Skanda Shasti 2025: Invoke Warrior-God Muruga during the Six Power Days for Victory & Transformation Blessings Join Now
செல்வ செழிப்புடன் வாழ மூன்றாம் பிறை பரிகாரம்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

செல்வ செழிப்புடன் வாழ மூன்றாம் பிறை பரிகாரம்

Posted DateDecember 4, 2024

அமாவாசை கழிந்து வரும் மூன்றாம் நாளில் காணப்படும் சந்திரனை பிறை சந்திரன் என்றும் மூன்றாம் பிறை சந்திரன் என்றும் கூறுவோம். மூன்றாம் பிறை சந்திரன் தரிசனம் செய்வது மிகவும் நல்லது. அதன் மூலம் அதிர்ஷ்டம் கூடும் என்று கூறுவார்கள். மூன்றாம் பிறை தரிசனம் செய்வதால் நமது முற்பிறவி பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இந்த தரிசனத்தை மாலை 6.30 மணிக்கு மேல் மேற்கொள்ள வேண்டும்.  திங்கட்கிழமை மூன்றாம் பிறையை பார்த்துவிட்டால் ஒரு வருடம் மூன்றாம் பிறை தரிசனம் செய்த பலன் கிட்டும்.

சிவ பெருமான் தனது தலையில் மூன்றாம் பிறையைச் சூடி உள்ளார். அதனால் தான் மூன்றாம் பிறை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது மிக விசேஷமானதாக கருதப்படுகிறது. இந்த மூன்றாம் பிறையை நீங்கள் பார்த்து விட்டால் சிவனையே தரிசனம் செய்த பலன் கிட்டும் என்பதும் ஐதீகம். இதற்கு விசேஷமான சிறப்பு இருக்கின்றது. இது தெய்வீக பிறையாக கருதப்படுகிறது.

நவகிரகங்களில் சந்திர பகவான் மிகவும் முக்கியமானவர். சந்திரன் சோமன் என்றும் அழைக்கப்படுவார். அதனால் தான் திங்கட்கிழமையை சோமவாரம்  என்று கூறுவார்கள். மனோகாரகன் என்று கூறப்படும் சந்திரனின் மூன்றாம் பிறையை வழிபடுவதன் மூலம் நமது வாழ்வில் புண்ணியமும் அதிர்ஷ்டமும் கூடும்.  உங்கள் துன்பங்கள் நீங்கும். வாழ்வே செல்வச் செழிப்பாக மாறும்.

திங்கட்கிழமை அன்று மூன்றாம் பிறை வருவது மிகவும் சிறப்பு. அன்றைய தினம் மேற்கொள்ளப்படும்  சந்திர  தரிசனத்தின் காரணமாக நற்பலனும் புண்ணியமும் பன்மடங்கு கிடைக்கிறது.

இன்று  செய்யக்கூடிய ஒரு தாந்திரீக பரிகாரம் நம்முடைய வாழ்க்கையில் செல்வ செழிப்பை அதிகரிக்கும். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த  பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

திங்கட்கிழமை  மற்றும் மூன்றாம் பிறை சேர்ந்து வரும் இந்த நாளில் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம் மிகவும் எளிமையானது. பஞ்சாங்கத்தின் படி டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி மாலை 5:31 மணி முதல் 6:29 மணிக்குள் மூன்றாம் பிறை தெரியும் என்று கூறப்படுகிறது. இந்த நேரத்தில் சந்திர தரிசனத்தை செய்வதோடு இந்த பரிகாரத்தையும் செய்யலாம். ஒருவேளை இந்த நேரத்தை தவறவிட்டவர்கள் அன்று இரவு 12 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். அன்றைய தினம் நீங்கள் மாலைகுறிப்பிட்ட நேரத்தில்  பூஜை அறையில் விளக்கு ஏற்றுங்கள். பிறகு சந்திர தரிசனம் மேற்கொள்ளுங்கள். அவ்வாறு சந்திர தரிசனம் மேற்கொள்ளும் போது கையில் சிறிது பச்சரிசி மற்றும் ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சந்திரனை நோக்கி கீழ்க்கண்ட மந்திரத்தை பதினோரு முறை கூறுங்கள்.

 ஓம் ஸ்ரீம் க்ரீம் ஹீம் ரம் சம் சந்த்ராய நமஹ

பிறகு அந்த நாணயத்தை ஒரு வெள்ளை நிறத் துணியில் கட்டி உங்கள் பணப் பெட்டியில் வைத்துக் கொள்ளுங்கள். அல்லது பீரோவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த பச்சரிசியை அடுத்த நாள் கால் படாத இடத்தில் எறும்புக்கு உணவாக போட்டு விடுங்கள்.

எந்தவித வழிப்பாடும் இல்லாமல் செய்யக்கூடிய இந்த தாந்திரீக பரிகாரத்தை முழு மனதுடன் செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் செல்வ வளம் அதிகரிப்பதற்குரிய வாய்ப்புகள் வரும்