Skanda Shasti 2025: Invoke Warrior-God Muruga during the Six Power Days for Victory & Transformation Blessings Join Now
கும்பம் நவம்பர் மாத ராசி பலன் 2023 | November Matha kumbam Rasi Palan 2023
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

கும்பம் நவம்பர் மாத ராசி பலன் 2023 | November Matha kumbam Rasi Palan 2023

Posted DateOctober 30, 2023

கும்பம் நவம்பர் மாத பொதுப்பலன்கள் 2023

கும்ப ராசி அன்பர்களின் வாழ்வில்  பிரச்சினைகள் அதிகரிக்கலாம். தவிர, நீங்கள் தாழ்வு மனப்பான்மையை உணரலாம். மாதத்தின் இரண்டாம் பாதியில் உங்கள் நம்பிக்கை கூடும். வழிகாட்டிகள் மற்றும் குருக்களின் வழிகாட்டுதல் மட்டுமே உங்களுக்கு சாதகமாக அமையும். மேலும், குடும்பத்தில் எதிர்பாராத புதிய பிரச்சனைகள் வரலாம். வாழ்க்கையின் பல அம்சங்களில் இருந்து அழுத்தம் இருக்கலாம். பலனை எதிர்பாராமல் உங்கள் கடமைகளைச் செய்வது அதாவது உங்கள் செயல்கள் சேவை சார்ந்ததாக இருப்பது நல்லது.  வாகனம் தொடர்பான அசௌகரியங்களையும் சந்திக்க நேரிடும். நெருங்கியவர்கள் மற்றும் அன்பானவர்களின் உண்மையான தன்மை பற்றி நீங்கள் அறிந்து கொள்வீர்கள். யோகா மற்றும் தியானம் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். கும்ப ராசிக்காரர்கள் எந்தவிதமான வாக்குவாதங்களிலும் ஈடுபடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். ஆன்மீக யாத்திரை இந்த மாதத்தில் ஆறுதல் தரும். உயர்ந்த அறிவு மற்றும் ஞானத்தைப் பெறுவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

காதல் / குடும்ப உறவு :

காதல் மற்றும் உறவு விஷயங்களில் கடினமான காலகட்டத்தைக் காண்பீர்கள். தம்பதியரிடையே கருத்து வேறுபாடுகள், மற்றும் வாக்குவாதங்கள் ஏற்படலாம். காதல் விவகாரங்களின் முன்னேற்றத்தில் நிறைய தடைகளையும் தடங்கல்களையும் சந்திக்க நேரும். வாழ்க்கைத் துணையுடனான உறவை கவனமாகக் கையாள வேண்டியிருக்கும். காதல்/உறவில் ஏற்பட்ட தோல்வி/ ஏமாற்றம் போன்ற காரணங்களால்  சிலருக்கு மனவேதனை ஏற்படலாம். திருமணத்திற்கு துணை தேடுபவர்களுக்கு இது சரியான நேரம் அல்ல என்பதால் யோசனையை ஒத்திவைக்க வேண்டியிருக்கும். இந்த மாதத்தில் ஏமாற்றங்கள் மற்றும் பின்னடைவுகள்இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் திடீர் சரிவைக் காணக்கூடும். அவரிடம் இருந்து போதுமான ஆதரவைப் பெற முடியாது. இந்த மாத இறுதியில் காதல் மற்றும் உறவு விஷயங்களில் ஒப்பீட்டளவில் சிறந்த காலகட்டத்தைக் காணலாம். இந்த மாதம் வாழ்க்கைத் துணையின் நடத்தையால் நீங்கள் உணர்ச்சிவசப்படக்கூடும்.

திருமண உறவில் நல்ல்லிணக்கம் காண  : சூரியன் பூஜை

நிதிநிலை :

ஆரோக்கியம் சார்ந்த மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான எதிர்பாராத செலவுகள் ஏற்படும். மறைவான ஆதாரங்கள் மூலம் பண வரவுகளைப் பெறுவீர்கள்.  சொத்து வாங்குதல், ஆன்மீக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல் மற்றும் ஆன்மீக சுற்றுலா மற்றும் பயணங்கள் போன்ற நன்மையான நோக்கங்களுக்காகவும் செலவழிப்பீர்கள். இருப்பினும், பொதுவாக பெண்கள் மூலம் கடன் அதிகரிக்கலாம். இந்த மாதத்தில் ஒட்டுமொத்த நிதி நிலையும் மிதமாக இருக்கலாம். தலைமைத்துவ திறமை மற்றும் அதிகாரம் மூலம் நீங்கள் நன்றாக சம்பாதிக்கலாம். இருப்பினும், இந்த மாதம் உங்களுக்கு மற்றும் பங்குதாரரின் ஆரோக்கியத்திற்காக செலவுகள் அதிகமாக இருக்கும். பங்குச் சந்தைகளில் ஊகங்கள் மற்றும் முதலீடுகள் உங்களுக்கு சாதகமான முடிவுகளைத் தராது. குடும்பத்தில் ஏற்படும் எதிர்பாராத செலவுகளால் உங்களுக்கு நிதி பொறுப்புகள் அதிகரிக்கும். சிலர்  அதிர்ஷ்ட ஆதாயங்கள் மற்றும் லாட்டரி போன்றவற்றின் மூலம் வருமானத்தைப் பெறலாம்.

உங்கள் நிதிநிலை மேம்பட : ராகு பூஜை

உத்தியோகம் :

கும்ப ராசிக்காரர்களின் உத்தியோக வாழ்க்கை இந்த மாதம் சாதகமான மாற்றங்களைச் சந்திக்கும். இந்த காலகட்டத்தில்  மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.  புதிய கடமைகள் மற்றும் பொறுப்புகள் உங்களுக்கு வழங்கப்படலாம். பிரச்சனைகள் இருந்தபோதிலும், கடின முயற்சி மற்றும் நல்ல தலைமைத்துவத்துடன் பணியிடத்தில் விரும்பிய முடிவுகளை அடையலாம். நவம்பர் மாதத்தில் வேலைகளை மாற்றுவது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். கும்ப ராசிக்காரர்களில் சிலருக்கு தொழில் சம்பந்தமான விஷயத்திலாவது தாழ்வு மனப்பான்மை குறையலாம். இந்த மாதத்தில் பணியிடத்தில் சிறிய அதிர்ஷ்டத்தைக் காண்பீர்கள். தலைமைப் பதவியை அடைய விரும்புபவர்கள் நவம்பர் மாதத்தில் அதைப் பெறலாம்.

தொழில் :

கும்ப ராசிக்காரர்களால் மேற்கொள்ளப்படும் வியாபாரத்தில் இந்த மாதத்தில் கூட்டாளிகள் மற்றும் பங்குதாரர்கள் மற்றும் குறிப்பாக பெண் பங்குதாரர்களிடமிருந்து பிரச்சனைகளை சந்திக்க நேரும்.  வியாபாரத்தில் எடுக்கும் முடிவுகளைச் செயல்படுத்த வலுவான மனவலிமை அவசியம். இந்த மாதத்தில் முதலீட்டு மதிப்பு கணிசமான குறைப்பு மற்றும் இழப்பைக் காணக்கூடும். வருவாய் மற்றும் நிதி வரவு சராசரிக்கு மேல் இருக்கும்.  வியாபாரத்தில் அதிக பொறுப்பான முடிவுகள் நல்ல பலனைத் தரும். வியாபாரத்தை ஸ்திரப்படுத்துவதில் அதிர்ஷ்டமும் பங்கு வகிக்கும். கூட்டாண்மைத் தொழில்கள் மாதத்தின் இரண்டாம் பாதியில் நல்ல பலன்களைத் தரக்கூடும். வணிகத்தின் கூட்டாளர்களுக்கும் வழிகாட்டிகளுக்கும் இடையில் தவறான புரிதல்கள் ஏற்படலாம்.  ஸ்தாபனத்தில் சிலருக்கு வியாபார சிக்கல்களில்   இருந்து வெளிவர தெய்வ அருள் உதவும். மாத இறுதியில் வியாபாரத்தில் நல்ல அதிகாரம் கிடைக்கும்.

தொழில் வல்லுனர்கள் :

கும்ப ராசி தொழில் வல்லுனர்கள் தங்கள் தொழிலில் மிதமான காலகட்டத்தைக் கொண்டிருப்பார்கள்.  புத்திசாலித்தனம் குறுகிய காலத்தில் உதவியாக இருக்கும். சொந்த தொழில் விஷயங்களில் வாக்குவாதங்கள் மற்றும் தகவல் தொடர்பு சிக்கல்கள் இருக்கலாம். பண வரவு சராசரிக்கு மேல் இருக்கலாம். புதிய ஒப்பந்தங்கள்  சில ஆரம்ப போராட்டங்களுக்குப் பிறகு இறுதிக் கட்டத்தை அடையலாம். நீங்கள் தொழிலில் அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் வெளிப்படுத்துவீர்கள். பணியிடத்தில் சக ஊழியர்கள் மற்றும் முதலாளியுடனான உறவு மாதத்தின் பிற்பகுதியில் மேம்படும். தொழில் ரீதியான சிறப்பான அணுகுமுறை காரணமாக  தொழிலில் அடுத்த நிலைக்கு உயர்வீர்கள். தொழில் விஷயங்களில் தலைமைத்துவ திறமையில் தெளிவு இருக்கும். சிறந்த செயல்திறனுக்காக உணர்ச்சிவசப்படாமல் செயல்படுவது நல்லது.  இந்த மாதத்தில் வாடிக்கையாளர்களிடமிருந்து பாராட்டு மற்றும் நேர்மறையான கருத்துக்களைப் பெறலாம்.

உத்தியோகம்,மற்றும் தொழிலில் மேன்மை பெற : சனி பூஜை

ஆரோக்கியம்:

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சரியாக இருக்காது.  அடிக்கடி அலைச்சல்கள் வரலாம். இந்த மாதத்தில் காயங்கள் மற்றும் விபத்துகளைச் சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன. குடும்பத்தில் நிலவும் மோசமான சூழ்நிலையால் நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். எனவே, ஆரோக்கிய விஷயங்களில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட :கேது பூஜை

மாணவர்கள் :

கும்ப ராசி மாணவர்கள்  இந்த  மாதம் கல்வியில் தடைகளையும், தடங்கல்களையும்  சந்திப்பார்கள். மாணவர்களின்  நினைவாற்றல் மற்றும் நுணுக்கமான விஷயங்களை கற்கும் திறன் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு தேர்வுகளில் மிதமான காலம் இருக்கும். இருப்பினும், இந்த காலகட்டத்தில் கும்ப ராசி மாணவர்களுக்கு கவனமின்மை மற்றும் சோம்பல் போன்ற எதிர்மறையான அம்சங்கள் முன்னேற்றத்தில் தடையாக  இருக்கலாம்.  மாதப் பிற்பாதியில் தேர்வுகள் மற்றும் ஒட்டுமொத்த கல்வியிலும் நல்ல பலன்கள் இருக்கும். இந்தக் காலக்கட்டத்தில் கல்வியில் கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். வெளிநாட்டில் கல்வி தொடர்பான விஷயங்களில் மாணவர்களுக்கு  முன்னேற்றம் கூடும்.

கல்வியியல் சிறந்து விளங்க : சரஸ்வதி பூஜை

சுப தேதிகள் : 4, 5, 6, 7, 8, 14, 15, 16, 17, 25, 26, 27 & 28.

அசுப தேதிகள் : 9, 10, 11, 18, 19, 20, 21,& 22.