Skanda Shasti 2025: Invoke Warrior-God Muruga during the Six Power Days for Victory & Transformation Blessings Join Now
சிம்ம ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2025-2027
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

சிம்ம ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2025-2027

Posted DateJuly 15, 2024

சிம்ம ராசி சனி பெயர்ச்சி 2025 பொதுப்பலன்

சிம்ம ராசி அன்பர்களே! மீன ராசியில் சனிப்பெயர்ச்சி உங்கள்  ராசியிலிருந்து 8ஆம் வீட்டில் நிகழும். இந்த பெயர்ச்சி மார்ச் 29, 2025 அன்று நிகழும், மற்றும் சனி ஜூன் 3, 2027 வரை மீனத்தில் இருக்கிறார்.

இந்த பெயர்ச்சி உங்கள் ராசிக்கு அவ்வளவு அனுகூலமானதாக இல்லை. எனவே அதிக எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள். உங்கள் முயற்சிகளில் நீங்கள் சில தடைகள் மற்றும் தாமதங்களை சந்திக்கலாம். முயற்சிகளுக்கான பலன் உடனடியாக கிடைக்காது. சனி படிப்பினையை தரும் நியாயமான  ஆசிரியர். சனி பாதகம் தரும் இடத்தில் சஞ்சரிப்பதால் இந்த நேரத்தில் சரியான பாதையைத் தேர்வு செய்யவும்.  குறுக்கு வழிகளைத் தவிர்க்கவும், இல்லையெனில் பின்விளைவுகளை சந்திக்கக் கூடும். தியானம் மற்றும் பிரார்த்தனை எதிர்மறையை நீக்கவும், நேர்மறையை அதிகரிக்கவும், தேவையான அமைதியைக் கொண்டுவரவும் முடியும்.

உத்தியோகம் :-

இந்த காலக்கட்டத்தில் நீங்கள் உத்தியோகத்தில் மாற்றங்களை சந்திக்க நேரலாம்.  பணியிடத்தில் சில சாவால்களை சந்திக்க நேரலாம். நீங்கள் அர்ப்பணிப்பு உணர்வுடனும், திறமையுடனும் பணியாற்றினாலும் கூட உங்களுக்குரிய அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம். பணியிடத்தில் சக ஊழியர்கள் மூலம் சில பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்காமல் போகலாம். எனவே நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருங்கள். உங்களுக்கு அளிக்கும் பணிகளை குறித்த காலத்திற்குள் முடித்து அளிக்க முயலுங்கள். திட்டமிட்டு பணிகளை ஆற்றுங்கள். பதவி உயர்வுகள் தாமதமாகலாம், ஆனால் அதற்காக வருந்த வேண்டாம். முயற்சி எடுத்து, நிலையான முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள், நீங்கள் சந்திக்கும் சவால்களை வளர்ச்சி மற்றும் வெற்றிக்கான வாய்ப்புகளாக மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.

காதல் / குடும்ப உறவு :

இந்த காலக்கட்டத்தில் நீங்கள் சூழ்நிலையை அனுசரித்து செயல்பட வேண்டியிருக்கும். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அதனை பெரிது படுத்தாதீர்கள். இது உறவை சீர்குலைக்கலாம். எனவே நிதானமாக செயல்படுங்கள். பொறுமையுடன் செயல்படுங்கள். உங்கள் முடிவில் கவனம் தேவை. திருமணத்திற்குக்  காத்திருப்பவர்கள் இந்த மாதம் தங்கள் துணையை தேடும் முயற்சியில் ஈடுபடலாம்.  உங்கள் இலக்குகளை அடைய வெளிப்படையாக இருப்பது அவசியம்.கண்மூடித்தனமாக நம்புவது ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும். எனவே உறவை அமைத்துக் கொள்ளும் முன் நன்கு ஆராய்ந்து முடிவெடுங்கள்.  நெகிழ்வுத்தன்மையைப் பேணுங்கள், மற்றவர்களுக்கு சிறந்த புரிதலுக்கான இடத்தைக் கொடுங்கள், மேலும் உங்கள் அன்புக்குரியவர்களுடன் பிணைப்பை வலுப்படுத்திக் கொள்ள முயலுங்கள்.

திருமண வாழ்க்கை :- 

திருமணமான தம்பதிகள் தற்காலிக சவால்களை சந்திக்க நேரலாம். நீங்கள் நினைப்பது போல அல்லது திட்டமிடுவது போல விஷயங்கள் நடக்காமல் போகலாம். எனவே பொறுமையுடன் செயல்படுங்கள். கருத்து வேறுபாடுகளைக் களைந்து புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். பரஸ்பரம் தேவை அறிந்து நடந்து கொள்வது நல்லது. விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை என்பதை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள். சமரச மனப்பான்மை உறவில்  மோதல்களை தடுக்கவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் கண்டறியவும் உதவும். வதந்திகள் மற்றும்  தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். அதற்கு பதிலாக, உங்கள் வாழ்க்கைத் துணையின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளியுங்கள்.  மற்றும் அவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு அளியுங்கள்.

நிதிநிலை:-

நிதிநிலையைப் பொறுத்தவரை ஒரு இலக்கை அமைத்துக் கொண்டு அதன்படி செயல்படுங்கள். செலவுகள் அதிகரிக்கலாம். எனவே செலவு கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்யுங்கள்.தேவையற்ற செலவுகளை மேற்கொள்ள வேண்டாம். சேமிப்பிற்கு முன்னுரிமை அளியுங்கள். எந்தவொரு முதலீட்டிற்கும் முழுமையான ஆராய்ச்சி பரிந்துரைக்கப்படுகிறது, மேலும் அவசரப்பட வேண்டாம். குறிப்பாக ஷேர் மார்க்கெட் ஒப்பந்தங்கள் மற்றும் பிற வர்த்தக நடவடிக்கைகளில் பெரிய முதலீடுகளைச் செய்வதற்கு முன் நிதி நிபுணர்களிடம் ஆலோசனை பெறவும். உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப லாபம் கிடைக்காமல் போகலாம் என்பதால் புதிய முயற்சிகளுக்கு இது சரியான நேரமாகத் தெரியவில்லை. மற்றவர்களுக்கு நிதி உதவி வழங்குவதைத் தவிர்க்கவும், இல்லையெனில் நீங்கள் தடைகளை சந்திக்க நேரிடலாம். பொறுப்புடனும் எச்சரிக்கையுடனும் இருங்கள் மற்றும் உங்கள் நீண்ட கால பொருளாதார நலனுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

மாணவர்கள் : 

இந்த காலக்கட்டத்தில் மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். அர்ப்பணிப்பு உணர்வுடன் படிக்கலாம். மாணவர்கள் சிறப்பாகப் படித்து தங்கள் கனவுகளை நனவாக்கிக் கொள்ள இந்த காலகட்டம் ஏதுவாக உள்ளது. என்றாலும் சில சிறிய சவால்களை நீங்கள் சந்திக்க நேரலாம். இது தற்காலிகமானதே. எனவே  உங்கள் இலக்குகளை அமைத்துக் கொண்டு செயல்படுங்கள். சோதனை கண்டு விட்டு விடாதீர்கள். வெளிநாட்டில் தங்கள் படிப்பைத் தொடர விரும்புவோர், பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தைப் பற்றி சாத்தியமான அனைத்து ஆராய்ச்சிகளையும் செய்யுங்கள். போட்டித் தேர்வுகளுக்குத் தோன்றும் மாணவர்கள் தங்கள் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கொஞ்சம் கடினமாக உழைக்க  வேண்டியிருக்கும்.

ஆரோக்கியம் :-

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தால் தான் நீங்கள் சிறப்பாக செயல்பட முடியும். எனவே வேலை வேலை என்று இருக்காமல் ஓய்விற்கும் நேரம் ஒதுக்குங்கள்.முறையான உணவை உட்கொள்வது உங்கள் ஆற்றலை  நிலையானதாக வைத்திருக்கலாம். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள்.  விபத்துகளைத் தவிர்க்க அவசரமாக வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவும். சிறிய காயங்கள் கூட மெதுவாக குணமடையக்கூடும், மேலும் நீங்கள் முழுமையாக குணமடைய நீண்ட நேரம் ஆகலாம். யோகா அல்லது தியானம் போன்ற  செயல்பாடுகள் உங்கள் அன்றாட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும், இது வலுவான ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் காரணிகளாக செயல்படும்.

பரிகாரங்கள் :-

  1. சனிக்கிழமைகளில் உடல் ஊனமுற்றவர்களுக்கு உணவு தானம் செய்யுங்கள்.
  2. ஒவ்வொரு சனிக்கிழமையும் விநாயகர், அனுமன் மற்றும் சனி பகவானை பிரார்த்தனை செய்து, தினமும் ஹனுமான் சாலிசாவைப் படிக்கவும் அல்லது கேட்கவும்.
  3. சனிக்கிழமைகளில் ஏழைகள் மற்றும் வீடற்றவர்களுக்கு போர்வைகள் மற்றும் துணிகளை தானம் செய்யுங்கள்.
  4. சனிக்கிழமைகளில் மது மற்றும் அசைவ உணவை தவிர்க்கவும்.
  5. நாய்கள், காக்கைகள் மற்றும் பறவைகளுக்கு சனிக்கிழமைகளில் உணவு மற்றும் தண்ணீரைக் கொடுங்கள்.
  6. முதியோர் இல்லங்களுக்கு தொண்டு செய்யுங்கள்.