Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
கேட்ட வரத்தை அருளும் உங்கள் நட்சத்திரத்திற்குரிய சித்தர்கள்.
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கேட்ட வரத்தை அருளும் உங்கள் நட்சத்திரத்திற்குரிய சித்தர்கள்.

Posted DateJanuary 25, 2024

சித்தர்கள் என்பவர் யார்? அவர்களை நாம் ஏன் வழி பட வேண்டும்? சித்தம் என்ற சொல்லிற்கு மனம் அறிவு என்று பொருள். சித்தர்கள் என்றால் சித்து பெற்றவர்கள் என்று பொருள். அறிவில் தெளிந்தவர்கள் சித்தர்கள்.  கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்க்கலாம் என முக்காலம் அறிந்தவர்கள் சித்தர்கள். சித்தம் போக்கு சிவன் போக்கு என்று சொல்வார்கள். சித்தர்கள் சிவனுடன் தொடர்பு உடையவர்கள் அவர்களிடம் அளப்பரிய சக்தி  உள்ளதாக கருதப்படுகிறது. மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ, பல  ரகசியங்களை சொல்லிச் சென்றுள்ளார்கள். சிவனின் அருளைப் பெற்றவர்கள் சித்தர்கள். மேலும் அந்த அருளை பரப்பியவர்களும் சித்தர்களே!

உடலைக் கோவிலாகவும் உள்ளத்தை இறைவன் உறையும் ஆலயமாகவும் கருதி உலகப் பற்றற்று வாழ்பவர்கள் சித்தர்கள். இவர்கள் தங்களை உணர்ந்தவர்கள். இயற்கையை உணர்ந்தவர்கள். மனதை அடக்கி ஆளத் தெரிந்தவர்கள். தன்னுள் உறையும் இறைவனை கண்டு அதனுடன் ஒன்றி தன் சக்தியையும் ஆற்றலையும் உலக மக்களின் நன்மைக்கு பயன்படுத்தும் வல்லமை படைத்தவர்கள்.

சித்தர்கள் அழியாப் புகழுடன் வாழும் சிரஞ்சீவிகள். பிரபஞ்ச ரகசியத்தை அறிந்த பிரம்ம ஞானிகள். எதிலும் எந்த வித பேதமும் காணாதவர்கள். ஆசை, பாசம், மோகம், பந்தம் போன்ற உலகப் பற்றை அறுத்தவர்கள். பல சித்திகளை, குறிப்பாக 1. அணிமா 2. மகிமா 3. லகிமா 4. பிரார்த்தி 5. பிரகாமியம் 6. ஈசத்துவம், 7. வசித்துவம் 8. கரிமா என்னும் அஷ்டமா சித்திகளை பெற்றவர்கள்.

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு சித்தர்கள் இருக்கின்றனர். அந்த நட்சத்திரகாரர்கள் அந்த சித்தரை மனதார வணங்கி பிரார்த்தனை செய்தால் கட்டாயம் அந்த சித்தர்கள் தன்னுடைய நட்சத்திரகாரர்களுக்கு கேட்ட வரங்களை வாரி வழங்குவார். எந்த நட்சத்திரக்காரர்களுக்கு எந்த சித்தர்கள் இருக்கின்றனர் என்பதை காணலாம்.

1. அசுவினி: 

அசுவினி நட்சத்திரக்காரர்கள்  வணங்க வேண்டிய சித்தர் காலங்கி நாதர்.

இவருடைய சக்தி அலைகள் மற்றும் சமாதி திருக்கடையூர் மற்றும் கஞ்சமலையில் உள்ளது.

2. பரணி: 

பரணி நட்சத்திரக்காரர்கள்  வணங்க வேண்டிய சித்தர் போகர் ஆவார். இவருடைய சமாதி பழனி முருகன் சந்நிதியில் உள்ளது.

3. கிருத்திகை:

கிருத்திகை  நட்சத்திரக்காரர்கள்  வணங்க வேண்டிய சித்தர் ரோமரிஷி ஆவார். இவர் உடல் அழியவில்லை. இவருக்கு சமாதி இல்லை. இவர் நேரடியாக கைலாயத்திற்கு சென்று விட்டார்.

இவரை திங்கட்கிழமை அன்று வெண்ணிற ஆடை அணிந்து 

வடக்கு நோக்கி நினைத்து வணங்க வேண்டும்..

4. ரோகிணி: 

ரோகிணி நட்சத்திரக்காரர்கள்  வணங்க வேண்டிய சித்தர்  மச்சமுனி ஆவார். 

இவருடைய ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது.

5. மிருகசீரிடம்: 

மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்கள்  வணங்க வேண்டிய 

சித்தர்  பாம்பாட்டி சித்தர் ஆவார் இவருடைய ஜீவ சமாதி சங்கரன் கோவில் என்ற ஊரில் உள்ளது. 

இன்னொருவர் சட்டமுனி சித்தராவார். 

ஊர் திருவரங்கம் ஆகும்.

6. திருவாதிரை:

திருவாதிரை நட்சத்திரக்காரர்கள்  வணங்க வேண்டிய சித்தர் இடைக்காடார் ஆவார். ஜீவ சமாதி திருவண்ணாமலையில் உள்ளது. 

7. புனர்பூசம்: 

புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள்  வணங்க வேண்டிய சித்தர் தன்வந்தரி ஆவார்

இவர் வைத்தீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

8. பூசம்: 

பூசம்  நட்சத்திரக்காரர்கள்  வணங்க வேண்டிய சித்தர் கமலமுனி சித்தர் ஆவார். 

இவருடைய ஜீவ சமாதி திருவாரூர் என்றஊரில்  உள்ளது.

9. ஆயில்யம்: 

ஆயில்யம்   நட்சத்திரத்திற்கு  உரிய  சித்தர் அகத்தியர். இவருடைய ஒளிவட்டம் குற்றால பொதிகை மலையில் உள்ளது. 

சமாதி  திருவனந்தபுரத்தில் உள்ளது

10. மகம்: 

மகம் நட்சத்திரக்காரர்கள்  வணங்க வேண்டிய சித்தர் சிவ வாக்கிய சித்தர் ஆவார். 

இவர் ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது.

11. பூரம்:

இந்த நட்சத்திரத்தில் அவதரித்த தெய்வ பெண்மணி ஸ்ரீ ஆண்டாள் ஆவார். இவர் பூமாதேவியின் அம்சமாக உள்ளார். 

அடுத்து ராமதேவ சித்தரும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்தான். 

இவரை வழிபட வேண்டுமானால் அழகர்  மலைக்கு செல்வது சிறப்பு.

12. உத்திரம்: 

இந்த நட்சத்திரத்திற்கு உரிய சித்தர் காகபுஜண்டர் ஆவார். 

இவர் ஜீவசமாதி திருச்சி மாவட்டம் உறையூரில் உள்ளது.

13. அஸ்தம்: 

அஸ்தம் நட்சத்திரக்காரர்கள்  வணங்க வேண்டிய சித்தர்  கருவூரார் ஆவார். 

இவர் சமாதி கரூரில் உள்ளது. 

அடுத்து இவர் ஒளி வட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய  கோயில் ஆகும்.

14. சித்திரை: 

சித்திரை நட்சத்திரக்காரர்கள்  வணங்க வேண்டிய சித்தர் புண்ணாக்கீசர்  ஆவார். 

நண்ணாசேர் என்ற இடத்தில் இவர் ஜீவ சமாதி உள்ளது.

15. சுவாதி: 

சுவாதி நட்சத்திரக்காரர்கள்  வணங்க வேண்டிய சித்தர் புலிப்பாணி ஆவார். 

சமாதி பழனி அருகில் வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது.

16. விசாகம்: 

விசாகம் நட்சத்திரக்காரர்கள்  வணங்க வேண்டிய சித்தர்  நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர் ஆவார். 

நந்தீசர் காசி நகரத்திலும், குதம்பை சித்தரின் ஜீவ சமாதி  மாயவரத்திலும் உள்ளது.

17. அனுஷம்: 

அனுஷம் நட்சத்திரக்காரர்கள்  வணங்க வேண்டிய சித்தர் வால்மீகி அல்லது வான்மீகர் என்று அழைக்கப்படுவார். 

இவரின் ஜீவ சமாதி எட்டுக்குடியில் உள்ளது.

18. கேட்டை:

கேட்டை நட்சத்திரக்காரர்கள்  வணங்க வேண்டிய  சித்தர் பகவான் வியாசர் ஆவார். இவர் உடல் அழிவற்றது. 

எனவே காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். 

இவரை நினைத்தாலே  போதும். 

அவ்விடம் வருவார்.

19. மூலம்: 

மூலம்  நட்சத்திரக்காரர்கள்  வணங்க வேண்டிய சித்தர்  பதஞ்சலி ஆவார். 

இவர் சமாதி ராமேஷ்வரத்தில் உள்ளது.

20. பூராடம்: 

பூராடம்  நட்சத்திரக்காரர்கள்  வணங்க வேண்டிய சித்தர்  ராமதேவர் எனும் யாகோப்பு சித்தரே ஆவார். 

அழகர்மலை மற்றும் மெக்காவில் ஜீவ  ஒளி உள்ளது.

21. உத்திராடம்: 

உத்திராடம்  நட்சத்திரக்காரர்கள்  வணங்க வேண்டிய சித்தர்  கொங்கணர். 

இவர் ஜீவசமாதி திருப்பதியில் உள்ளது.

22. திருவோணம்: 

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சித்தர்  தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆவார். 

இவருடைய சமாதி பாண்டிச்சேரி அடுத்து உள்ள  பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது.

23. அவிட்டம்: 

அவிட்டம் நடச்த்திரக்கார்கள்  வணங்க வேண்டிய சித்தர்  திருமூலர் ஆவார். 

இவருடைய ஜீவசமாதி சிதம்பரத்தில் உள்ளது.

24. சதயம்: 

சதயம் நட்சத்திரக்காரர்கள்  வணங்க வேண்டிய சித்தர் கௌபாலர். 

இவரின் சமாதி எங்கு என தெரியவில்லை. எனினும் மன  ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார் .

25. பூராட்டாதி: 

பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள்  வணங்க வேண்டிய சித்தர்  சோதி முனி ஆவார். இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். 

அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால்  அங்கு அருள் பாலிப்பார்.

26. உத்திரட்டாதி: 

உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள்  வணங்க வேண்டிய சித்தர் டமரகர் சித்தர் ஆவார். 

இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்து விட்டதாக வரலாறு கூறுகிறது.

 இவரை    வீட்டிலேயே சிறுமணி ஓசையில்   வரவழைத்து அவர் அங்கு வந்ததாக பாவித்து வணங்கலாம்.

27. ரேவதி: 

ரேவதி நட்சத்திரக்காரர்கள்  வணங்க வேண்டிய சித்தர் சுந்தரானந்தர் ஆவார்.

 இவர் ஜீவசமாதி கோயில் மதுரையில் உள்ளது. 

தனி அறையில் ஒற்றை தீபம் மற்றும் ஏற்றி மன ஒரு நிலைப்பாட்டோடு சித்தரை வணங்கி வந்தால் போதும்.