கனவுகள் என்பது நம் ஆழ் மனதில் உள்ள ஆசைகள் மற்றும் பயங்கள் பற்றியதே. அந்த பதிவுகளே கனவுகளாக நம் கண் முன்னே வருகின்றன. பொதுவாக நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவுகள் வருகின்றன.
அவ்வாறு நாம் கண்ட கனவு முழுவதும் நமது நினைவிற்கு வராமல் போகலாம். ஒரு சிலர் தாம் கண்ட கனவை அப்படியே விவரிப்பார்கள். சிலருக்கு அது மறந்தே போயிருக்கும். ஒரு சிலருக்கு கனவின் ஓரிரு காட்சிகள் மட்டும் நினைவில் இருக்கும். அதிகாலையில் நாம் காணும் கனவு பலிக்கும் என்று கூறுவார்கள். அதிகாலையில் நல்ல கனவு வந்தால் எழுந்து கை கால்களை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.. மீண்டும் தூங்கக் கூடாது. அப்பொழுது தான் அந்தக் கனவு பலிதம் ஆகும் என்பார்கள்.
கனவில் பெரும்பாலும் நாம் வாழ்ந்த இடம், நாம் சந்தித்தை மனிதர்கள், நாம் சென்று வந்த ஊர்கள் இப்படி நமது ஆழ்மனதில் இருக்கும் விஷயங்கள் தான் வரும். நமக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்கள் கனவில் வரும் பொழுது அது பூர்வ ஜென்ம தொடர்பாக இருக்கலாம்.
கனவு என்பது நமது வாழ்வில் நமக்கு ஏற்படும் நன்மை பற்றும் தீமைகளை முன்கூட்டியே தெரிவிப்பதற்கு வருகிறது என்று நம் முன்னோர்கள் கூறுகிறார்கள். இந்த பதிவில் சாமி ஆடுவது போல் கனவு கண்டால் என்ன பலன் என்று காணலாம் வாருங்கள்.
ஒரு சிலருக்கு சாமி ஆடும் பழக்கம் இருக்கும். இதற்கு அருள் வந்து ஆடுதல் என்றும் கூறுவார்கள். அப்படி அருள் வந்து ஆடுவது போலக் கனவு வந்தால் இறையருள் கிட்டிவிட்டது என்பது பொருள். இப் பிறவியை நீண்டகாலம் நன்கு வாழ்ந்து அதன் முடிவில் பிறவிக் கடல் நீந்திவிடப் போகிறீர்கள் என்பது பொருள்.
அருள் வருவது போல கனவில் வந்தால் காலையில் எழுந்து குளித்து முடித்து வீட்டில் சாமி கும்பிடுங்கள். பிறகு அருகில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று உங்களால் இயன்ற தான, தர்மங்களை செய்ய வேண்டும் இப்படி செய்வதன் மூலம் உங்கள் ஆழ் மனதில் இருக்கக்கூடிய ஆசைகள் உடனே நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.
October 27, 2025
September 19, 2025
September 17, 2025