பது பல நன்மைகளை பெற்றுத் தரும். புது வீடு அமையும். புது தொழில் அமையும். தொழிலில் நல்ல யோகம் வரும். வியாபாரம் மூலம் பண வரவு இருக்கும். நாலா பக்கங்களில் இருந்தும் பணம் வரும். செலவுகளும் இருக்கும். டெக்ஸ்டைல்ஸ், தொழில் செய்பவர்கள், அரசியலில் இருப்பவர்கள் வெற்றி காண்பார்கள். ஒன்பதாம் மாதம் வரை யோகம் இருக்கும். அதன் பிறகு இரண்டாம் மாதம் வரை மாற்றம் குறைவாக இருக்கும். குருவை வழிபாடு செய்வதன் மூலம் நல்ல பலன் கிட்டும். வெளி நாடு செல்லும் வாய்ப்பு கிட்டும். வெளியூரில் வேலை கிட்டும். நகராத காரியங்கள் நடக்கும். எதிலும் வெற்றியை காணலாம். இடம் வாங்கலாம். அதிக வெற்றிகளைப் பெறுவீர்கள். குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளுங்கள். அம்பாளை வணங்க வேண்டும். அது நல்ல யோகத்தை அளிக்கும். திருச்செந்தூர் செல்வதன் மூலம் கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். பண வரவு வரும். தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். நல்ல பலன் கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும்.

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2024 : சிம்மம்

இந்த தமிழ்ப் புத்தாண்டு சிம்ம ராசி அன்பர்களுக்கு எதிர்பார்த்த அளவில் நன்மை இருக்காது. விரயங்கள் இருக்கும். செலவுகளை மேற்கொள்ள நேரும். மே மாதத்திற்குப் பிறகு சிறப்பாக இருக்கும். குரு மாறிய பிறகு சிறப்பாக இருக்கும். இடமாற்றம் இருக்கலாம். இடம் விட்டு செல்ல வேண்டும் என்ற உந்துதல் இருக்கும். வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும். என்ற எண்ணம் எழும். மனதில் சஞ்சலம் இருக்கும். குரு மற்றும் சனிக்கு பரிகாரம் செய்ய வேண்டும். அன்னதானம் செய்வதன் மூலம் நன்மை அடையலாம். தொழிலில் எதிர்பார்த்த அளவில் முன்னேற்றம் இருக்காது மே மாதத்திற்கு பிறகு சிறப்பாக இருக்கும். முதலீடுகள் செய்யாதீர்கள். நிலம் விற்க முடியாத நிலை இருக்கும். திருப்பதி சென்று வருவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும் கடல் கடந்து போவதன் மூலம் மாற்றம் இருக்கும். வேறு மாநிலம் செல்வதன் மூலமும் தடைகள் விலகும். பொறுமை தேவை. அரசியல்வாதிகளுக்கும் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைப்பதில் மந்த நிலை இருக்கும். சிம்ம ராசி பெண்கள் முதுகுத்தண்டு போன்றவற்றில் பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். மாணவர்கள் சிறப்பாக கல்வி பயில்வார்கள். மேலும் பலன்கள் அறிய இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2024 : கன்னி

இந்த தமிழ்ப் புத்தாண்டில் கன்னி ராசி அன்பர்கள் கவனமாக இருக்க வேண்டும். எதிர்பார்த்தது நடக்க வாய்ப்பில்லை. வேலையில் உங்கள் நிலை சற்று குறையலாம். உங்கள் மீது பழி ஏற்படும். கலை மற்றும் தொழில் சார்ந்தவர்கள் தன் நிலையில் குறைய வாய்ப்பு உள்ளது. வழக்கு பிரச்சினைகள் உங்களைத் தேடி வரும். என்றாலும் அதற்குரிய தீர்வும் கிட்டும். செலவு அதிகமாக இருக்கும். பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். சனிக்கிழமை ஆஞ்சநேயரை வணங்குவது நல்லது. எதிர்பார்த்தது கிடைக்காது. வேலையில் நிதானம் தேவை வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். வயிறு, சுவாசம், தலை பாரம் போன்ற பிரச்சினைகள் வரலாம். குரு பகவானுக்கு பரிகாகரம் செய்ய வேண்டும். மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். பன்னிரண்டாம் மாதத்திற்குப் பிறகு யோகம் ஏற்படலாம். தொடர்ந்து பண வரவு கிடைக்க வெள்ளிக்கிழமை ஸ்ரீரங்கம் சென்று சுக்கிர வழிபாடு செய்ய வேண்டு. கஜ பூஜை காண்பது சிறப்பு. மேலும் பலன்கள் அறிய இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2024 : துலாம்

இந்த தமிழ்ப் புத்தாண்டில் சிறந்த வெற்றி கிடைக்கும். பழைய பாக்கி கிடைக்கும். கொடுத்த பணம் திரும்பக் கிடக்கும். தொழிலில் முன்னேற்றம் கிட்டும். அனைத்திலும் சிறப்பான பலன்கள் கிட்டும். சில சஞ்சலங்கள் இருந்தாலும், ராகு உங்களுக்கு யோகம் மற்றும் லக்ஷ்மி யோகம் அளிக்கும். திருமணத் தடைகள் நீங்கும். புது இடம் வாங்குவீர்கள். மனதில் நிறைவு வரும். வெளிநாடு செல்வீர்கள். ஏற்றுமதி-இறக்குமதி தொழில் சிறப்பாக நடக்கும். ஆன்லைன் தொழில் சிறப்பாக நடக்கும். இடுப்பு, கால், பிரச்சினைகள் மற்றும் சர்க்கரை வியாதி வரலாம். குருபவானுக்கு பரிகாரம் செய்வது நல்லது. காளஹஸ்தி சென்று வழிபாடு செய்வது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமை கிடைக்க நவகிரகத்தில் சுக்கிரனை, தாமரைப் பூ கொண்டு வழிபடுவது நல்லது. மேலும் பலன்கள் அறிய இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2024 : விருச்சிகம்

இந்த தமிழ்ப் புத்தாண்டு விருச்சிக ராசியைச் சார்ந்த திருமண மாகாதவர்க்ளுக்கு ஜூன் மாதத்திற்குள் திருமணம் அமையும். புது வீடு வாங்க நினைப்பீர்கள். என்றாலும் சிறு தடைகள் வரலாம். திருநள்ளாறு அல்லது குச்சானூர் சென்று வழிபடுவது நல்லது. பழைய வழக்குகள் தீரும். எந்த விஷயம் எடுத்தாலும் சிறப்பாக நடக்கும். அரசியல்வாதிகளுக்கு பெரிய பதவிகள் கிடைக்கும். இந்த வருடம் அருமையாக இருக்கும். குல தெய்வ வழிபாடு மற்றும் முருகர் வழிபாடு நல்லது. நவகிரகத்தில் செவ்வாய் வழபாடு நன்மையை அளிக்கும். முதலீடுகளை மேற்கொள்ளுதல் கூடாது. தங்கம் மற்றும் வெள்ளி வாங்கலாம். படிப்பை சார்ந்த வரையில் தெளிவான முடிவை எடுக்க வேண்டும். மேலும் பலன்கள் அறிய இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2024 : தனுசு

இந்த பத்தாண்டில் பெரிய வெற்றி கிடைக்கும். நல்ல பலன்கள் கிட்டும். எதிர்பார்த்தது கிடைக்கும். அரசாங்க ஊழியர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். திருமணத்திற்குக் காத்திருப்பவர்க்ளுக்கு திருமணம் நடக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். இடம் விற்க நினைப்பவர்கள் இடத்தை விற்பீர்கள். விசா தடைகள் நீங்கும். வெளி நாடு செல்வீர்கள். இந்த வருடம் ஆறாம் மாதம் முதல் பத்தாம் மாதம் வரை பெரிய மாற்றம் வரலாம். இடுப்பு வலி, கை-கால் வலி போன்ற உபாதைகளை சந்திக்க நேரும். ஐ ஏ எஸ், ஐ பி எஸ் போன்ற படிப்பு படிப்பவர்கள் வெற்றி காண்பார்கள். குருபவகான் வழிபாடு நல்ல பலனைக் அளிக்கும். காளஹஸ்தி சென்று வருவதன் மூலம் நல்ல பலன்கள் கிட்டும். பண விஷயம், மற்றும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை பொருட்கள் காணாமல் போகலாம். மேலும் பலன்கள் அறிய இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2024 : மகரம்

இந்த தமிழ்ப் புத்தாண்டு உங்களுக்கு அருமையான காலமாக இருக்கும். இது வரை காணாத நன்மைகளைக் காண்பீர்கள். செலவுகள் குறையும். வீடு வாங்குவீர்கள். புதிய இடம் செல்வீர்கள். புது வேலை கிட்டும். கணவன் மனைவி சண்டை நீங்கி ஒற்றுமை கூடும். நல்ல புத்தி, நல்ல வழி கிட்டும். மாணவர்கள் நன்றாகப் படிப்பார்கள். தமது தவறுகளை திருத்திக் கொள்வார்கள். வெளிநாடு செல்ல நினைப்பவர்களின் எண்ணம் நிறைவேறும். . கெமிக்கல் சார்ந்த தொழில் சிறப்பாக நடக்கும். ஆன்லைன் தொழிலில் முன்னேற்றம் நடக்கும். இரும்பு, ஹோட்டல் சார்ந்த தொழிலில் முன்னேற்றம் கிட்டும். திருநள்ளாறு சென்று பரிகாரம் செய்ய வேண்டும். சிவனுக்கு பிரதோஷ வழிபாடு செய்வது நல்லது. மற்றவர்களின் வழிக்கு அல்லது பிரச்சினைக்கு செல்லக் கூடாது. வெளிப்படையான பேச்சினால் பிரச்சினை வரும் என்பதால் அமைதி காக்க வேண்டும். மேலும் பலன்கள் அறிய இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2024 : கும்பம்

இந்த தமிழ்ப் புத்தாண்டில் காரியத் தடை இருக்கும். ஆண்களுக்கு சளி, மார்பகம், வயிறு சார்ந்த உடல் உபாதைகள் இருக்கலாம். பெண்களுக்கு மாத விடாய்ப் பிரச்சினை வரலாம். பல முயற்சிகளை செய்வார்கள். தடைகள் வரும். முதலீடு பலன் தராது. வீடு கட்ட நினைப்பவர்களுக்கு நினைத்தது. நடக்காது. செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும். பொறுமை மற்றும் அமைதி தேவை. திருமண விஷயத்தில் கவனம் தேவை.தள்ளிப் போடலாம். கவனக் குறைவால் பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஆகும். வாகன் ரிப்பேர் இருக்கும்.திருநள்ளாறு சென்று சனி பகவானுக்கு பரிகாரம் செய்யலாம். குரு பவானுக்கு பரிகாரம் செய்வது நல்லது. தென் மேற்கு திசையில் கிழக்கு பார்த்த மாதிரி விளக்கு ஏற்ற வேண்டும். இந்த வருடம் பன்னிரண்டாம் மாதத்திற்குப் பிறகு நல்ல காலம் வரும். வேலையில் கவனம் தேவை. உங்களை வெளியேற்ற பல பேர் காத்திருப்பார்கள். வேலை கிடைக்க தாமதம் ஆகும். குரு வழிபாடு, தட்சிணா மூர்த்தி வழிபாடு மற்றும் குல தெய்வ வழிபாடு நன்மைகளை அளிக்கும். மேலும் பலன்கள் அறிய இந்த வீடியோவை தொடர்ந்து காணுங்கள்.

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2024 : மீனம்

இந்த தமிழ்ப் புத்தாண்டில் அதிக விரயம் இருக்கும். ஒரு பாதி விரயம் இருக்கும் ஒரு பாதி நன்றாக இருக்கும். நிம்மதி இருக்காது. தூக்கம் கெடும். கணவன் மனைவி இடையே சில பிரச்சினைகள் இருக்கும். மனசு நிறைவு இருக்காது. எல்லா காரியத்தையும் ஆரம்பிப்பீர்கள் அது நின்று விடும். இடம் கட்டுவீர்கள். அதுவும் தடைகளை சநதிக்கும். அண்ணன் தம்பி பிரச்சினை, சொத்து மற்றும் உறவு பிரச்சினை வரலாம். பிள்ளைகளுக்கு நோய் வந்து அதற்கான மருத்துவ செலவு இரண்டு மாதத்திற்கு இருக்கும். பெரிய பண இழப்பு, இருக்கும். செவ்வாய்க்கு அர்ச்சனை குரு பகவான் வழிபாடு நன்மை அளிக்கும். . வீடு சுத்தமாக இருந்து வீட்டில் வழிபாடு செய்வதன் மூலம் நன்மை பெறலாம். ஏழாம் மாதத்திற்குப் பிறகு நிலைமை சீராகும். பேச்சில் கவனம் தேவை. அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்கள் பொறுமை காப்பதன் மூலம் நன்மை பெறலாம்.