நமது வேண்டுதல்கள் நிறைவேற நாம் இறைவனை பிரார்த்திக்கிறோம். ஒரு சில சமயங்களில் நமது வேண்டுதல் நிறைவேற நீண்ட நாட்கள் எடுக்கலாம். ஒரு சில சமயங்களில் அது வெகு விரைவில் நிறைவேறலாம். அந்த வகையில் நமது வேண்டுதல் நிறைவேற நாம் என்ன வழிபாடு மேற்கொள்ளலாம் என்று இந்தப் பதிவில் காணலாம் வாருங்கள்.
நமது வேண்டுதல் நிறைவேற வழிபாடோ அல்லது பரிகாரமோ நாம் செய்வதற்கு நமக்கு நேரம் தேவைப்படும். அதிக நேரம் நம்மால் செலவழிக்க முடியாமல் போகலாம். நமது வேண்டுதலை எளிமையாக்கி நமக்கு அருள் புரியும் கடவுள்களில் ஆஞ்சநேயர் மிக முக்கியமானவர். வலிமையும் ஆற்றலும் மிக்க ஆஞ்சநேயர் ராம நாமத்திலேயே திருப்திபடக் கூடியவர். அதுமட்டும் அன்று நமது கர்ம வினைகளுக்கு ஏற்ப நம்மை ஆட்டி வைக்கும் சனி பகவானின் அதிபதியாகத் திகழ்பவர். இவரை வணங்குவதன் மூலம் நாம் ஏழரை சனி, கண்ட சனி, அர்த்தஷ்டம சனி என சனியின் தாக்கங்களில் இருந்து விடுபட இயலும். அத்தகு சக்தி வாய்ந்த ஆஞ்சநேயரை சனிக்கிழமை தோறும் வழிபடுவதன் மூலம் நமது சனி தோஷம் நீங்கும் பிரச்சினைகளின் தீவிரம் குறையும்.
அப்படிப்பட்ட ஆஞ்சநேயரை வழிபடும் ஒரு எளிய முறையை இந்தப் பதிவில் அளிக்கிறோம்.
இந்த வழிபாட்டை நீங்கள் பங்குனி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமையில் மேற்கொள்ளலாம்.. பங்குனி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமை அன்று பகல் 12 மணிக்குள் இந்த வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும்.
இந்த வழிபாட்டிற்கு நமக்கு தேவையான பொருள் 108 எண்ணிக்கையில் வெற்றிலை தான். காலையில் எழுந்து குளித்து முடித்து யாரிடமும் எதுவும் பேசாமல் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வையுங்கள். பிறகு ஒரு மஞ்சள் நிற நூலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 108 வெற்றிலைகளையும் வைத்து மாலையாக கட்டிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முறையும் வெற்றிலையை வைத்து மாலை கட்டும் பொழுது உங்களின் வேண்டுதலை கூறிக் கொண்டே கட்ட வேண்டும். இப்படி 108 வெற்றிலையையும் மாலையாக கட்டிய பிறகு யாரிடமும் எதுவும் பேசாமல் நேராக அருகில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு சென்று ஆஞ்சநேயருக்கு இதை சாற்ற வேண்டும்.
பிறகு கடுகு எண்ணெயை பயன்படுத்தி இரண்டு தீபங்களை ஆஞ்சநேயருக்கு ஏற்றி வைத்து ராமா ராமா என்று கூறி 11 முறை ஆஞ்சநேயரை வலம் வர வேண்டும்.
உங்களின் வழிபாடு முடியும் வரை உங்கள் வேண்டுதலில் கவனமாக இருங்கள். வழிபாடு முடியும் வரை யாரிடமும் எதுவும் பேசாதீர்கள். வழிபாட்டை நிறைவு செய்த பிறகு பிறரிடம் பேசலாம்.
இப்படி பங்குனி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயரை நாம் வழிபாடு செய்தோம் என்றால் நீண்ட நாட்களாக எண்ணிக் கொண்டிருந்த காரியங்கள் விரைவில் நிறைவேறும்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025