Navaratri - Experience 333 sacred Navaratri ceremonies invoking Goddess power for success & protection Join Now
விநாயகரை வசியம் செய்ய பரிகாரம்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

பிள்ளைகள் படிப்பில் சிறக்க சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

Posted DateMarch 24, 2025

ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் குழந்தைகளையே உலகமாக நினைப்பார்கள். தமது குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு  இருக்கும்.  குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்றால் பெற்றோர்கள் பள்ளி தொடங்கிய நாள் முதலில் இருந்தே அவர்கள் மீது அக்கறை காட்ட வேண்டும். அவர்கள் நன்றாக படிக்கும் அளவிற்கு வீட்டுச் சூழல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களின் உணவு முறையில் அக்கறை காட்ட வேண்டும். அவர்களது ஆர்வம் பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களது நண்பர்கள் யார் என்று தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பெற்றோரின் முழு கவனமும் குழந்தைகள் மீது இருக்க வேண்டும். அவர்களிடம் அன்பு கலந்த கண்டிப்புடன் பழக வேண்டும். அதை விடுத்து சும்மா படி படி என்று கூறினால் மட்டும் போதாது.

ஒரு சில குழந்தைகள் இயற்கையிலேயே சிறப்பாக படிப்பார்கள். அவர்களுக்கு என்று தனிப்பட்ட அக்கறை எதுவும் காட்ட வேண்டிய தேவை இருக்காது. ஒரு சில குழந்தைகள் நன்றாக படிக்கும்.ஆனால் அவர்களிடம் குறும்புத்தனம் அதிகமாக இருக்கும். இதனால் படிப்பில் கவனச் சிதறல் ஏற்படலாம். எனவே அவர்கள் மீது சிறிது அக்கறை காட்ட வேண்டியிருக்கும். ஒரு சில குழந்தைகள் படிப்பில் மந்தமாக சோம்பலாக இருக்கும். அவர்களை படிக்க வைப்பதற்குள் படாத பாடு பட வேண்டியிருக்கும். இவ்வாறு தங்கள் குழந்தைகள் படிப்பு குறித்த வெவ்வேறு விதமான அனுபவங்க பெற்றோருக்கு இருக்கும்.

என்ன தான் நாம் முயற்சி செய்தாலும் இறை அருளும் நமக்குத் துணையாக இருக்க வேண்டும் அல்லவா?உங்கள் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி காண இந்த வழிபாடு உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

உங்களுடைய பிள்ளைகளுக்கு படிப்பு சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனை இருந்தாலும் சரி, அந்த பிரச்சனை சரியாக வேண்டும் என்று, சங்கடஹர சதுர்த்தி தினமான நாளைய தினம் விநாயகரை இங்கு கூறி இருக்கும். முறையில் வழிபாடு செய்து பாருங்கள். பிள்ளைகளுக்கு கல்வியில் இருக்கும் தடை உடனே விலகும்.

இந்த பரிகார வழிபாட்டை படிக்கும் மாணவர்களே செய்யலாம். அவர்கள் மிகவும் சிறு பிள்ளைகளாக இருக்கும் பட்சத்தில், அவர்கள் சார்பாக  பெற்றோர்கள் செய்யலாம். இந்த பரிகாரத்தை சங்கடஹர சதுர்த்தி அன்று செய்ய வேண்டும்.

சங்கடஹர சதுர்த்தி விநாயகருக்கு மிகவும் விசேஷமான நாள் ஆகும். அன்றைய தினம் அனைத்து  விநாயகர் கோவிலிலும் விசேஷ வழிபாடுகள் நடக்கும். அந்த வழிபாட்டில் கலந்து கொள்ள உங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்லுங்கள்.

விநாயகருக்கு மறக்காமல் இனிப்பு பூரண கொழுக்கட்டை செய்து நெய்வேத்தியமாக எடுத்துச் செல்லுங்கள். வெறும் 11 கொழுக்கட்டைகள் எடுத்துச் சென்றாலும் சரி. அடுத்தபடியாக 27 செம்பருத்திப் பூக்களை மாலையாக கோர்க்க வேண்டும். சிவப்பு நிற ஒற்றை செம்பருத்தி எடுத்து, மாலையாக கோர்த்து, உங்களுடைய பிள்ளைகளுடைய கையில் கொடுத்து அதை விநாயகருக்கு கொடுக்கச் சொல்லுங்கள். இந்த மாலையை சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு போட்டால், பிள்ளைகளின் கல்வியில் இருக்கும்  தடை விலகும். உங்களுக்கு இந்தப் பூ கிடைக்க வில்லை என்றால் கவலைப் படாதீர்கள். அதற்கு பதிலாக அதே எண்ணிக்கையில் ஏலக்காய்களை வைத்து மாலையாக கோர்த்து விநாயகருக்கு சாற்றுங்கள்.

இது பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அன்றி உயர் கல்வி படிக்கும் மாணவர்களாக இருந்தாலும் அவர்களின் வேண்டுதல் நிறைவேறவும் இந்த பரிகாரத்தை மேற்கொள்ளலாம்.

இவ்வாறு தொடர்ந்து இந்த வழிபாட்டை 11 வாரங்கள் செய்து வர அவர்களின் கல்வியில் காணப்படும் தடைகள் யாவும் நீங்கும். ஞாபக சக்தி கூடும். கவனத் திறன் அதிகரிக்கும்.மாணவர்கள் சிறப்பாகப் படிப்பார்கள். பெற்றோர்களின் ஆசையும் நிறைவேறும்.

நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை மேற்கொண்டு உங்கள் பிள்ளைகளின் முன்னேற்றத்தைக் கன்டு இன்புறுங்கள்.