முருகன் என்றால் அழகன் என்று பொருள். அழகனாகத் திகழும் முருகன் நமக்கு அளிக்கும் அருள் ஏராளம். மலை மேல் குடிகொண்டிருக்கும் முருகன் பக்தர்கள் மனதிலும் குடி கொண்டு இருக்கிறான் என்றால் மிகை ஆகாது. போர்க் கடவுளாகத் திகழும் முருகன் நமது மனப் போராட்டங்களை தீர்க்க வல்லவன். ஓம் முருகா என்று கூறி வழிபட்டாலும், அரோகரா கோஷம் போட்டாலும் நமது வாழ்வில் அற்புதங்களை நிகழ்த்தக் கூடியவர் முருகர். நாம் முருகனுக்கு எத்தனையோ வழிபாடுகள் செய்கிறோம். செய்து இருப்போம். முருகனை எளிமையான மந்திரம் கூறியும் வழிபடலாம். அந்த எளிய மந்திர வழிபாட்டைப்பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
பொதுவாக முருகனுக்கு நேர்ந்து கொண்டால் காவடி, பால் குடம், அலகு குத்தல் போன்ற கடினமான வழிபாடுகளைத் தான் நாம் கேள்விப்பட்டு இருப்போம். முருகனை எளிய முறையிலும் வழிபட்டு நற்பலன்களைப் பெறலாம்.
முருகனை வழிபட எளிய மந்திரம்
“ஓம் நமோ குமாராய நம:”
இந்த எளிய மந்திர வழிபாடு ஆரம்பிக்க செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரை உகந்ததாக கருதப்படுகிறது. காலையில் எழுந்து வீட்டை தூய்மை செய்து கொள்ள வேண்டும். பூஜை அறையையும் சுத்தமாக்கி கோலம் போட்டுக் கொள்ளுங்கள். குளித்து முடித்து முருகர் படத்திற்கு முன் விளக்கு ஏற்ற வேண்டும். முருகருக்கு உகந்த செவ்வரளி பூக்களால் அர்ச்சனை செய்வதோ மாலையாக சூடுவதோ உகந்தது. எளிமையான நெய்வேத்தியத்தை வைக்கலாம். பிறகு மேலே கூறிய மந்திரத்தை 108 முறை கூற வேண்டும். இதை பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் கூற வேண்டும்.
மனதில் நம்பிக்கையுடன் இருங்கள். மந்திரம் கூறி முடித்த பிறகு முருகப்பெருமானை மனதார நினைத்து உங்களுடைய எந்த வேண்டுதலோ அதை நிறைவேற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுங்கள் நிச்சய முருகப்பெருமான் உங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார். நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற இந்த வழிபாடு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025