Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
மாத சஷ்டி விரதம் ஏன்? எதற்கு? எப்படி? விளக்கங்கள்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

சஷ்டி விரதம் ஏன்? எதற்கு? எப்படி? விளக்கங்கள்

Posted DateFebruary 2, 2024

நாம் பல்வேறு விதமான விரத நாட்களைக் கொண்டாடுகிறோம். அதில் முக்கியமாக கொண்டாடப்படுவது சஷ்டி விரதம் ஆகும். இந்த சஷ்டி விரதம் ஏன் இருக்க வேண்டும். எப்படி விரதம் இருப்பது போன்ற கேள்விகள் மனதில் எழலாம்.

சஷ்டி விரதம் என்பது முருகப் பெருமானுக்கு இருக்கும் முக்கிய விரதம் ஆகும். சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையில் குழந்தை வரும் என்ற ஒரு பழமொழி உள்ளது. அதாவது  சஷ்டியில் விரதம் இருந்தால் கருவில் குழந்தை உண்டாகும் என்று பொருள்.

பொதுவாக குழந்தை இல்லாதவர்கள் மாதா மாதம் வரும் சஷ்டியில் விரதம் இருக்கலாம். தீபாவளி முடிந்து வரும் சஷ்டி விரதம் மகாசஷ்டி விரதம் எனப்படும். இந்த திருநாளை கந்த சஷ்டி என்றும் கூறுவார்கள். குழந்தை இல்லாதவர்கள் இருக்க வேண்டிய விரதம் கந்த சஷ்டி விரதம் ஆகும்.

கணவன் மனைவி சேர்ந்து விரதம் இருக்கலாம். அல்லது தனியாகவும் இருக்கலாம். ஆனால் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து விரதம் இருப்பது நல்ல பலனை அளிக்கும்.  முடிந்தவர்கள், ஆரோக்கியம் அனுமதித்தால் உண்ணாமல் விரதம் இருக்கலாம். சர்க்கரை நோய் அல்லது வேறு நோய் உள்ளவர்கள் தங்கள் ஆரோக்கியத்திற்கு தக்க வகையில் விரதம் இருக்கலாம்.

விரதம் எப்படி இருக்க வேண்டும்.

காலையில் இருந்து சாப்பிடாமல் இருக்க வேண்டும்.

ஆறு நாளும் சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் குடித்து இந்த விரதம் இருக்கலாம். எந்தவிதமான  விரதம் இருந்தாலும் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். தண்ணீர் அதிகம் குடித்தால் தான் இந்த உடல் அற்புதமான இயக்கத்தை கொடுக்கும்.

பால் விரதம் என்று ஒன்று உண்டு.   காலையில் அல்லது மாலையில் முருங்கனுக்கு அபிஷேகம் செய்த பால் மட்டும் அருந்தி விரதம் இருக்கும் முறை.

பால் மற்றும் பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். காலையில் ஒரு வேளையோ அல்லது காலை மாலை என்று இரண்டு வேளையோ  பால் மற்றும் பழம் உண்டு விரதம் இருப்பது.  

ஒரு சிலர் கடுமையான விரதம் இருப்பார்கள். அவ்வாறு கடுமையான விரதம் இருப்பவர்கள் முதல் நாள் ஒரு மிளகு, இரண்டாவது நாள் இரண்டு மிளகு, மூன்றாவது நாள் மூன்று மிளகு இவ்வாறு ஆறாவது நாள் ஆறு மிளகு உட்கொண்டு விரதம் இருக்கலாம்.

ஒரு சிலர் இளநீர் விரதம் இருப்பார்கள். இளநீர் மட்டும் அருந்தி விரதம் இருப்பது.

துளசி தண்ணீர் அருந்தி விரதம் இருக்கலாம்.

ஒரு சிலர் ஒரு வேளை மட்டும் உணவு உண்டு விரதம் இருப்பார்கள். இவ்வாறு பல்வேறு வகையான விரதங்கள் இருக்கலாம். உங்களால் எந்த விரதமிருக்க முடியுமோ அந்த விரதம் இருக்கலாம்.

விரதத்தை எங்கு இருக்கலாம்

இந்த விரதத்தை பிரபலமான கோவில் அல்லது ஆறுபடை வீடுகளில் இருக்கலாம். கோவிலுக்கு செல்ல இயலாவிடில் வீட்டில் விரதம் இருந்து ஆறாவது நாள் கோவிலுக்கு செல்லலாம்.

குழந்தை இல்லாதவர்கள் அருணகிரிநாதர் அருளிய சுவாமிமலை திருப்புகழ் பாராயணம் செய்யலாம். சஷ்டி கவசம் பாராயணம் செய்யலாம். இந்த கவசத்தை உள்ளம் உருகி பக்தியோடு முருகனின் திருவடியை பற்றிக் கொண்டு பாராயணம் செய்வதன் மூலம் பல நன்மைகளைப் பெறலாம். குறிப்பாக குழந்தைப் பேறு பெறலாம்.

அறிவியல் ரீதியாக விரத பலன்

வருடத்தில் 365 நாளும் நமது இரைப்பை இயங்கிக்கொண்டே இருக்கிறது. இதற்குச் சற்று ஓய்வு கொடுத்தால் உடலின் இயக்கங்கள் சீராகும்.  

நமது உடலை இயக்கும் ‘உயிர்சக்தி’ மூன்று சக்திகளாகப் பிரிந்து வேலை செய்து வருகிறது. உடல் ஒரு நேரத்தில் ஒரு வேலை தான் செய்யும், அதைத் துல்லியமாகச் செய்து முடிக்கும்.

  1. 1.செரிமான சக்தி
  2. 2.இயக்கச் சக்தி
  3. 3.நோய் எதிர்ப்புச் சக்தி

உண்ணா நோன்பு இருக்கும் போது செரிமான சக்திக்கு அதிக வேலை இருக்காது, எனவே இதன் சக்தியும், ஓய்வில் இருத்தால் இயக்கச் சக்தியும் நோய் எதிர்ப்பு சக்திகளாக உருமாறும். இதனால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்துப் பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்படுகிறது.உண்ணா நோன்பு இருப்பதால், உடல் ஆரோக்கியம் பெறும் என்பது அறிவியல் உண்மை.இதற்காக நமது முன்னோர்கள் வருடத்தில் ஆறு நாள் தேர்வு செய்து வைத்துள்ளார்கள். அந்த ஆறு நாளும் ஆறுமுகனை மையப்படுத்தி அழகான ஒரு திருவிழாவாக வடிவமைத்து உள்ளார்கள்.

உடல் ரீதியாக என்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம் ?

  1. 1.அதிக உடல் எடை சீராகும்
  2. 2. முகம் பொலிவு பெறும்
  3.  3.கண்ணில் ஒளி வீசும்
  4. 4.சுறுசுறுப்பு அதிகரிக்கும்
  5. 5.இரத்தம் தூய்மை பெறும்
  6.  6.தோலின் நிறம் சீராகும்
  7.  7.மன உளைச்சல் குறையும்
  8.  8.கவலை, பயம், கோபம் குறையும்
  9.  9.புத்துணர்வு கிடைக்கும்
  10.  10.உடல் பலம் பெறும்
  11.  11.மன அமைதி பெறும்
  12. 12.ஆழ்ந்த தூக்கம் வரும்

ஆக மொத்தத்தில் உடலில் ஆரோக்கியமும்! எண்ணத்தில் அழகும்! மனதில் நிம்மதியும்! கிடைக்கும்.நீங்கள் எதிர்பார்க்காத இன்னும் பல எண்ணிலடங்கா அதிசயங்கள் நிகழலாம். உங்கள் அனைத்து பிரச்சனைகளை அழித்துவிடும். நோய் நொடிகள் நீங்கும். தொழிலில் மேன்மை பெறலாம். முன்னேற்றம் கிட்டும். வாழ்வில் வளங்கள் பெருகும்.