ஜோதிடத்தில் கிரக பெயர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அதிலும் குரு, ராகு, கேது இவை வருடப் பெயர்ச்சி கிரகங்கள் ஆகும். குருபெயர்ச்சி ஒரு வருட காலமும் ராகு-கேது பெயர்ச்சி ஒன்றரை வருட காலமும் நீடிக்கும். மங்களகாரகன் என கருதப்படும் குரு மே 1, சித்திரை மாதம் 18 ஆம் தேதி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பார்க்கக் கோடி நன்மை என்று கூறுவார்கள். குருபகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு அதிக நன்மைகளை செய்வார் என்பது நம்பிக்கை. இந்த பெயர்ச்சியானது அனைத்து ராசியினருக்கும் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்த உள்ளது. அது சில ராசியினருக்கு நற்பலனாகவும் சிலருக்கு கெடுபலனாகவும் அமையும்.
பொதுவாக பெயர்ச்சிக் காலத்தில் கிரக வழிபாடு சிறந்த பலனைத் தரும். அந்த வகையில் குருபெயர்ச்சி அன்று குறு பகவானை வழிபடுவது சிறப்பு. வழிபாட்டின் மூலம் பாதக நேரம் மற்றும் பலனைக் கூட நாம் சாதகமாக மாற்றிக் கொள்ளலாம். பொதுவாக குரு பகவான் நன்மைகளை அதிகம் செய்வார். குறைவான கெடுபலன்களை அளிப்பார். தனகாரகன் எனப்படும் குருபகவான் சாதகமான நிலையில் இருந்தால் நமக்கு வாழ்வில் பணம், புகழ், அந்தஸ்து என நற்பலன்களை அளிப்பார். நல்ல புத்திர பாக்கியம் கிட்டும். ஆன்மீகத்தில் மேன்மை கிட்டும். மகான்கள் மற்றும் குருக்களின் ஆசிகள் கிட்டும். இதுவே பாதகமான நிலையில் இருந்தால் இதற்கு எதிர்மறையான பலன்கள் கிட்டும்.
குருமந்திரம் கூறி வழிபடுவதன் மூலம் சாதக விளைவுகளை மேம்படுத்திக் கொள்ளவும், பாதக விளைவுகளை குறைத்துக் கொள்ளவும் முடியும். அப்படிபப்ட்ட மந்திரம் பற்றி இந்தப் பதிவில் காண்போம். இந்த மந்திரத்தை சொல்வதன் மூலம் நற்பலனைப் பெறலாம். இந்த மந்திரத்தை குரு ஓரையில் கூறலாம்.இதற்கு முதலில் உங்கள் வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து விட்டு ஒரு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். நல்ல மணம் கமழும் ஊதுபத்திகளை ஏற்றி வைத்து விட்டு மஞ்சள் நிற பூக்களை கையில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கீழ் வரும் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.
ஓம் விருஷபத் வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குருஹ் ப்ரசோதயாத்
பூஜை அறையில் ஒரு விளக்கை ஏற்றி அந்த விளக்கை மஞ்சள் நிற பூக்களால் அலங்கரிப்பது நல்லது. மேலும் மஞ்சள் நிற பூக்களை உங்கள் பூஜை அறையில் இருக்கும் ஒவ்வொரு படத்திற்கும் வைத்துக் கொண்டே இந்த மந்திரத்தை சொல்லுங்கள். இதை சொல்லும் பொழுது குருபகவானை மனதார நினைத்துக் கொள்ளுங்கள். பிறகு பூஜையறையில் கிழக்கு அல்லது வடக்கு பார்த்து அமர்ந்து கொள்ளுங்கள். இந்த மந்திரத்தை 108 முறை கூற வேண்டும். மந்திரத்தைக் கூறி முடித்த பின் தூப தீப ஆராதனை செய்து இறைவனை வழிபடுங்கள். காலை அல்லது மாலை கோவிலுக்குச் சென்று நவக்கிரகத்தில் இருக்கும் குரு பகவானுக்கு கொண்டைக் கடலை மாலை சார்த்தி, விளக்கு ஏற்றி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025