Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
பணம் பெருக்கும் ஜாதிக்காய் எண்ணெய் தீபம்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

பணம் பெருக்கும் ஜாதிக்காய் எண்ணெய் தீபம்

Posted DateOctober 10, 2024

உலகில் மனிதராகப் பிறந்த அனைவரும் சகல ஐஸ்வரியத்துடன் வாழ வேண்டும் என்று தான் விரும்புவார்கள். கல்வி,  நல்ல வேலை, திருமணம், குழந்தைப் பேறு, செல்வம், பணம் என நமக்கு வேண்டிய செல்வங்கள் பதினாறு ஆகும். அதனால் தான் நமது முன்னோர்கள் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று வாழ்த்துவார்கள். என்றாலும் இவற்றுள் இன்றைய காலக்கட்டத்தில் பணம் என்பது மிகவும் அவசியம் ஆகிறது. வாழ்வாதாரத்திற்கு மிகவும் அவசியமாக விளங்குவது பணம் ஆகும். இந்தப் பணத்தை சம்பாதிக்கத் தான் நாம் அனைவரும் பாடுபடுகிறோம்.  அவ்வாறு சம்பாதிக்கும் பணம் ஒரு சிலருக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கே போதாமல் இருக்கும். பண நெருக்கடி மற்றும் பணப் பற்றாக்குறை அவர்களை பந்தாடும் எனலாம். சம்பளம் வாங்கி பதினைந்து நாட்களுக்குள் பணம் தீர்ந்து மாதக் கடைசியில் நெருக்கடியை சந்திப்பவர்கள் உண்டு. ஒரு சிலர் தங்கள் அன்றாட தேவைக்கே பணமின்றி கஷ்டப்படுவார்கள். வேறு சிலர் தங்கள் குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்ற பணம் இன்றி கஷ்டப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்கள் வாழ்வில் பண நெருக்கடி இன்றி வாழ உதவும் பரிகாரத்தைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

ஜாதிக்காய் எண்ணெய் தீபம்

உங்கள் வீட்டில் செல்வ வளம் பெருக நீங்கள் ஜாதிக்காய் எண்ணெயில் தீபம் ஏற்ற வேண்டும். நாட்டு மருந்து கடைகளில் ஜாதிக்காய் எண்ணெய் கிடைக்கும். அதனை வாங்கிக் கொள்ளுங்கள். அத்துடன் நல்லெண்ணெய் மற்றும் இலுப்ப எண்ணெய் வாங்கிக் கொள்ளுங்கள். இந்த மூன்றையும் ஒன்றாக சேர்த்துக் கொள்ளுங்கள்.( ஜாதிக்காய் எண்ணெய் கிடைக்கவில்லை எனில் நல்லெண்ணெயில் இரண்டு ஜாதிக்கையை வாங்கி போட்டு வைத்துக் கொள்ளுங்கள்).  நீங்கள் அன்றாடம் ஏற்றும் தீபத்தை வழக்கம் போல ஏற்றுங்கள். அத்துடன் இந்த முக்கூட்டு எண்ணெய் தீபத்தையும் ஏற்றுங்கள். இதனை வெள்ளிக்கிழமை அன்று தொடங்குவது சிறப்பு.

பலன்கள்

இந்த எண்ணெயில் தீபம் ஏற்றுவதன் மூலம் உங்கள் வீட்டில் சக்தி ஓட்டம் அதிகரிக்கும். நேர்மறை ஆற்றல் பெருகும். இவற்றின் மூலம் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். உங்கள் வாழ்க்கை ஒளிமயமாக மாற்றும். இந்த விளக்கு உங்கள் வீட்டில் பேராற்றலை கொண்டு சேர்க்கும். இது ஐஸ்வரியத்தை கொண்டு சேர்க்கும். உங்கள் வாழ்வில் படிப்படியாக பண வரவு அதிகரிக்கும். இந்த சக்தியும் பேராற்றலும் உங்களின் முயற்சிகளை நேர்மறை பலன் தரும் முயற்சிகளாக ஆக்கும். உங்களால் உங்களுக்கு தேவைப்படும் பணம் சம்பாதிக்க இயலும். பணப் பற்றாக்குறை அல்லது பண நெருக்கடியற்ற நிலை உருவாகும். இந்த எளிய பரிகாரத்தை நம்பிக்கையுடன் மேற்கொண்டு வாழ்வில் வளமும் நலமும் பெறுங்கள்.