Ashta Aishwarya Program- Join our 9-Month Program to Manifest Eight Types of Wealth in Life Join Now
இந்த ஒரு பொருளை தண்ணீரில் போட்டால் பணம் தாராளமாக வந்து சேரும் | Panam sera pariharam in tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

இந்த ஒரு பொருளை தண்ணீரில் போட்டு வந்தால் பணம் தாராளமாக வந்து சேரும்.

Posted DateNovember 9, 2023

பொருள் இலார்க்கு இவ்வுலகில்லை. அருள் இலார்க்கு அவ்வுலகில்லை என்று கூறுவார்கள். இந்த உலகில் நாம் வாழ பொருள் தேவை. எந்தவொரு பொருளாக இருந்தாலும் அதனை வாங்க பணம் தேவை. பணம் இல்லாமல் நாம் இந்த உலகில் வாழ முடியாது. பணம் பத்தும் செய்யும் என்பார்கள். பணக்காரன் பின்னால் பத்து பேர் என்ற சொலவடை கூட உண்டு. இந்த காலத்தில் பணத்திற்குத் தான் முக்கியத்துவம்.  ஒரு சிலருக்கு பணம் சம்பாதிப்பது எளிதாக இருக்கும். ஆனால் பலருக்கோ இது மிகவும் அரிதான ஒன்றாக இருக்கிறது. . பணம் என்பது மகாலடசுமியைக் குறிக்கும். கிரகங்களில் சுக்கிரன் பணத்தைக் குறிக்கும் கிரகம் ஆகும். இந்த சுக்கிரனுக்கு அதிபதியாக அன்னை மகா லடசுமியே விளங்குகிறாள்.  செல்வத்தை சேர்க்க இவர்களின் அருள் நமக்கு அவசியம் தேவை.

பணம் நிலையில்லாத தன்மை கொண்டது. இன்று ஒருவரிடத்தில் இருக்கும் பணம் நாளை வேறு ஒருவரின் கையில் சென்று சேரும். உருண்டோடிடும் பணத்தை நிலையாக தக்க வைக்க அன்னை மகா லடசுமியின் அருள் தேவை.

ஒரு சிலருக்கு நல்ல வேலை இருக்கும். அதிக பணம் சம்பாதிப்பார்கள். ஆனால் அவர்களிடம் பணம் நிலைத்து இருப்பது கடினமாக இருக்கும். ஒரு சிலர் தொழில் செய்வார்கள். ஆனால் அவர்களால் தொழிலில் அதிக பணம் சம்பாதிக்க இயலாத நிலை இருக்கும். இப்படி பணத்தை சம்பாதிப்பதிலும் அதனை சேர்ப்பதிலும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான பிரச்சினை இருக்கும்.

இந்த பிரச்சினைகள் எல்லாம் தீர ஒரு எளிய பரிகாரத்தை நாம் வீட்டிலேயே செய்யலாம். அதனைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம் வாருங்கள்.

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரையில் தான் செய்ய வேண்டும். மேலும் வீட்டில் வடகிழக்கு மூலையே இதற்கு மிகவும் பொருத்தமான இடமாக கருதப்படுகிறது. இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரு கண்ணாடி பாட்டில் நிறைய தண்ணீர் தேவைப்படும். கண்ணாடி பாட்டிலில் சுத்தமான தண்ணீரை பிடித்து வீட்டின் வடகிழக்கு மூலையில் வைத்து விட வேண்டும். பிறகு நம்முடைய கட்டைவிரல் மற்றும் சுண்டு விரலை பயன்படுத்தி ஒரே ஒரு வெள்ளை மொச்சையை எடுத்து அந்த தண்ணீரில் போட்டு விட வேண்டும்.

இவ்வாறு தினமும் ஒவ்வொரு மொச்சையாக ஏழு நாட்களுக்கு மொச்சையை போட்டு விட வேண்டும். அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை வரும் பொழுது இந்த பாட்டிலில் இருக்கும் தண்ணீரை துளசிச் செடியில் ஊற்றிவிட்டு உள்ளே இருக்கும் மொச்சைகள் அனைத்தையும் எடுத்து பறவைகளுக்கு தானமாக வைத்து விட வேண்டும். இவ்வாறு நாம் தொடர்ந்து பரிகாரத்தை மேற்கொள்ளும் பொழுது சுக்கிர பகவான் மற்றும் மகாலட்சுமியின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும்.