இந்த பூ உலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தோஷத்துடன் தான் பிறக்கிறோம். ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை பலவகையான ஜாதக தோஷங்கள் குறித்து கூறப்படுகின்றன. அவற்றுள் ஒன்று “பித்ரு தோஷம்”. அது ஒரு ஜாதகருக்கு மிகவும் பாதகமான பலன்களை தரக்கூடிய ஒரு தோஷமாக கருதப்படுகிறது. இந்த பித்ரு தோஷம் நீங்க மிக சிறப்பான பரிகாரம் என்பது ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாத சுவாமி கோயிலுக்கு சென்று அங்கு பித்ரு தோஷ பரிகாரம் செய்வது தான் என ஜோதிட வல்லுனர்களும், ஆன்மீகப் பெரியோர்களும் கூறுகின்றனர். அந்த வகையில் இந்த பித்ரு தோஷம் என்றால் என்ன? இந்த பித்ரு தோஷத்தின் அறிகுறிகள் என்ன? ராமேஸ்வரத்திற்கு சென்று பித்ரு தோஷ பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பன போன்ற பல விவரங்களை இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.
பித்ரு தோஷம் லக்னத்தில் இருந்து ஒன்பதாம் வீட்டை வைத்து கணக்கிடப்படுகிறது. ராகு, கேது, சனி சூரியன் ஆகிய கிரகங்கள் 9ம் வீட்டில் இருப்பது அல்லது ஒன்பதாம் வீட்டை பார்த்தால் பித்ரு தோஷம் எனப்படும்.
பித்ரு தோஷ நிவர்த்திக்கான பரிகாரம் என்ன?
பித்ரு தோஷ நிவர்த்திக்கான சில பரிகாரங்கள்
பித்ரு பூஜை
நாக சாந்தி ஹோமம்
திலஹோமம்
நவகிரக சாந்தி ஹோமம்
ஸ்படிக லிங்க பூஜை
சோம வார விரதம்
மிருத்யுஞ்சய மந்திர பாராயணம்
கோ பூஜை
குடும்பத்தில் அமைதியின்மை
எதிர்பாராத திடீர் செலவுகள்
அடிக்கடி கரு கலைதல்
குழந்தைப் பேற்றில் தாமதம்
திருமண தாமதம்
நல்ல வேலையின்மை
நல்ல ஆரோக்கியமின்மை, அடிக்கடி நோய்வாய்ப்படுதல்
குடும்பத்தில் திடீர் மரணம், விபத்து
தற்கொலை அல்லது குடும்பத்தினரின் அகால மரணம்
குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சுமுக உறவின்மை
பித்ரு தோஷம் பற்றி அறிய எங்கள் ஜோதிடரை அணுகவும்
பித்ரு தோஷ பரிகாரம் செய்யும் நாளன்று அதிகாலையில் எழுந்து, ராமேஸ்வர கோயில் வளாகம் சுற்றி இருக்கின்ற 22 வகையான புனித தீர்த்தங்களில் தங்கள் அணிந்திருக்கும் உடையுடன் நீராட வேண்டும். அதன் பிறகு அக்னி தீர்த்த கடற்கரைக்கு சென்று அந்த தீர்த்தத்தில் புனித நீராடல் மேற்கொள்ள வேண்டும். நீராடிய பிறகு அணிந்திருந்த ஈர ஆடைகளை களைந்து, புத்தம் புதிய அல்லது தூய ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். பிறகு ராமேஸ்வர கோயிலில் ராமநாத சுவாமியையும் மற்றும் பர்வத வர்த்தினி அம்பாளையும் வழிபாடு செய்ய வேண்டும். ராமேஸ்வரம் கோயிலில் வழிபட்டு முடிந்ததும், அக்னி தீர்த்த கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டும். இந்த அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
பின்வரும் ஆசீர்வாதங்களை பெற சிறப்பு வேத சடங்குகளுடன் கூடிய ஐந்து தனிப்பயனாக்கப்பட்ட தொகுப்புகளில் ஏதேனும் ஒன்றில் பங்கேற்க நீங்கள் தேர்வு செய்யலாம்:
திருமணம் – பொருத்தமான துணையை அடைவதில் உள்ள தடைகள் நீங்கும். கணவன் மனைவி மற்றும் குடும்பத்தார்களுடன் ஒற்றுமை, நல்லிணக்கம், புரிதல் மற்றும் நெருக்கம் ஏற்படுத்தும்.
குழந்தைப்பேறு– ஆரோக்கியமான குழந்தைகளைப் பெறுவதற்கான ஆசிகள் கிட்டும். கர்ப்பிணித் தாய் மற்றும் கருவின் நல்வாழ்வைப் பாதுகாக்கவும், பாதுகாப்பான குழந்தை பிறப்பை வழங்கவும், குழந்தைகளின் நல்வாழ்வைப் பாதுகாக்கவும் உதவும்.
ஆரோக்கியமான நல்வாழ்வு – நோய் எதிர்ப்பு சக்தி கிட்ட, உடல் மற்றும் மன நலம் மேம்பட, நாள்பட்ட உடல்நலக் கோளாறுகளால் ஏற்படும் துன்பங்களை நீக்கவும், நீண்ட ஆயுளை வழங்கவும் உதவும்.
கடன் தீர – கடன் தொடர்பான கர்மாவை ஒழிக்கவும், முன்னோர்கள் மற்றும் குருக்களுக்குக் கடனைத் திருப்பிச் செலுத்தவும், துரதிர்ஷ்டங்களை நீக்கி, செல்வம், செழிப்பு, மற்றும் அந்தஸ்தை பெற உதவும்.
முன்னோர்களின் ஆசிகள் பெற – ஏழு தலைமுறை முன்னோர்களை சாந்தப்படுத்தி, அவர்களை துன்பங்களிலிருந்து விடுவித்து, மூதாதையர் சாபங்களை நீக்கி, முன்னோர்களை முக்தி அடையச் செய்ய உதவும்.
September 12, 2025
September 12, 2025
September 11, 2025