ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றி பெற்று உத்தியோகத்தில் திருப்புமுனையை காண்பார்கள். . இருப்பினும், கவனம் குழந்தைகள் மீது திரும்பலாம். இம்மாதத்தில் உங்கள் ஆரோக்கியம் குறையும் மற்றும் ஒட்டுமொத்த நம்பிக்கையும் குறையும். ஆக்கப்பூர்வமான யோசனைகள் இருந்தாலும், ரிஷபம் ராசியைச் சார்ந்த எல்லா வயதினருக்கும் தற்போதைய மாதத்தில் நல்ல பலன் கிடைக்காமல் போகலாம். இந்த காலகட்டத்தில் குழந்தைகளின் ஆரோக்கியம் குறையக்கூடும். சொத்து விவகாரங்கள் மற்றும் வாகனங்கள் காரணமாக சிக்கலைச் சந்திக்க நேரிடும். இந்த மாதம் ஒரு கடினமான நேரத்தை கடந்து செல்ல நேர்ந்தாலும் பயணங்கள் மற்றும் சிறந்த ஓய்வு நேரங்கள் இருக்கலாம். மொத்தத்தில், இந்த மாதம் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஒரு கலவையாக இருக்கும்.
இந்த மாதத்தின் ஆரம்ப காலம் தம்பதியினரிடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் உறவு விவகாரங்கள் கலவையாக இருக்கும். இந்த மாதத்தின் பிற்பகுதி சற்று சாதகமாக இருக்கும். ஏற்கனவே காதலித்தவர்கள் தங்கள் உறவை திருமண உறவாக மாற்றிக் கொள்ளலாம். என்றாலும் நீங்கள் உங்கள் துணையுடன் உணர்வுகளையும் அன்பையும் வெளிப்படுத்தத் தயங்குவீர்கள்.உங்கள் துணைக்காக நீங்கள் செலவு செய்வீர்கள் இது உங்கள் பிணைப்பு மற்றும் அன்பை வலுப்படுத்துவதற்கு சாதகமான செலவுகளாக இருக்கலாம். இந்த நவம்பர் மாதத்தில் மனைவி / பங்குதாரர் மூலம் நிதி ஆதாயங்களைப் பெறலாம். தம்பதியினருக்கு இடையேயான பிணைப்பு அடுத்த கட்டத்திற்கு உயரும். இருப்பினும், திருமனத்திற்கு தக்க துணை தேடுபவர்கள் சரியான நபரைத் தேர்ந்தெடுப்பதில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : கேது பூஜை
பொதுவாக, இந்த மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு நிதி வாய்ப்புகள் மிதமானதாக இருக்கும். வருமான ஓட்டம் சாதாரணமாக இருக்கும். எதிர்காலத்தில் பணத்தைச் சேமிப்பதில் சிரமங்களை ஏற்படுத்தும் செலவுகள் அதிகரிக்கலாம். வீடு மற்றும் வாகனங்களில் பழுது மற்றும் பராமரிப்பு செலவுகள் இருக்கலாம். ஆவணங்களில் உள்ள பிழைகள் / சிக்கல்கள் காரணமாக நிதிச் செலவுகள் இருக்கலாம். இம்மாதத்தில் உங்கள் செலவுகளில் பெரும்பாலானவை வாழ்க்கைத் துணை / பங்குதாரருக்காக இருக்கலாம். நீங்கள் ஆன்மீக விஷயங்கள், யாத்திரை மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்கும் செலவிடலாம். இந்த காலகட்டத்தில் பங்குச் சந்தையில் முதலீடு மற்றும் வர்த்தகம் மூலம் நியாயமான லாபம் இருக்கலாம்.
உங்கள் நிதிநிலை மேம்பட : பிருகஸ்பதி பூஜை
ரிஷப ராசிக்காரர்களின் உத்தியோக வாழ்க்கையில் இந்த மாதத்தில் முன்னேற்றம் காணப்படும். உங்கள் திறமைக்கு ஏற்ப தொடர்புடைய பணிகள் தானாகவே வந்து சேரும். ஆனால் தொழிலில் உங்கள் திறமைகளை நிரூபிப்பது முற்றிலும் உங்கள் கையில் தான் இருக்கும். இந்த மாதத்தில் சில பயணங்கள் இருக்கும். பணியிடத்தில் குழு உறுப்பினர்களுடன் சில வாக்குவாதங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். பணியிடத்தில் அங்கீகாரம் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். தொழிலில் நிதி வரவு மற்றும் வளர்ச்சி மிதமானதாக இருக்கும். மாதப் பிற்பகுதியில் காரசாரமான வாக்குவாதங்கள் ஏற்படலாம். நிறுவனத்திற்கு அறிவுசார் யோசனைகளை வழங்கினாலும், அதற்கான தகுதியைப் பெறாமல் போகலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் மோதல்கள் ஏற்படலாம். இம்மாதத்தில் சக பெண்களால் பிரச்சனைகள் ஏற்படலாம்.
உங்களால் மேற்கொள்ளப்படும் வியாபாரம் உங்களின் கடின உழைப்பாலும், புத்திசாலித்தனத்தாலும் நல்ல வளர்ச்சியைக் காணும். நீங்கள் பெரிய அளவில் முதலீடு செய்வதை இலக்காகக் கொள்ளலாம், இது எதிர்காலத்தில் நல்ல வருமானத்தை அளிக்கும். புதிய கூட்டாண்மை மற்றும் வணிக விரிவாக்கம் இந்த மாதத்தில் இருக்கும். கூட்டாளிகள் / பங்குதாரர்கள் போதுமான ஒத்துழைப்பு அளிக்கலாம். இந்த மாதம் வணிக பரிவர்த்தனைகளில் பேரம் பேசுவது கடினம். இந்த மாதத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் வணிகத்தின் வருவாயும் அதிகரிக்கலாம். உங்களின் வியாபாரம் ஒட்டுமொத்த கண்ணோட்டத்தில் ஓரளவு லாபம் பார்க்கும், ஆனால் வியாபார சூழலில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, குறைவான நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் வைத்திருப்பது நல்லது. புதிதாக தொழில் தொடங்குபவர்கள் ஒரு கடினமான நேரத்தை எதிர்கொள்ளக்கூடும்.
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு ஒரு பக்கம் கடின முயற்சிகளுக்கு நல்ல பலனும் மறுபுறம் குறைந்த ஆற்றலும் இருக்கும். பணியிடத்தில் வாடிக்கையாளர்கள் மற்றும் சக தொழில் வல்லுநர்களுடன் பழகும்போது தர்க்க ரீதியாகவும், சாதுரியமாகவும் செயல்பட வேண்டியிருக்கும். நீங்கள் தொழிலில் உங்களை விட திறமை மிக்க நபர்களை சந்திக்க நேரும் என்பதால், தொழிலில் ஒப்பந்தங்களை முடிக்க உங்களின் முன்முயற்சிகள் மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவை தேவைப்படும். தொழிலில் நல்ல பலன்களை பெற்றுத் தரும் முடிவு சார்ந்த அணுகுமுறையை நீங்கள் மேற்கொள்வீர்கள். இந்த மாதத்தில் நீதிமன்ற வழக்குகளிலும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
உத்தியோகம் மற்றும் தொழிலில் மேன்மை பெற : சனி பூஜை
ரிஷப ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில் இந்த மாதம் சில கடுமையான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எலும்புகள் மற்றும் உடலில் நீர்ச்சத்து தொடர்பான பிரச்சனைகள் இருக்கலாம். குழந்தைகள் சிறிய உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கையைப் பற்றிய சரியான புரிதல் மூலம் நீங்கள் பயம் மற்றும் கவலை போன்ற பிரச்சினைகளிலிருந்து வெளிவரலாம். நவம்பர் மாதத்தில் உங்களின் ஒட்டுமொத்த ஆற்றல் குறைவாக இருக்கும். இந்த மாதத்தின் முதல் பாதியில் தந்தையின் உடல்நிலையும் பாதிப்படையலாம். இருப்பினும், மருத்துவ சிகிச்சை இந்த மாதத்தில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தூக்க சூழல் சிறப்பாக இருந்தாலும் குறிப்பாக மன அழுத்தம் மற்றும் பதட்டம் தொடர்பான பிற அசௌகரியங்கள் இருக்கலாம்.
உங்கள் ஆரோக்கியியம் மேம்பட : சுக்கிரன் பூஜை
இந்த மாதத்தில் மாணவர்களுக்கு கல்வி விஷயங்களில் மிதமான நேரம் இருக்கும். கல்வி கற்கவும் சிறப்பாகச் செயல்படவும் இயற்கையான ஆர்வமும் ஆற்றலும் இருக்கும் காலம் இதுவல்ல என்பதால் மாணவர்கள் சிறப்பாகச் செயல்பட முனைப்பு காட்ட வேண்டும். கடின உழைப்பால் போட்டித் தேர்வுகளை சிறப்பாக எழுதி முடிப்பீர்கள். மாதத்தின் இரண்டாம் பாதியில் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகளைப் பெறலாம். ஆசிரியர் / வழிகாட்டிகளின் வழிகாட்டுதலைப் பெற அதிர்ஷ்டம் இருக்கும். பொறியியல் மற்றும் ஆராய்ச்சி தொடர்பான பாடங்களில் ஈடுபடும் மாணவர்கள் கருத்துகளை நன்கு புரிந்துகொள்வார்கள். டிசைனிங் மற்றும் விஷுவல் என்டர்டெயின்மென்ட் பாடத்தில் ஈடுபடுபவர்கள் இந்த மாதத்தில் கல்வியில் பின்னடைவை சந்திக்க நேரிடும். வெளிநாட்டில் கல்வி பயில அனுகூலமான பதில் கிடைக்காமல் போகலாம்.
கல்வியில் சிறந்து விளங்க : சூரியன் பூஜை
சுப தேதிகள் : 4, 5, 6, 7, 8, 12, 13, 14, 15, 20, 21, 22 & 23.
அசுப தேதிகள் : 1, 16, 17, 24, 25, 26, 27 & 28.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025