Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
பொன்னும், பொருளும் குவிய குபேர நைவேத்தியம்.
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

பொன்னும் பொருளும் குவிய குபேர நைவேத்தியம்.

Posted DateOctober 1, 2024

குபேரன் யார்?

உலகில் உள்ள அனைத்து செல்வத்திற்கும் அதிபதியாகத் திகழ்பவர் குபேரன்.  பக்தியுடன் முறையாக இவரை பூசித்தால் இவர் சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர். அழகாபுரி பட்டணத்தில், அழகிய அரண்மனையில், மீன்  ஆசனத்தில் அமர்ந்து ஆட்சி புரிபவர். தாமரை மலர் ஏந்தி, வரத முத்திரை காட்டி, தன்னை வணகுபவர்களுக்கு செல்வச் செழிப்பை அருள்பவர்.  வெண் குதிரை இவரது வாகனம். இவரது மடி மீது கீரிப்பிள்ளை அமர்ந்து இருக்கும். ஒவ்வொரு வியாழக்கிழமை மாலை 5:30 மணிமுதல் 6:00 மணி வரை `குபேர காலம்’ என்று வழங்கப்படுவதால், அந்த நேரத்தில் இவரை வணங்கினால், செல்வச் செழிப்பு உண்டாகும். பத்ம நிதி, மஹாபத்ம நிதி, மகர நிதி, கச்சப நிதி, குமுத நிதி, நந்த நிதி, சங்க நிதி, நீலம நிதி, பத்மினி நிதி என நவநிதிகளையும் பாதுகாத்து அருளுபவர். இதில் பதும நிதி, சங்க நிதி ஆகிய தெய்வ மகளிரின் கணவரும் இவர்தான். இவர் வெங்கடேச பெருமாளுக்கே கடன் கொடுத்தவர். இவர் வட திசைக்கு அதிபதி ஆவார்.இத்திசை நோக்கி வாழ்பவர்களுக்கு சிறப்பான பொருளாதார வளர்ச்சி உண்டு.

குபேரன் அருள் பெறுவது எப்படி?

வெள்ளிக்கிழமைகளில் வீட்டிற்குத் தேவையாக கல் உப்பு வாங்குங்கள்.  விதம் விதமாக ஊறுகாய் வாங்கி வீட்டில்  வையுங்கள் குபேரன் அருள் நிச்சயம் கிடைக்கும். ஒவ்வொரு வியாழக்கிழமை மாலை 5:30 மணிமுதல் 6:00 மணி வரை `குபேர காலம்’ என்று வழங்கப்படுவதால், அந்த நேரத்தில் இவரை வணங்கினால், செல்வச் செழிப்பு உண்டாகும்.குபேரனை ஒருவர் மனமுருகிப் பிரார்த்தித்தால், அவர் நிச்சயம் செல்வங்களை வழங்குவார்.  அந்த செல்வம் திடீர் செல்வமாக வந்து சேரும். அதாவது லாட்டரி, அறக்கட்டளைகளை ஏற்படுத்தி அடையும் சுய லாபம் போன்றவை வகையில்  செல்வங்கள் வரலாம். ஆனால் அவரது அருள் குறைந்தால்  திடீரென வந்த இந்த செல்வம் எப்படி ஒருவருக்கு வந்ததோ அதைப் போன்றே  விரைவில் மறைந்துவிடவும் செய்யும். எனவே இத்தகைய செல்வத்தை பெற்றவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு மரம் நடுதல், அன்னதானம், படிக்கும் குழந்தைகளுக்கு இலவசமாகக் கல்வி வழங்குதல்,  ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது போன்ற பொது காரியங்களில்செலவழிக்க வேண்டும். 

குபேர வழிபாடு:

பிரதி வியாழக்கிழமையன்று காலை குளித்து முடித்து விட்டு, வீட்டை சுத்தம் செய்து, வாசலில் பச்சரிசி மாவில் கோலம் போட வேண்டும். வாசல் நிலைப்படிக்கு சந்தனம் தெளித்து, மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். வீட்டின் பூஜையறையில் குபேரர் படத்தை வைத்து, தாமரை மலர், சங்கு ஆகியவற்றை இருபுறமும் வைத்து விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். நெல்லி மரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. எனவே குபேர பூஜையின் பொழுது கட்டாயம் நெல்லிக்கனியை வைத்து வழிபட வேண்டும். குபேரருக்கு மிகவும் பிடித்த உணவு அவல் என்பதால் அவலுடன் சிறிதளவு பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நைவேத்தியமாக படைக்க வேண்டும்.

பொன்னும் பொருளும் குவிய குபேர நைவேத்தியம் :

சம்பா அரிசியில் செய்த அவல் நிவேதனம் குபேரருக்கு உகந்தது. மென்மையான இழைகளால் ஆன அவலை குபேரர் விரும்பி சாப்பிடுவதாக ஐதீகம். இதனால் தான் சித்திரை முதல் நாள், சித்ரா பவுர்ணமி, அட்சய திரிதியை நாட்களில் வெல்லம் அல்லது கருப்பட்டி பாகுடன் சேர்த்த அவல் சாப்பிடலாம்.தூய்மையான பக்தியுடன் இறைவனுக்கு படைக்கும் எந்தவொரு நைவேத்தியமும் சிறப்பு வாய்ந்தது. அவருக்கு பிடித்த இந்தப் பொருளை நிவேதனம் செய்து அதனை பிரசாதமாக உடகொள்வதன் மூலம் அவரது அருளால் செல்வம் பெருகும்.