வேத ஜோதிடத்தில் 12 ராசிகள் உள்ளன. மற்றும் 27 நடசத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திரமும் 4 பாதங்கள் கொண்டவை. ஓரு ராசி மண்டலம் என்பது 360 பாகை கொண்டவை. ஒவ்வொரு ராசியும் 30 பாகை கொண்டவை. ஒவ்வொரு நடச்சத்திரமும் 13.20 பாகை கொண்டவை. நட்சத்திரத்தின் ஒவ்வொரு பாதமும் 3.20 பாகை கொண்டவை.
ஒரு நட்சத்திரத்திற்கு 4 பாதங்கள் வீதம் இருபத்திஏழு நட்சந்திரங்களுக்கு 108 பாதங்கள். அவற்றை பன்னிரண்டு ராசிகளுக்கு பிரித்து அளிக்கப்பட்டுள்ளது. ஒரு ராசிக்கு 9 பாதங்கள் வீதம் பன்னிரண்டு ராசிகளுக்கு 108 பாதங்கள்
மேஷம் | அசுவினி 1,2,3,4 பாதங்கள் , பரணி1,2,3,4, பாதங்கள் கார்த்திகை 1-ஆம் பாதம் |
ரிஷபம் | கார்த்திகை 2,3,4 , ரோகிணி 1,2,3,4 பாதங்கள், மிருகசிரிஷம் 1,2 பாதங்கள் |
மிதுனம் | மிருகசிரிஷம் 3,4 பாதங்கள் , திருவாதிரை 1,2,3,4, பாதங்கள் , புனர்பூசம் 1,2,3 பாதங்கள் |
கடகம் | புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம் 1,2,3,4 பாதங்கள், ஆயில்யம் 1,2,3,4, பாதங்கள் |
சிம்மம் | மகம்1,2,3,4 பாதங்கள், பூரம்,1,2,3,4 பாதங்கள், உத்திரம் 1-ஆம் பாதம் |
கன்னி | உத்திரம் 2,3,4, பாதங்கள் அஸ்தம் 1,2,3,4,பாதங்கள், சித்திரை 1,2 பாதங்கள் |
துலாம் | சித்திரை 3,4 பாதங்கள் சுவாதி1,2,3,4,பாதங்கள், விசாகம் 1,2,3 பாதங்கள் |
விருச்சிகம் | விசாகம் 4-ஆம் பாதம் அனுஷம்1,2,3,4,பாதங்கள் , கேட்டை1,2,3,4,பாதங்கள் |
தனுசு | மூலம்1,2,3,4 பாதங்கள், பூராடம் 1,2,3,4 பாதங்கள், உத்திராடம் 1-ஆம் பாதம் |
மகரம் | உத்திராடம் 2,3,4 பாதங்கள் திருவோணம்1,2,3,4,பாதங்கள் அவிட்டம் 1,2 பாதங்கள் |
கும்பம் | அவிட்டம் 3,4 -ஆம் பாதம் சதயம்1,2,3,4,பாதங்கள், பூரட்டாதி 1,2,3 பாதங்கள் |
மீனம் | பூரட்டாதி 4-ஆம் பாதம் உத்திரட்டாதி 1,2,3,4 பாதங்கள் ரேவதி 1,2,3,4 பாதங்கள் |
சந்திரனை வைத்துத் தான் ஒருவரது ராசியைக் கூற முடியும். சந்திரன் ஒரு ராசியில் பயணம் செய்ய 2 ¼ நாட்கள் ஆகும். ஒரு நட்சத்திரத்தில் பயணம் செய்ய சந்திரன் சுமார் 1 நாளை எடுத்துக் கொள்கிறார். 12 ராசிகளுள் 27நட்சத்திரங்கள் வழியாகப் பயணம் செய்து, ராசி மண்டலத்தை ஒரு முறை சுற்றி வர, சந்திரன் சுமார் 28 அல்லது 29 நாட்கள் எடுத்துக் கொள்கிறார்.
சந்திரன் ஒரு நட்சத்திரத்தில் இருக்கும் பொழுது பிறக்கும் குழந்தைக்கு, அந்த நட்சத்திரமே ஜன்ம நட்சத்திரம் ஆகிறது. இது போலவே, சந்திரன் பயணித்துக் கொண்டிருக்கும் ராசியில் பிறக்கும் குழந்தைக்கு, அதுவே ஜன்ம ராசியாகிறது. இவ்வாறு ஒருவரது நட்சத்திரம், ராசி ஆகியவற்றை முடிவு செய்வது சந்திரன் தான் என்பதால், இவருக்கு ஜோதிடத்தில் பெரும் பங்கு உள்ளது.
ராசி நட்சத்திரம் கண்டறிவது எப்படி?
ஒருவரது ராசி நட்சத்திரம் போன்றவற்றைக் கண்டறிவது இந்தக் கணினி யுகத்தில் எளிமையாகி விட்டது. கணினியில் அமைந்துள்ள ராசி கால்குலேட்டர் எனப்படும் எளிய அமைப்பு அல்லது சாதனத்தில், ஒருவரது பிறந்த மாதம், தேதி, வருடம், நேரம், இடம் ஆகியவற்றை பதிவு செய்வதன் மூலம், அவரது ராசி நட்சத்திரம் ஆகியவற்றை உடனடியாகப் பெற முடியும். தமிழ் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் இந்த வசதி உள்ளதால், ராசி நட்சத்திரம் என்றோ, அல்லது Rasi Natchathiram, Rasi Natchathiram in Tamil என்றோ தேடி, ராசி கால்குலேட்டரில் உரிய தகவல்களை அளித்து, ராசி நட்சத்திரம் போன்ற, தங்களது பல ஜோதிடத் தகவல்களை பலரும் தெரிந்து கொள்ளலாம்.
September 11, 2025
September 10, 2025
September 10, 2025