இது கொரண்டம் குடும்பத்தைச் சேர்ந்தது. இது கரு நீலம் முதல் வெளிர் நீலம் வரை பல வித வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் இராசாயன பொருட்கள் அலுமினியம் ட்ரை ஆக்சைடு ஆகும். இதன் கடினத்தன்மை 9. இதன் அடர்த்தி எண், 4 இதன் ஒளிவிலகல் எண் 1.76-1.77. இது சனி பகவானுக்கு உரிய ரத்தினம் ஆகும்.
நீல கற்கள் பொறாமை மற்றும் கண் திருஷ்டியை விரட்டும். சுகமான ஆபத்தில்லாத பயணங்களைத் தரும். மன அமைதி அளிக்கும். இட மாறுதலை ஏற்படுத்தி, நாள்பட்ட துன்பங்களைத் துடைக்கும். அழகான, ஒளி மிகுந்த ஆழ்ந்த நீல நிறமுடைய நீல கற்கள் கண்களைக் கவர்பவை. நீலக் கல்லை பரிசோதனை செய்து பார்க்காமல் அணியக் கூடாது. தோஷமற்ற கல் அமைந்து அதனை அணிபவருக்கும் பொருந்தி விட்டால் ஏழ்மையைத் தொலைத்து செல்வத்தை அள்ளித் தரும். உடல் நலம், நீண்ட ஆயுள், மகிழ்ச்சி, செல்வச் செழிப்பு, பெயர் புகழ் யாவும் தரும். இழந்த செல்வம் மற்றும் சொத்துக்களை மீட்டுத் தரும். நீல ரத்தினம் அணிவதால் வாதநோய், சிறுநீரக கோளாறு, கீல்வாதம் போன்றவற்றை குணப்படுத்தும். தீராத வெண் குஷ்டத்தை நீலக் கற்கள் தீர்க்கும். வாதநோய், பாரிச வாய்பு, எலும்பு வியாதி, பல் நோய், ஜலதோஷம், சித்த சுவாதீனம், உடல் சோர்பு, மந்த நிலை போன்ற நோய்களிலிருந்தும் ஓரளவுக்கு விடுதலை கிடைக்கும். நீலக்கல் அணிவதால் நம்மை பிடித்துள்ள நீச குணங்கள் விலகி சனி கிரகத்தின் அருளை முழுமையாகப் பெறமுடியும்.
நீலக் கல்லை சனி கிரகத்தின் ஆதிக்கத்திற்குள்ளோரான மகர, கும்ப ராசி உடையவர்களும், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, சனி திசை போன்றவை நடப்பவர்களும் எண் கணிதப்படி 8,17, 26 எண்ணில் பிறந்தவர்களும் அணியலாம். மருத்துவ ரீதியாகவும். நீலக்கல்லை வெள்ளியில் பதித்து உடலில் படும்படி நடுவிரல் அல்லது ஆள்காட்டி விரலில் அணிந்து கொள்ள வேண்டும். சனிக்கிழமைகளில் அணிவது உத்தமம்.
அக்கோமரின். நீலக்கல்லிற்குப் பதிலாக இந்த டர்காய்ஸ் அல்லது அக்கோமரின் கற்களையும் அணியலாம். இதுவும் பார்ப்பதற்கு அழகாகவும், வெளிர்நீல நிறமுடையதாகவும் விலையில் சற்று குறைவாகவும் கிடைக்கின்றது. சனியால் ஏதாவது பாதிப்பு உடையவர்கள் அக்காலங்களில் மட்டும் இக்கற்களை அணிந்து கொள்ளலாம். மற்றோர் அணிவது கூடாது.
September 11, 2025
September 10, 2025
September 10, 2025