Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
நோய்கள் தீர்க்கும் தீர்த்தத்தின் மகிமை | தெய்வீக சக்தியின் ரகசியம்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

நோய்கள் தீர்க்கும் தீர்த்தத்தின் மகிமை அறிந்து கொள்ளுங்கள்

Posted DateAugust 19, 2025

ஆலயம் செல்வது சாலவும் நன்று என்று கூறுவார்கள். ஏனெனில் ஆலயங்களில் ஆகம விதிப்படி தான் அனைத்தும் நடக்கும். அது மட்டும் இன்றி ஆலயங்களில் நாம் பின்பற்றும் பல நடைமுறைகள் ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் ஏற்புடையதாகவும் நன்மை அளிப்பதாகவும் இருக்கின்றது. அந்த வகையில் இன்று நாம் தீர்த்தம் பற்றி காணலாம்.

தீர்த்தம் என்பது புனிதமான நீரைக் குறிக்கும். பொதுவாக அனைத்து பெருமாள் கோவில்களிலும் தீர்த்தம் வழங்கப்படும். பெருமாள் கோவில்களில் “தீர்த்தம்” என்பது பெருமாளின் அருளைப் பெற்ற புனித நீர் ஆகும். இதற்கு மிகவும் உயர்ந்த ஆன்மிக முக்கியத்துவம் உண்டு. பெரும்பாலும் தூய்மையான நீரை, கோவிலில் அர்ச்சகர் மந்திரம் சொல்வதன் மூலம் புனிதமாக்கி, பெருமாளின் திருவடியைத் தொட்டு, அங்கு இருந்த தெய்வீக சக்தியை உட்புகுத்தி தருகிறார்கள். பெரும்பாலும் பெருமாள் கோவிலில் பெருமாளின் அர்ச்சனைக்குப் பிறகு பக்தர்களுக்கு வழங்கப்படும். துளசிஇலை, ஏலக்காய், பச்சை கற்பூரம் போன்ற திரவியங்களை நீரில் போட்டு அதனை பிரசாதமாக்கி வழங்குவார்கள்.

தீர்த்தத்தின் முக்கியத்துவம்

ஆன்மீக ரீதயாக  தீர்த்தம் குடிப்பது, பாவங்களை நீக்கும் என்று நம்பப்படுகிறது. பெருமாள் திருவடியில் வைக்கப்பட்ட நீர் என்பதால் அவர் அருளும் நமக்குக் கிடைக்கிறது. ஆரோக்கிய ரீதியாக துளசி சேர்ப்பதால் உடல் நலத்துக்கும் பயன் அளிக்கிறது. அர்ச்சனை முடிந்தவுடன் அல்லது சாத்துமுறை பிறகு, அர்ச்சகர் பக்தர்களுக்கு வழங்குவார். தீர்த்தத்தை உள்ளங்கையில் மூன்று முறை  ஏற்றுக் கொண்டு குடிக்க வேண்டும்; சிலர் அதைத் தலையிலும் தடவுவார்கள்.  கையை  சுத்தமாக வைத்துக் கொள்ள  வேண்டும். பக்தியுடன்  மூன்று முறை உள்ளங்கையை குவித்து  ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த தீர்த்தத்தை நாம் அனுதினமும் குடித்து வந்தால் நோய்கள் நம்மை அணுகாது. கோவிலில் வழங்கப்படும் தீர்த்தம் நோய்களை தீர்க்கும் மருந்தாக செயல்படுகிறது. தீர்த்தத்தில் துளசி சேர்க்கப்படுவதால் அது அகத்தில் இருக்கும் பாவத்தையும் நீக்குகின்றது. புறத்தில் இருக்கும் நோய்களையும் தீர்க்கின்றது.

வீட்டில் தயாரிக்கப்படும் புனித தீர்த்தம்

தினமும் நம்மால் ஆலயம் செல்ல இயலாத நிலை இருக்கலாம். இம்மாதிரி சமயத்தில் வீட்டில் யாராவது ஒருவர் பெருமாள் கோவிலுக்கு சென்று அந்த தீர்த்தத்தை வீட்டிற்கு வாங்கிக் கொண்டு வந்து கொடுக்கலாம். யாருமே செல்ல முடியாது என்றால் இந்த தீர்த்தத்தை நாம் நமது வீட்டிலும் தயார் செய்யலாம். அதற்கு சுத்தமான செம்பு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் சுத்தமான நீரை பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த நீரினுள் சிறிது ஏலக்காய், துளசி தளம் மற்றும் மிகவும் சிறிதளவு பச்சை கற்பூரம் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனை இறைவன் முன் வைத்து விட்டு விளக்கு ஏற்றுவது மற்றும் உங்கள் வழக்கமான பூஜைகளை மேற்கொள்ளுங்கள். பூஜையின் போது இறைவனின் நாமங்களை உச்சரிக்கவும். தூப தீப ஆராதனைகளை செய்யவும். பூஜை செய்பவர் மூன்று முறை தீர்த்தம் எடுத்துக் கொண்டு வீட்டில் இருக்கும் பிறருக்கும் தீர்த்தம் அளிக்க வேண்டும். அவ்வாறு தீர்த்தத்தை ஒவ்வொரு முறையும் சிறு குடி எடுத்துக்கொள்ளும்போதும்:

  1. “ஓம் கேஷவாய நம:” (முதல் குடி)

  2. “ஓம் நாராயணாய நம:” (இரண்டாம் குடி)

  3. “ஓம் மாதவாய நம:” (மூன்றாம் குடி)

குடித்த பின் “ஓம் கோவிந்தா” என்று சொல்லி தலையில் சற்று தடவிக் கொள்ளவும்.

மந்திரம் கூறுவதால் ஏற்படும் பயன்

மூன்று உலகங்களுக்கும் (பூலோகம், அந்தரிக்ஷம், சுவர்கம்) அருள் வேண்டும் என்பதற்காக. மூன்று நாமங்கள் கேஷவன், நாராயணன், மாதவன் என்பவை பெருமாளின் முக்கிய அவதார சக்திகளை குறிக்கின்றன.

தீர்த்தத்தின் மகிமைகள்

துளசி ஒரு மருத்துவ குணம் நிறைந்த மூலிகை. இதுஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல், ஆன்டி-ஆக்ஸிடண்ட் தன்மை கொண்டது.சளி, காய்ச்சல், தொண்டை நோய் போன்றவற்றைத் தடுக்கிறது.இம்யூன் சிஸ்டத்தை வலுப்படுத்துகிறது.தீர்த்தம் கொடுப்பதற்கு முன் அர்ச்சகர் வேத மந்திரங்கள் உச்சரிப்பார்.மந்திர ஓசைகள் நீரில் நேர்மறை அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன.ஜப்பானிய விஞ்ஞானி மசாரு எமோட்டோ செய்த நீர் சோதனையில், நல்ல வார்த்தைகள் மற்றும் ஓசைகள் நீரின் மூலக்கூறுகளை அழகாக அமைக்கின்றன. எனவே வீட்டில் தீர்த்தம் தயாரிக்கும் போதும் அதனை உட்கொள்ளும் போதும் மந்திரம் கூற வேண்டு. தீர்த்தம் ஒரு சிறிய அளவு தண்ணீரே. குடல் இயக்கம் (digestion) தூண்டும், வாயை ஈரமாக வைத்துக் கொள்ள உதவும். நோன்பு அல்லது பிரார்த்தனையின் பின், சிறிது தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு தண்ணீர் சமநிலை கிடைக்கிறது. தலையில் தடவுவதன் பயன் உடல் வெப்பத்தை சற்று குறைக்கும்.மனதில் தியான உணர்வு அதிகரிக்கும்.ஒருவர் நம்பிக்கையுடன் குடித்தால், மூளையில் செரோட்டோனின், எண்டார்பின் போன்ற மகிழ்ச்சி ஹார்மோன்கள் வெளியாவதால் மன அமைதி, ஆரோக்கியம் கூடுகிறது.