Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
மேஷம் நவம்பர் மாத ராசி பலன் 2023 | November Matha Mesham Rasi Palan 2023
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

மேஷம் நவம்பர் மாத ராசி பலன் 2023 | November Matha Mesham Rasi Palan 2023

Posted DateOctober 27, 2023

மேஷம் நவம்பர் மாத பொதுப்பலன்கள் 2023

மேஷ ராசி அன்பர்களே! உங்கள் தாம்பத்ய வாழ்க்கை மற்றும்  ஆரோக்கியத்தை பாதிக்கும் முக்கிய மாற்றங்களுக்கு நீங்கள் உட்படலாம். இந்த மாதத்தில் வாகனங்கள் தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு  சாதகமான பலன்களைத் தராது. உங்கள் மனதிற்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கலாம். இந்த காலகட்டத்தில்  குழந்தைகளால் ஏற்படும் பிரச்சனைகளையும் நீங்கள் சந்திக்க நேரலாம். இந்த மாதத்திலிருந்து நீண்டகால பிரச்சினைகளில் இருந்து நீங்கள் விடுபடலாம். ஆனால் உங்கள் மன அமைதியை குலைக்கக் கூடிய குறுகிய கால புதிய பிரச்சினைகள் உருவாகலாம். இந்த மாதத்தில் ஆவணங்கள் மற்றும் தகவல் தொடர்பு அம்சங்கள் தொடர்பான சிக்கல்கள் இருக்கலாம். சொந்த வாழ்க்கையிலும் பதட்டங்கள் மற்றும் மனக்கசப்புகள் அதிகரிக்கும்.  உங்கள் வாழ்க்கையில் வரும் மாற்றங்களை அதன் வழியில் ஏற்றுக் கொள்வது நல்லது.

காதல்/ குடும்ப உறவு :

காதல் ஜோடிகள் இந்த மாதத்தில் சோதனை மற்றும் சவால்களை சந்திக்க நேரலாம். ஏழாம் வீடு மற்றும் அதன் அதிபதியான சுக்கிரன் தோஷம் காரணமாக மேஷ ராசிக்காரர்களில் சிலருக்கு உறவில் விரிசல் மற்றும் பிரிவு ஏற்படலாம். ஏற்கனவே திருமணம் ஆனவர்கள், தங்கள் வாழ்க்கைத்துணை/கூட்டாளியால் புறக்கணிக்கப்படும் அனுபவம் இருக்கலாம். திருமண வாழ்வில் ஏமாற்றங்கள் மற்றும் பின்னடைவுகள் கூட இருக்கலாம். காதலர்கள் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். சில சந்தர்ப்பங்களில், உங்கள் துணை அசாதாரணமான முறையில் நடந்து கொள்ளலாம், இது குடும்பம் / உறவில் தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகளைத் தூண்டும். இந்த நவம்பர் மாதத்தில் முக்கியமான விஷயங்களில் மௌனமாக இருப்பது உங்களுக்கு பாதுகாப்பானது. மேலும், உங்களில் சிலரின், மனைவி / துணைக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருக்கலாம்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : சுக்கிரன் பூஜை

நிதிநிலை :

அதிர்ஷ்டம் மூலம் பண வரவு இருக்கும் என்றாலும் நிதிநிலையில் கலவையான முடிவுகளைக் காணலாம். நீங்கள் எதிர்பாராத செலவுகளை சந்திக்க நேரலாம்.  இது பணத்தை சேமிப்பதில் சிரமத்தை உருவாக்கலாம். மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் உடல் நலம் மற்றும் குடும்ப பிரச்சனைகள் காரணமாக செலவுகள் ஏற்படலாம்.  இந்த மாதம் நீங்கள மனைவி / துணைக்காகவும் செலவிடலாம். சொந்த தொழிலில் எதிர்பாராத வருமானம் கிடைக்கலாம். கிரகங்களின் பாதகமான சஞ்சாரம் காரணமாக முதலீடு மற்றும் வர்த்தகம் மூலம் லாபத்தை காண இது ஒரு சிறந்த நேரம் அல்ல. ரியல் எஸ்டேட் முதலீடுகள் தொடர்பான விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். கணவன்/மனைவி/கூட்டாளிக்கான செலவு காரணமாக  கடன் அதிகரிக்கலாம்.  இந்த மாதத்தில் நிதி மற்றும் ஆவணம் தொடர்பான வழக்குகளில் பங்கேற்க நேரலாம். உங்கள் செலவுகளில் நீங்கள் அதிக  கவனம் செலுத்த வேண்டியிருக்கும். எனவே பண விஷயத்தில் போதுமான திட்டமிடல் இருக்க வேண்டும்.

உங்கள் நிதிநிலை மேம்பட : சுக்கிரன் பூஜை

உத்தியோகம் :

மேஷ ராசி அன்பர்கள் இந்த மாதம் தங்கள் உத்தியோகத்தில் மாற்றம் தரும் காலக் கட்டத்தை கடந்து செல்வார்கள். பணியிடத்தில் இருந்து வந்த பழைய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். இந்த மாதத்தில் வேலை தேடுபவர்கள் தங்களுக்கு விருப்பமான சரியான வேலையைக் கண்டுபிடிப்பதில் சிரமங்களை சந்திக்கலாம்.  உத்தியோகத்தில் ஓய்வு எடுக்க விரும்பும் அன்பர்கள் இது மாற்றத்தின் காலம் என்பதை கருத்தில் கொண்டு செயல்படலாம். கடின உழைப்பு இந்த ஆண்டின் பிற்பகுதியில் அங்கீகாரத்திற்கு வழி வகுக்கும். இருப்பினும், வியாழன் இப்போது வக்கிர கதியில் செல்வதால், ஊதிய உயர்வு பெறுவது கடினம்.  பணியிடத்தில் பெண் பணியாளர்களால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம், இந்த மாதத்தில் மேலாளருடன் முரண்பாடுகள் இருக்கலாம்.

தொழில் :

மேஷ ராசி அன்பர்களே! உங்களால் மேற்கொள்ளப்படும் வியாபாரத்தில் போராட்டங்களும், சந்தையில் கடும் போட்டியும் இருக்கும். தலைமைத்துவம் அல்லது தலைமைத்துவ பாணியில் ஈடுபட்டுள்ள நபர் வணிகத்தை மாற்றியமைக்கலாம். நீங்கள் மேற்கொள்ளும் சில தொழில்களில் அரசின் தலையீடு ஏற்படலாம். புறச் சூழல் சாதகமாக இல்லாததாலும் பொதுவாக இது மாறுதல் காலம் என்பதால் நீங்கள்  பொறுமையாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் கடன்களும் உயரக்கூடும். இந்த காலகட்டத்தில் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும். ஏற்கனவே செய்த தொழிலுக்கான பண வரவு தாமதமாக வரக்கூடும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் / கூட்டாளிகள் மாறலாம். இந்த காலகட்டத்தில் உங்களின் புதிய யோசனைகள் குறுகிய காலத்திற்கு சரியாக செயல்படாது.

தொழில் வல்லுனர்கள் :

மேஷ ராசி தொழில் வல்லுனர்களுக்கும் மேஷ ராசியைச் சார்ந்த வியாபாரம் செய்பவர்கள் அனுபவிப்பது போன்ற பலன்கள் இருக்கலாம். தவிர, இந்த மாதத்தில் தொழிலில் பணியாளர்கள் மற்றும் வணிக கூட்டாளிகளின் ஒத்துழைப்பு இல்லாததை நீங்கள் உணருவீர்கள். பணியிடத்தில் வியாபாரம் சம்பந்தமாக விவாதம் செய்யும் போது சர்ச்சைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இந்த காலகட்டத்தில் ஆவணங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தொடர்பாக உங்களுக்கு சில சிக்கல்கள் இருக்கலாம். மாதத்தின் பிற்பகுதியில் தொழிலில் கணிசமான வரவு இருக்கும். வாடிக்கையாளர்களுடன் உறவுச் சிக்கல்களுக்கு உள்ளாகலாம் மற்றும் இந்த மாதத்தில் நீங்கள் குறைந்த நினைவாற்றல் திறன்களைக் கொண்டிருக்கலாம். உங்களுக்கு எதிரிகள் மற்றும் போட்டியாளர்கள் மூலம் பிரச்சினைகள் இருக்கலாம்.

உத்தியோகம் மற்றும் தொழிலில் மேன்மை பெற:அங்காரகன் பூஜை

ஆரோக்கியம் :

ராசியின் அதிபதி சாதகமாக இல்லாததால் வரும் நாட்களில் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இந்த காலக்கட்டத்தில் எலும்புகள், தசைகள் மற்றும் மஜ்ஜை தொடர்பான உடல்நல பிரச்சனைகள் உங்களுக்கு துன்பம் கொடுக்கலாம். இந்த மாதத்தில் காயங்கள் மற்றும் விபத்துகளைச் சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன.  தூக்கமும் பாதிக்கப்படலாம், அதன் விளைவாக மன அமைதியில் தொந்தரவுகள் ஏற்படலாம். காலநிலை அடிக்கடி மாற்றங்களுக்கு உள்ளாகும் இந்த காலகட்டத்தில் உடல் ரீதியான சோர்வு மற்றும் அழுத்தம் ஏற்படலாம் மற்றும் இது குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வைரஸ் தொற்றுக்கு காரணம் ஆகலாம். குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை சரியில்லாமல் போகலாம், இதன் விளைவாக மருத்துவமனை மற்றும் சிகிச்சைக்காக அதிக எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சூரியன் பூஜை     

மாணவர்கள் :

மாணவர்களுக்கு படிப்பில் கடினமான காலம் இருக்கும். போதிய தயாரிப்பு இல்லாதது தேர்வில் செயல்திறனைக் குறைக்கும். இந்த மாதத்தில் நினைவாற்றல் மற்றும் படைப்பாற்றல் சரியாக வேலை செய்யாது. மேஷ ராசி மாணவர்களுக்கு குருக்களின் ஆசிர்வாதமும் ஆசிரியர்களின் ஆதரவும் மட்டுமே தேர்வின் முக்கிய தருணங்களில் உதவும். இந்த மாதத்தில் பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். இந்த காலகட்டத்தில் மாணவர்களின் ஆரோக்கியத்திலும் போதிய கவனம் தேவை. வெளிநாடுகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கல்வி விஷயங்களில் சற்று முன்னேற்றம் ஏற்படும். இந்த மாதம்  தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம். வெளிப்புற விளையாட்டுகளை விளையாடும் போது கவனமாக இருக்க பரிந்துரைக்கப்படுகிறது.

கல்வியில் சிறந்து விளங்க : புதன் பூஜை

சுப தேதிகள் : 2, 3, 4, 5, 9, 10, 11, 12, 13, 18, 19, 20, 21, 29 & 30.

அசுப தேதிகள் : 14, 15, 22, 23, 24, 25 & 26.