Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
மகிழ்ச்சியை அள்ளி தர சிவன் சுலோகம்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

வாழ்வில் மகிழ்ச்சி அளிக்கும் சிவன் ஸ்லோகம்

Posted DateMay 13, 2024

மும்மூர்த்திகளில் ஒருவர் சிவபெருமான். பிறப்பும் இறப்பும் இல்லாததால் இவரை பரமசிவன் என்று அழைக்கிறார்கள். இவர் தனது துணைவி பார்வதியுடன் இணைந்து ஆனந்த தாண்டவம் ஆடி அண்ட சராசரத்தை உருவாக்கினார் என்று கூறப்படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளை  செய்பவர். மேலும் இந்த ஐந்து செயல்களுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது. அபிஷேகப் பிரியரான சிவனை வில்வம் கொண்டு அர்ச்சிக்கலாம். பக்தர்களின் எளிய பிரார்த்தனையில் மனம் மகிழ்ந்து வரம் பல அளிப்பவர் சிவபெருமான். அவரை வணங்கி வழிபட பிரார்த்தனைக்கு உரிய எளிய ஸ்லோகம் ஒன்றை இந்தப் பதிவில் காணலாம் வாருங்கள்.

சிவன் ஸ்லோகம்

விபூதி சுந்தர மஹேஸ்வர ஹர

சிவசிவ ஹரஹர மஹாதேவ

வில்வதள ப்ரிய சந்திர கலாதர

சிவசிவ ஹரஹர மஹாதேவா

கங்காதர ஹர சாம்ப சதாசிவாய

சிவசிவ ஹரஹர மஹாதேவா

த்ரியம்பகாய லிங்கேஸ்வராய

சிவசிவ ஹரஹர மஹாதேவா

மெளலீஸ்வராய யோகேஸ்வராய

சிவசிவ ஹரஹர மஹாதேவா

குஞ்சேஸ்வராய குபேராஸ்வராய

சிவசிவ ஹரஹர மஹாதேவா

நடேஸ்வராய நாகேஸ்வராய

சிவசிவ ஹரஹர மஹாதேவ

கபாலீஸ்வரய்யா கற்கடேஸ்வராய

சிவசிவ ஹரஹர மஹாதேவா

போலோ ஹரஹர சிவசிவ மஹாதேவா

இந்த ஸ்லோகத்தைச் சொல்லி ஒரேயொரு வில்வம் சமர்ப்பித்து சிவனாரை வழிபட்டால், லட்சம் வில்வதளத்தை சமர்ப்பித்து வழிபட்ட பலன்கள் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.இந்த ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்ய நமது வாழ்வில் வளமும் மகிழ்ச்சியும் பொங்கும் என்பது ஐதீகம்.