புரட்டாசி மாதம் ஆரம்பமாகிவிட்டது. புரட்டாசி மாதம் என்றாலே பெருமாள் வழிபாடு தான் நமது நினைவிற்கு வரும். ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும் வெவ்வேறு சிறப்புகள் உண்டு. இந்த மாதத்தில் தான் பகவான் விஷ்ணு வேங்கடாசலபதியாக திருப்பதி பாலாஜியாக பூமியில் அவதரித்தார் என்பது ஐதீகம். இந்த மாதம் விரதம் இருப்பது குறிப்பாக சனிக்கிழமை விரதம் இருப்பது மாவிளக்கு போடுவது போன்ற விசேஷங்கள் இருக்கும்.
அற்புதமான இந்த மாதத்தில் நீங்கள் ஒரு மந்திரத்தைக் கூறி விளக்கேற்றுவதன் மூலம் உங்கள் அனைத்து கஷ்டங்களும் நீங்கும். செல்வம் சேரும் கடன்கள் தீரும். நோய்கள் நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்னியோன்யம் பெருகும். குழந்தைப் பேறு கிட்டும். அந்த மந்திரம் என்ன எவ்வாறு விளக்கேற்ற வேண்டும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
இந்த பரிகாரத்தை நீங்கள் புராட்டாசி மாதம் முழுவதும் செய்யலாம். அப்படி முடியாதவர்கள் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் செய்யலாம்.
இரண்டு புது அகல் விளக்குகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஒன்றில் நெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் வெள்ளை நிறத் திரியை வைத்து விடுங்கள். மற்றொன்றில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் நீலநிற திரியை வைக்க வேண்டும். இரண்டு விளக்குகளையும் பெருமாள் முன்பு வைத்து ஏற்ற வேண்டும். அவ்வாறு ஏற்றும் பொது கீழ்கண்ட மந்திரத்தை கூறிக் கொண்டே ஏற்ற வேண்டும்.
ஓம் வேங்கடேசாய நமஹ |
ஓம் லக்ஷ்மி பதயே நமோ நமஹ
விளக்கேற்றி மந்திரத்தைக் கூறி வணங்கி வழிபாடு செய்வதன் மூலம் உங்களுக்கு பவான் விஷ்ணுவின் ஆசியும் மகாலட்சுமியின் ஆசீர்வாதமும், பரிபூரணமாக கிடைத்துவிடும். இறைவன் மாதமான புரட்டாசி மாதம் அதிசக்தி வாய்ந்த நாளில் இந்த மந்திரத்தை சொல்லுவது மிகவும் நல்லது. அதேபோல இந்த புரட்டாசி மாதம் முழுவதும் காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை பார்த்து இந்த 1 வரி மந்திரத்தை வெறும் 3 முறை சொல்லி, உள்ளங்கைகளை முகத்தில் தடவிக் கொள்ளுங்கள். மகாலட்சுமி வாசம் உங்கள் உள்ளங்கையிலும் உங்களுடைய முகத்திலும் நிறைவாக இருக்கும்.
உங்களை பிடித்த தரித்திரம் எல்லாம் விலகி ஓடிவிடும். எவ்வளவு பெரிய பண பிரச்சனையாக இருந்தாலும் அதையெல்லாம் சரி செய்யக்கூடிய வாய்ப்புகள் இந்த மாதத்தில் உங்களைத் தேடி வரும். நீங்கள் விரும்பும் வேலை கிடைக்கும். தொழில் செய்ப்வர்க்ளுகு தொழில் சிறப்பாக நடந்து லாபம் கொழிக்கும். வீட்டில் அமைதி குடிகொள்ளும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
அதிசக்தி வாய்ந்த மந்திரத்தை எவர் ஒருவர் இந்த புரட்டாசி மாதம் முழுவதும் உச்சரிக்கிறீர்களோ அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கஷ்டம் இருக்காது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த எளிமையான ஆன்மீகம் செல்லும் வழிபாட்டை பின்பற்றி பாருங்கள் உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025