எந்தவொரு காலத்திலும் பணம் என்பது அனைவருக்கும் தேவையான ஒன்றாக இருக்கிறது. அதனை சம்பாதிக்கத் தான் ஒவ்வொருவரும் படாத பாடு படுகிறோம். அவரவர் சக்திக்கேற்ப பணத்தை சம்பாதிக்கிறோம். அதை சேமிக்க வேண்டும் என்ற எண்ணமும் ஒவ்வோருவர் மனதிலும் இருக்கும். ஆனால் எல்லாருக்கும் அது சாத்தியமா என்றால், இல்லை என்று தான் கூற வேண்டும். ஒரு சிலர் பணமே தங்குவதில்லை என்று வருத்தப்படுவார்கள். வரவுக்கும் செலவுக்கும் சரியாகப் போய்விடுகிறது என்றும் வருத்தப்படுவார்கள். ஒரு சிலருக்கு வரவுக்கு மீறிய செலவுகளும் வந்து கடன் வாங்க நேரிடுகிறது. பணம் சேர்ப்பதற்கான எளிய வழியைத் தான் நாம் அனைவரும் தேடிக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் பணத்தை ஈர்க்கும் எளிய பரிகாரம் ஒன்றைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
நாம் அன்றாடம் பயன் படுத்தும் பல பொருட்களில் மருத்துவ குணமும் பணத்தை ஈர்க்கும் சக்தியும் உள்ளது. அவற்றுள் ஒன்று நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ஜாதிக்காய். காய்களில் சிறந்தது ஜாதிக்காய். ஜாதிக்காய் மிகவும் சக்தி வாய்ந்தது.ஜாதிக்காய் பல வகையில் நமக்கு பயன் தரக் கூடியது. மருத்துவ குணங்கள் நிறைந்தது ஜாதிக்காய். இது முகப் பொலிவை அளிக்கக் கூடியது. அது மட்டும் இன்றி இந்த ஜாதிக்காய்க்கு பணத்தை ஈர்க்கும் சக்தி அதிகம். நமது முன்னோர்கள் பணப் பெட்டியில் ஜாதிக்காயை வைத்திருப்பார்கள். ஜாதிக்காயை பயன்படுத்தி எப்படி செல்வத்தை ஈர்ப்பது என்று காண்போம்.
நாட்டு மருந்து கடைகளில் இந்த காய் கிடைக்கும். மூன்று ஜாதிக் காய்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு மஞ்சள் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த மூன்று ஜாதிக்காயைப் போடுங்கள். அதனுடன் குன்றிமணி அளவு தங்கத்தை போட்டு அதனுடன் ஒரு மல்லிகை பூவையும் போடுங்கள். பிறகு அதனை மூட்டையாகக் கட்டி பணப் பெட்டியில் வைத்துக் கொள்ளுங்கள். நமது முன்னோர்கள் தங்கள் பணப் பெட்டியில் இந்த ஜாதிக் காய் வைத்திருப்பதை நீங்கள் கண்டிருக்கலாம். இது ஆற்றல் மிக்கது. பணத்தை ஈர்க்கும் சக்தி இதற்கு உண்டு. இது இருக்கும் இடத்தில் ஒரு நேர்மறை ஆற்றல் இருக்கும். எனவே இது உங்கள் பணப் பெட்டியில் இருந்தால் உங்களுக்கு பணம் சேரும்.
நீங்கள் தொழில் அல்லது வியாபாரம் செய்பவர் என்றால் உங்கள் தொழில் இடத்தில் கல்லாப் பெட்டியில் இரண்டு ஜாதிக் காய்களை போட்டு வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் தொழில் பெருகும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயர்ந்து உங்கள் பண வரவு அதிகரிக்கும். இது தொழில் அபிவிருத்தி மற்றும் பண அபிவிருத்தியை அளிக்கும்.
ஜாதிக்காய் தீபம்
ஜாதிக்காய் எண்ணெய் கிடைக்கும் எனில் நீங்கள் அதனைப் பயன்படுத்தி விளக்கு ஏற்றி வழிபடுவதன் மூலமும் பணத்தை ஈர்க்கலாம். இந்த பரிகாரத்தை நீங்கள் வியாழன் அன்று செய்யலாம். பிரதி வியாழன் அன்று தொடர்ந்து செய்வதன் மூலம் உங்களுக்கு பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிட்டும்.
ஒரு மண் அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிது நல்லெண்ணெய், சிறிது இலுப்ப எண்ணெய் மற்றும் ஜாதிக்காய் எண்ணெய் மூன்றையும் கலந்து திரிபோட்டு விளக்கு ஏற்றுங்கள். உங்கள் வீட்டில் வெளிச்சக் கீற்றுடன் அதிர்ஷ்டக் கீற்றும் உண்டாகும். நேர்மறை ஆற்றல் பெருகும். அந்த ஆற்றல் மூலம் உங்கள் பணம் சம்பாதிக்கும் ஆற்றலும் பெருகும்.
இதற்கு அதிக செலவும் இல்லை. அதிக கஷ்டப்பட வேண்டியதும் இல்லை. நம்பிக்கையுடன் இந்த பரிகாரங்களை செய்வதன் மூலம் நீங்கள் பயன் அடையலாம்
September 19, 2025
September 17, 2025
September 15, 2025