Skanda Shasti 2025: Invoke Warrior-God Muruga during the Six Power Days for Victory & Transformation Blessings Join Now
நவபஞ்ச யோகம்: 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சூழும் நேரம்!
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

5 ராசிக்காரர்களுக்கு அடித்தது யோகம்; நற்பலன்களை தரும் ‘நவபஞ்ச யோகம்’!

Posted DateJuly 27, 2025

நற்பலன் தரும் நவபஞ்சம் யோகம் மூலம் அதிர்ஷ்டம் பெரும் ஐந்து ராசிகள்

நவபஞ்சம் யோகம் என்றால் என்ன ?

ராசி மண்டலம் என்பது 360 பாகைகள் கொண்டது. பாகை என்பது ஆங்கிலத்தில் டிகிரி என்று கூறப்படும். நமது புரிதலுக்காகத்  தான் ராசி மண்டலத்தை சதுரமாக அளிக்கிறார்கள். ஒவ்வொரு ராசிக் கட்டமும் 30 பாகைகள்  கொண்டது. அவற்றுள் ஒன்பது கிரகங்கள் இடம் பெறுகின்றன. ஜாதக கட்டத்தில் இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று 120 டிகிரி கோணத்தில் அமைந்து, அதாவது  ஒன்றுக்கொன்று ஒன்பதாவது மற்றும் ஐந்தாவது வீடுகளில் இருக்கும்போது நவபஞ்சம யோகம் உருவாகிறது. நவபஞ்சம் யோகம் என்பது ஜோதிடத்தில் ஒரு முக்கியமான யோகமாகும், இந்த யோகம் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இது ஜாதகரின்  வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் வெற்றியைக் கொண்டுவருகிறது.

கிரக நிலை மாற்றங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான பலன்களை அளிக்கும். அந்த வகையில் இரு வேறு கிரகங்கள் 9-வது மற்றும் 5-வது இடத்தில் இடம்பெற, ‘நவபஞ்ச யோகம்’ எனும் யோகம் உருவாகிறது. ஜோதிட முறைகளில் மங்களகரமான யோகங்களில் ஒன்றாக பார்க்கப்படும் இந்த நிகழ்வு, ஒரு சிலருக்கு எதிர்பாராத நற்பலன்களையும், ஒரு சிலருக்கு சவால்களை நிறைந்த காலத்தையும் உண்டாக்குகிறது.

ஜூன் 28, 2025 அன்று சனி மற்றும் புதன் ஆகிய இரண்டு கிரகங்களும் 120° கோணத்தில் இடம்பெறுகின்றன. அதாவது, 5 மற்றும் 9-வது இடத்தை பிடித்து வலிமையான நவபஞ்ச யோகத்தை உண்டாக்குகின்றன. சனி மற்றும் புதன் கிரகத்தின் நிலை மாற்றத்தால் உண்டாகும் இந்த ராஜ யோகம் யாருக்கெல்லாம் நற்பலன்களை அளிக்கும் என்று காணலாம் வாருங்கள்

மேஷம்

நவபஞ்ச யோகத்தின் காரணமாக தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குறிப்பாக கூட்டுத் தொழில் மூலம் லாபம் கிடைக்கும். பதவி உயர்வுகள் மற்றும் வருமான அதிகரிப்புக்கான வாய்ப்புகள் உள்ளன. நீண்ட நாட்களாக நீடித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும், நிலுவையில் இருந்த ஒப்பந்தங்கள் முடிவாகும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும். நீங்கள் விவேகத்துடனும் புத்திசாலித்தனமாகவும் பணத்தைக் கையாள்வீர்கள்.  புதிய முதலீடுகள் மூலம் லாபம் பெறலாம். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு திருமணம் கை கூடி வரும்.  குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். கணவன் – மனைவி இடையே நீடித்து வந்த கருத்து வேறுபாடு மறைந்து மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு  வழி பிறக்கும். சொந்த வீடு வாங்கும் யோகம் வரலாம் அல்லது பழைய வீட்டை சீரமைக்கலாம். சமூகத்தில் அங்கீகாரம் பெறுவீர்கள். உடல் நலனில் முன்னேற்றம் காண்பீர்கள்; குறிப்பாக, நாள்பட்ட நோய் பிரச்சனையில் இருந்து சற்று நிவாரணம் காண்பீர்கள்.

கன்னி

இது அதிர்ஷ்டமான நேரம் என்று கூறலாம். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு பொருளாதார ரீதியாக ஆதரவு அளிப்பார்கள். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை கூடும். குழந்தை பாக்கியம் கை கூடும். குடும்பத்தில் இணக்கமான உறவுகள் காணப்படும்.  தொழில் பாதையில் உள்ள தடைகள் நீங்கும் என்றும், புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கலாம். தொழில் செய்வதில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும், தடைகள் நீங்கும். புதிய வாய்ப்புகள் கிட்டும். மேலும் தொட்டதெல்லாம் பொன்னாகும் வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது. இந்த யோகத்தின் முழு பலனையும் பெற,  வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்த வேண்டும். வேலை தேடுபவர்களுக்கு வேலை குறிப்பாக அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. போட்டி தேர்வு எழுதும் மாணவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்.

 விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு இது ஒரு மங்களகரமான யோகமாக கருதப்படுகிறது.இது  தொழில் மற்றும் நிதி சார்ந்த முன்னேற்றங்களைக் கொண்டுவரும். தொழில் முன்னேற்றம், பணவரவு,  கடன் பிரச்சனைகள் தீர்தல், மற்றும் நிதி ஆதாயம் போன்ற நன்மைகளைத் தரும். குறிப்பாக, வருமான ஆதாரங்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. வாழ்க்கையில் நல்ல மாற்றங்களையும், முன்னேற்றத்தையும் கொண்டுவரக்கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு வேறு ஏதேனும் மூலத்திலிருந்து வருமானம் கிடைக்கலாம். குடும்ப உறவுகள் உங்கள் முயற்சிக்கு துணையாக இருப்பார்கள். குறிப்பாக, உங்கள் வாழ்க்கை துணை, பக்க பலமாய் உடன் நிற்பார். சமூகத்தில் நற்பெயர் கிடைக்கும், சமூகம் சார்ந்த பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும், குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கையில் உங்கள் இருப்பு அவசியமாகும்.

 தனுசு

நவபஞ்ச யோகம், தனுசு ராசியினருக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வருகிறது. தொழில் சார்ந்த முடிவுகளில் நீங்கள் வெற்றி காணலாம்.பணியிடத்தில் வேலைப் பளு கூடலாம். பொறுப்புகள் அதிகரிக்கலாம். புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம்.  உத்தியோகத்தில் நீங்கள் மேலதிகாரிகளின் அங்கீகாரம் மற்றும் பாராட்டைப் பெறலாம். சக பணியாளர்களின் ஆதரவை பெறலாம். அதன் மூலம் உங்கள் இலக்குகளை நீங்கள் விரைவாக அடையலாம். வேலை நிமித்தமாக நீங்கள் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும்.நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பூர்வீக சொத்துக்கள் உங்கள் கைக்கு வரலாம். உடன் பிறந்தவர்களுடனான பிரச்சினைகள் தீர்ந்து இணக்கமான உறவு ஏற்படலாம். காதல் வாழ்க்கை சிறக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.

கும்பம்

அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்க, தொட்டதெல்லாம் பொன்னாக மாறும். காதல் துணையின் ஆதரவு, லட்சிய பாதையில் வெற்றி காண உதவி செய்யும்.தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேற்றம், வருமானம் அதிகரித்தல் போன்ற பலன்கள் கிடைக்கலாம். கும்ப ராசியினரின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.  வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இது பொன்னான காலமாக இருக்கும். என்றாலும் செய்யும் தொழிலில் நிதானம் அவசியம். அவசர முடிவுகள் கூடாது, எந்த ஒரு முக்கிய முடிவை எடுக்கும் முன்னரும் ஒன்றுக்கு பல முறை சிந்தித்து மு.டிவு எடுப்பது நல்லது. அனுபவம் உள்ளவர்களிடம் ஆலோசனை செய்வது நல்லது. வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்த மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம்!