Ashta Aishwarya Program- Join our 9-Month Program to Manifest Eight Types of Wealth in Life Join Now
வெள்ளிக்கிழமை பிள்ளையார் பரிகாரம் | பிள்ளையார் பரிகாரம்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

வெள்ளிக்கிழமை பிள்ளையார் பரிகாரம்

Posted DateJuly 5, 2024

ஒவ்வொரு கடவுளையும் ஒவ்வொரு முறையில் வணங்க வேண்டும். அந்த வகையில் விநாயகரை இந்த முறைப்படி வணங்கினால் உங்கள் கஷ்டங்கள் யாவும் தீரும். மூலாதார மூர்த்தியாகத் திகழ்பவர் விநாயகர் .முழுமுதற் கடவுள் விநாயகர். நாம் எந்தவொரு நல்ல காரியத்தைத் தொடங்கினாலும் அது தடை படாமல் இருக்க நாம் முதலில் விநாயகரைத் தான் வணங்குவோம். அருகம்புல் சார்த்தி விநாயகரை வணங்குவோம். விநாயகருக்கு ஆடம்பர வழிபாடு தான் வேண்டும் என்று அவசியம் இல்லை பிள்ளையார் கொட்டு மற்றும் தோப்புக்கரணம் போட்டாலே போதும். அதனை ஏற்றுக் கொள்வார் குழந்தை மனம் கொன்ட விநாயகர். இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். அவரது பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம். விநாயகர் வழிபாடு வெற்றியை அளிக்கும். விநாயகப் பெருமாள் வழிபாடு மிகவும் எளிமையானது. “வி” என்றால். விசேஷம்  “நாயகர்” என்றால் தலைமைத்துவம் படைத்தவர் தனக்கு மேல் நாயகர் இல்லாதவர் விநாயகர்.

அனைத்து பொருளிலும் விநாயகரை வைத்து வழிபடலாம். மஞ்சள், சந்தனம், மாக்கல், தங்கம், வெள்ளி,  முத்து, பவழம்  அத்தி, சந்தனமரம், வெள்ளெருக்கு, வெல்லம், சாணம் என்று எதை வைத்து வேண்டுமானலும் அவரை வணங்கலாம். படமாக வைத்தும் வணங்கலாம். இதில் எதை வைத்து வேண்டுமானாலும் நாம் விநாயகரை வணங்கலாம். எல்லா  நாளும் நாம் விநாயகரை வணங்கலாம், விசேஷமாக  அவரை வெள்ளிக்கிழமை வணங்குவது நல்லது தேய்பிறை சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி போன்ற நாட்களில் விநாயகரை வணங்குவது சிறப்பு.

உங்கள் வேண்டுதல் நிறைவேற விநாயகருக்கான வழிபாடு ஒன்றைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

இந்த பரிகாரம் விநாயகருக்கு தீபம் ஏற்றிச் செய்யும் வழிபாடு ஆகும். நாம் அனைவரும் விநாயகருக்கு முன்னால் தீபம் ஏற்றி வழிபடுவோம் இந்த வழிபாட்டில் விநாயகருக்கு பின்னால் தீபம் ஏற்ற வேண்டும். அவ்வாறு ஏற்றும் போது கீழ்கண்ட மந்திரத்தை கூற வேண்டும்.

ஓம் ஹாம் கணேசாய நமஹ

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். இந்த விளக்கை நீங்கள் கோவில் சென்று ஏற்றலாம். அல்லது வீட்டில் விநாயகர் விக்கிரகம் அல்லது படம் வைத்து அதற்கு பின்னால் தீபம் ஏற்றி வழிபடலாம். தீபம் ஏற்றி விட்டு அவரை ஒன்பது அல்லது பதினொன்று சுற்று வலம் வருவது நல்லது..

உங்கள் வேண்டுதலைக் கூறி இந்த விளக்கை ஐந்து வாரங்கள் ஏற்ற வேண்டும். உங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன்  விநாயகருக்கு மோதகம் செய்து படைக்க வேண்டும். நம்பிக்கையோடு தும்பிக்கையான் பாதம் பணிந்தால் உங்கள் வேண்டுதல் யாவும் நிறைவேறும். முயற்சி செய்து பாருங்கள்.