சிவ தாண்டவ ஸ்தோத்திரம் உருவானதைக் குறித்து பல கதைகள் உள்ளன.
∙ ஒரு கதையின் படி, ராவணன் கைலாச மலையை சுமக்கத் தொடங்கியபோது, சிவன் கைலாய மலையை தனது கட்டைவிரலால் அழுத்தினார். இதன் காரணமாக ராவணன் கைலாச மலையின் அடியில் புதைக்கப்பட்டான். அப்போது சிவனை மகிழ்விக்க ராவணன் செய்த துதி சிவ தாண்டவ ஸ்தோத்திரம் எனப்பட்டது.
∙ மற்றொரு கதையின்படி, அன்னை சதி தனது தந்தையின் யாகத்தில் கலந்துகொள்ள தாய்வீட்டிற்குச் சென்றபோது, அவளுடைய தந்தை சிவபெருமானை அவமதித்தார். இதைத் தாங்க முடியாத சதி யாகத் தீயில் தன்னைத்தானே எரித்துக் கொண்டாள். இதற்குப் பிறகு, ராவணன் சிவபெருமானை மகிழ்விக்க சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தைப் பாடினான்.
∙ சிவ தாண்டவ ஸ்தோத்திரம் சிவபெருமானின் பிரபஞ்ச நடனத்தைக் குறிக்கிறது. இந்த ஸ்தோத்திரம் சிவபுராணம், ஸ்கந்த புராணம், வால்மீகி ராமாயணம், ருத்ர சம்ஹிதா மற்றும் வாயு புராணம் போன்ற சனாதன வேத இந்து மதத்தின் மத நூல்களில் எழுதப்பட்டுள்ளது.
∙ மிகச் சிறந்த சிவ பக்தனான ராவணன் ஒரு பிரதோஷ நாளில் மிக சக்தி வாய்ந்த, ராகம், தாள நயத்துடன் ஒரு துதியை இயற்றினான். பிரதோஷ வேளையில் சிவ போற்றி சிவ தாண்டவ ஸ்லோகத்தை ராவணன் பாட, மனம் குளிர்ந்த சிவ பெருமான் புன்னகை புரிந்து, ராவணனுக்கு வேண்டிய வரங்களை அளித்தார் என புராணங்கள் சொல்கின்றன.
இந்த ஸ்லோகத்தை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு ஆன்ம பலம் அதிகரிக்கும். ஆன்மிகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும். இந்த சிவ தாண்ட ஸ்லோகத்தை படிப்பதற்கு நேரம் காலம் எதுவும் கிடையாது. எப்போது சொன்னாலும் அதீத சக்தியை வழங்கக் கூடியதாகும். இருந்தாலும் சந்திர கிரகணம், பிரதோஷம், குளிகை காலங்களில் படிப்பது அளவில்லாத பலன்களை தரும். சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தை சொல்லும் பக்தர்கள் சிவ பெருமான் எப்போதும் தங்களுடன் இருப்பதை உணர முடியும்.
சிவ தாண்டவ ஸ்தோத்திரம்
ஜடாடவி கலஜ்ஜல பிரவாஹபாவிதஸ்தலே
கலேவலம்பிய லம்பிதாம் புஜங்கதுங்கமாலிகாம்
டமட் டமட் டமட்தமன்னி நாதவட்டமர்வயம்
சகார சந்த்ததாண்டவம் தனோத்து ந சிவ சிவம்
அடர்ந்த காடு போன்ற திருச்சடையிலிருந்து பொங்கும் நீரால் நனைக்கப்படும் அவன் திருக்கழுத்தில், இராசநாகம் மாலை போல் சுழன்றாட, “டம டம” என ஒலியெழுப்பும் உடுக்கையேந்தி திருக்கூத்தாடும் சிவன், அவன் அருள் மழையை எங்கும் பொழிக!
ஜடா கடாஹ சம்பிரம பிரமணிலிம்பனிர்ஜரி
விலோலவிச்சிவல்லரி விராஜமானமுர்தனி
தகதகதக ஜ்வலல்லாட பட்டபாவகே
கிஷோரா சந்திரசேகரே ரதிஹ் பிரதிஷணம் மமா
ஜடாமுடியின் ஆழமான கிணற்றில் இருந்து தழும்பும்
புனிதமான கங்கை நதியின் அலைகள் வரி வரியாய் அலங்கரிக்கும் தலையும், நடுநெற்றியில் தகிக்கும் நெருப்பும்,
பிறைநிலவை ஆபரணமாக தலையில் அணிந்தவனுமான
சிவனில் நான் ஆழமான ஈடுபாடு கொண்டிருக்கிறேன்
தராதரேந்திர நந்தினிவிலாசபந்துபந்துரா
ஸ்பூரதிகந்தசந்ததி பிரமோதமானமானசே
கிருபாகடாக்ஷதோரணி நிருத்துர்தராபதி
க்வசித்தி கம்பரே மனோவினோதமேது வஸ்துனி
பரந்த ஞாலத்தின் உயிர்களெல்லாம் வாழத் திருவுளம் கொண்டவனும், மலையரசன் மகளுடன் மகிழ்ந்தாடுபவனும், தன் கடைக்கண்ணோக்கால், துன்பமெல்லாம் தீர்ப்பவனும், திக்குகளையே ஆடையாய் அணிந்து அம்மணமாய்த் திரிபவனுமான சிவனைக் கண்டு, நான் உளம் மகிழ்கிறேன்.
ஜடா பூஜங்க பிங்களஸ் புரத்ஃபனமணிபிரபா
கடம்பகுங்கும திரவப்பிரலிப்த திக்வதுமுகே
மதாந்த சிந்து ரஸ்புரத் வகுட்டரியமேதுரே
மனோ வினோதமத்புதம் பிபர்த்து பூதபர்த்தரி
அனைத்து ஜீவராசிகளின் உற்ற துணையாய் இருப்பவனும்
நெளிந்து ஊறும் பாம்பின் செந்நிற தலையும் அதில் மின்னும் மரகதமும்
எட்டுத்திக்கிலும் விதவிதமாக வர்ணங்களை ஜொலிக்கச் செய்ய,
போதைமயக்கத்தில் ஆழ்ந்த மாபெரும் யானையின் தோலை ஆடையாய் உடுத்தியுள்ள எம்பெருமான் சிவனில் லயித்து
நான் அளவற்ற இன்பம் பெறவேண்டும்
சஹஸ்ர லோசன பிரபிர்த்யா ஷேஷலேகஷேகரா
பிரசுண துலிதோரணி விதுசராங்ரிபிதபுஹு
புஜங்கராஜா மாலயா நிபத்தஜடாஜுடகா
ஷ்ரியை சிராய ஜாயாதாம் சகோர பந்தூஷேகரஹ
நிலவை மகுடமாக அணிந்தவனும்
சிவப்பு-நிற பாம்பைக் கொண்டு ஜடாமுடியை கட்டியவனும்
இந்திரன், விஷ்ணு மற்றும் பிற கடவுள்களின் தலைகளில் இருந்து வீழும்
மலர்களால் அவன் பாதம் வைக்கும் இடம் கறைபடிந்து போயிருக்க
எம்பெருமான் சிவன் நம் அனைவருக்கும் வளம் அளிக்கட்டும்
லலாதசத்வர ஜ்வலதனஞ்ஜய ஸ்ஃபுலிங்கபா
நிபீடபஞ்சசாயகம் நமன்ன்லிம்பநாயகம்
சுதா மயூக லேகயா விராஜமாணஷேகரம்
மகா கபாலி சம்பதே ஷிரோஜடாலமாஸ்துனஹ
இளம்பிறை சூடிய அழகனும், காமனைக் காய்ந்த நுதல்விழிகோண்டவனும் தேவர்களால் துதிக்கப்படுபவனு்மான ஈசனின்ன் திருச்சடையைப் பணிந்து நாம் சகல சித்திகளையும் அடைவோமாக.
கரால பால பட்டிகாதகத் தகத்தக ஜ்வலா
தனஞ்சய ஹுதிக்ருத பிரச்சண்டபஞ்சசாயகே
தாரதரேந்திர நந்தினி குசாகிரசித்ரபத்ரக
பிரகல்பனைகஷில்பினி த்ரிலோசனே ரதீர்மமா
முக்கண் உடையவனும்
சக்திவாய்ந்த காமதேவனை அக்னிக்கு இறையாக்கியவனும்
“தகத் தகத்” எனும் சப்தத்திற்கேற்ப அதீத சக்திகொண்ட அவன் நெற்றியில் அக்னி தகிக்க
பர்வதராஜனின் மகளான பார்வதி தேவியின் மீது அழகழகாக அலங்காரக் கோடுகள்
வரையக்கூடிய ஒரே ஓவியனுமான
எம்பெருமான் சிவனில் மட்டுமே நான் ஈடுபாடு கொண்டுள்ளேன்
நவீன மேக மண்டலி நிருத்ததுர்தரஸ்புரத்
குஹு நிஷிதினிதமா பிரபந்தபத்தகந்தரஹ
நிலிம்பனிர்ஜரி தரஸ்தனோது க்ரிதி சிந்துரஹ
கலானிதானபந்துராஹ் ஷ்ரியம் ஜகதுரந்தரஹ
இந்தப் பிரபஞ்சத்தின் எடையைத் தாங்குபவனும்,
நிலவை அணிந்து அனைவரின் மனதை கவர்பவனும்
புனித கங்கையைக் கொண்டவனும்
அமாவாசை நள்ளிரவு வானில் மிதக்கும் மேகம் போல்
கருநிற கழுத்துடையவனுமான
எம்பெருமான் சிவன் அனைவருக்கும் வளம் அளிக்கட்டும்.
பிரஃபுல்ல நீல பங்கஜ பிரபஞ்சகாலிம்ச்சதா
வ்தம்பி கந்தகண்டலி ரரூச்சி பிரபத்தகந்தரம்
ஸ்மரச்சிதம் புரச்சிதம் பவச்சிதம் மகச்சிதம்
கஜச்சிதாந்தகச்சிதம் தமம்தகச்சிதம் பஜே
கோவில்களின் பிரகாசம் மிளிரும் கழுத்தும்,
பிரபஞ்சத்தின் கருமையை வெளிப்படுத்தும் முழுதாய் மலர்ந்த
நீலநிற தாமரைகள் அலங்கரித்த கழுத்தும் கொண்ட
மன்மதனை அழித்த, திரிபுராவை அழித்த,
லௌகீக வாழ்வின் பற்றுகளை அழித்த, யாகத்தை அழித்த,
இராட்சசன் அந்தகனை அழித்த, யானைகளை அழித்த,
இறப்பின் கடவுள் யமனை உணர்ச்சிவசப்படச் செய்தவனுமாகிய
எம்பெருமான் சிவனை நான் வேண்டுகிறேன்.
அகர்வகர்வ சர்வமங்களா கலாகதம்பமஞ்சரி
ரசப்பிரவாஹ மாதுரி விஜ்ரும்பனா மதுவ்ரதம்
ஸ்மராந்தகம் புறாந்தகம் பவாந்தகம் மகாந்தகம்
கஜாந்தகாந்த காண்டகம் தமந்தகாண்டகம் பஜே
சுற்றியிருக்கும் புனிதமான கடம்ப மலர்களில் இருந்து வெளிவரும்
தேனின் இனிய வாசத்தை முகர்ந்து அலைபாயும் தேனீக்கள் சூழ்ந்திருக்கும்,
மன்மதனை அழித்த, திரிபுராவை அழித்த,
லௌகீக வாழ்வின் பற்றுகளை அழித்த, யாகத்தை அழித்த,
இராட்சசன் அந்தகனை அழித்த, யானைகளை அழித்த,
இறப்பின் கடவுள் யமனை உணர்ச்சிவசப்படச் செய்தவனுமாகிய
எம்பெருமான் சிவனை நான் வேண்டுகிறேன்.
ஜயத்வதபிரவிப்பிரம பிரமத்புஜங்கமாசஃபூர்
திக்திக்தி நிர்கமத்கரால பால் ஹவ்யவாத்
திமித்திமித்திமித்வ நன்ம்ருதங்கதுங்கமங்கள
த்வனிக்ரமப்பிரவர்த்திதா பிரச்சண்ட தாண்டவ சிவா
உயரிய நெற்றியில் எரியும் நெருப்பு…
கழுத்தில் இருந்தவாறு வானில் நெளிந்து ஆடும் பாம்பின்
மூச்சால் எல்லாத் திசைகளிலும் பரவ
“திமத் திமத்” என்று ஒலிக்கும் மத்தளத்தின் ஓசையோடு ஒன்றி
தாண்டவமாடுகிறார் எம்பெருமான் சிவன்.
த்ருஷத்விசித்ர தல்பயோர் புஜங்க மௌக்தி கஸ்ரஜோர்
கரிஷ்தரத்ன லோஷ்டயோ சுஹ்ருத்வி பக்ஷபக்ஷயோஹ்
த்ருஷ்ணரவிந்த சக்ஷுஷோ பிரஜாமஹி மஹேந்திரயோஹ்
சம பிரவர்தயன்மனா கடா சதாஷிவம் பஜே
சாதாரண மனிதனையும் அரசனையும் ஒன்றாய் பாவிக்கும்
புல்லையும் தாமரையையும் ஒன்றாய் பாவிக்கும்
நண்பர்களையும் எதிரிகளையும் ஒன்றாய் பாவிக்கும்
விலையுயர்ந்த மாணிக்கத்தையும் கைப்பிடி மண்ணையும் ஒன்றாய் பாவிக்கும்
பாம்பையும் மலர் மாலையையும் ஒன்றாய் பாவிக்கும்
அவ்வளவு ஏன் உலகின் வெவ்வேறு படைப்புகளையுமே ஒன்றென பாவிக்கும்
என்றென்றும் அனுகூலமான கடவுள் சதாசிவனை,
நான் பூஜிக்கும் நாள் எப்போது வருமோ?
கடா நிலிம்பனிர்ஜரி நிகுஞ்சஜகோட்டரே வசன்ஹ்
விமுக்ததுர்மதி சதா ஷிரா ஸ்தமஜ்ஜலிம் வஹான்ஹ்
விமுக்தலோலச்சனோ லலாமபாலலக்னகா
ஷிவேதி மந்திரமுச்சரன் சதா சுகி பவாம்யஹம்
புனிதமான கங்கை நதியின் அருகில் குகையில் வாழ்ந்து
என் கைகள் எப்போதும் என் தலைமீது கூப்பியிருக்க
புனிதமற்ற என் எண்ணங்கள் நீங்கி
பிரகாசமான நெற்றிகொண்ட, மிகத் தீவிரமான கண்கள் கொண்ட
என் கடவுளின் மீதான பக்தியில் ஒவ்வொரு கணமும்
சிவன் எனும் திருமந்திரத்தை உச்சரித்துக் கொண்டே
நான் மகிழும் நாள் எப்போது வரும்?
இமாம் ஹி நித்யமேவா முக்தமுட்டமோட்டமம் ஸ்தவம்
பதன்ஸ்மரன் புருவண்ணரோ விஷுத்திமேதி சந்ததம்
ஹரே குரவ் சுபக்திமாஷு யதி நன்யத கதிம்
விமோஹனம் ஹி தேஹினம் சுஷங்கரஸ்ய சிந்தனம்
இம்மேலான துதியைப் பாடுவோர், ஞானகுருவாம் சிவனின் அருளும், புனிதமும் பெறுவர். அறியாமை நீங்கி சங்கரன் அருளைப் பெற, இதைவிட வேறு இலகுவான வழியில்லை. சிவன் என்ற எண்ணம், சிவனின் நினைவு வந்தாலே இருக்கும் மயக்கம் அனைத்தும் தெளிந்துவிடும்.
பூஜா வசான ஸமயே தச வக்த்ர கீதம்
யஃ ஸம்பு பூஜானா பரம் பததி ப்ரதோசே
தஸ்ய ஸ்திராம் ரத் கஜேந்த்ர துரங்க யுக்தம்
லக்ஷ்மீம் ஸதைவ ஸூமுகிம் ப்ரததாதி ஸம்புஃ
தினமும் மாலையில், பிரதோச வேளையில், பூசையின் முடிவில், தசவக்கிரன் பாடிய இச்சிவதுதியைக் கூறி ஈசனைத் தியானிப்போர், திருமகளும், நாற்படையும் சூழ வளங்கொண்டு விளங்குவாராக.
இதி ஸ்ரீராவண க்ருதம்
சிவ தாண்டவ ஸ்தோத்திரம்
சம்பூர்ணம்
September 19, 2025
September 17, 2025
September 15, 2025