Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
ஸ்ரீ நாராயண ஸூக்தம் பாடல் வரிகள் | Narayana Suktam Lyrics in Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

ஸ்ரீ நாராயண ஸூக்தம் பாடல் வரிகள் | Narayana Suktam Lyrics in Tamil

Posted DateMay 13, 2024

நாம் இந்த உலகில் அனுபவிக்கும் இன்ப துன்பம் அனைத்திற்கும் நமது கர்ம வினைகளே காரணம். இதற்கு மாற்று வழியே கிடையாதா என்று நம்மில் பலர் ஏங்குவதும் உண்டும். அதற்காகத் தான் நமது முன்னோர்களும் ரிஷிகளும் பல வைதீக சூக்தங்களை அருளியுள்ளார்கள். ஆயுளை நீட்டிக்கும் ஆயுஷ்ய ஸுக்தம், இறைவனை அறிய வழி காட்டும். ஹிரண்ய கர்ப ஸுக்தம், விஷ்ணுவை துதிக்க விஷ்ணு ஸுக்தம்,அறிவை வளர்க்கும் சரஸ்வதி ஸுக்தம், ஸ்ரீமன் நாராயணனை துதிக்க ஸ்ரீ நாராயண  ஸுக்தம் என்று பல சூக்தங்கள் கணக்கே இல்லாமல் உள்ளன. ஒவ்வொன்றையும் பாராயணம் செய்வதன் மூலம் கணக்கற்ற பலன்களைப்  பெற முடியும் என்று நமது முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளனர். இன்றைய பதிவில் ஸ்ரீ நாராயண ஸுக்தம் பாடல்  வரிகளைக் காணலாம். நாரயணன்

நமது வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களில் இருந்து விடுபடுவதற்கான வழிகளை நமக்கு காட்டுவார். அதனால் இதனை முழுதாக படித்து நாராயணின் அருளும் ஆசிர்வாதத்தையும் பெற்று  நல் வாழ்வு வாழுங்கள்.

 

ஸ்ரீ நாராயண‌ ஸுக்தம்

ஸஹஸ்ர ஷீர்ஷம் தேவம் விஷ்வாக்ஷம் விஷ்வஷ‌ம்புவம்

விஷ்வை நாராயணம் தேவம் அக்ஷரம் பரமம் பதம்   1

விஷ்வத: பரமான்னித்யம் விஷ்வம் நாராயணம் ஹரிம்

விஷ்வம் ஏவ இதம் புருஷ: தத்விஷ்வம் உபஜீவதி   2

பதிம் விஷ்வஸ்ய ஆத்மா ஈஷ்வரம் ஷ‌ாஷ்வதம் ஷ‌ிவமச்யுதம்

நாராயணம் மஹாஜ்ஞேயம் விஷ்வாத்மானம் பராயணம்   3

நாராயண பரோ ஜ்யோதிராத்மா நாராயண: பர:

நாராயண பரம் ப்ரஹ்ம தத்த்வம் நாராயண: பர:

நாராயண பரோ த்யாதா த்யாயன் நாராயண: பர:   4

யச்ச கிஞ்சித் ஜகத் ஸர்வம் த்ருʼஷ்யதே ஷ்ரூயதேऽபி வா

அந்தர்பஹிஷ்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தித:   5

அனந்தம் அவ்யயம் கவிம் ஸமுத்ரேந்தம் விஷ்வஷ‌ம்புவம்

பத்ம கோஷ‌ ப்ரதீகாஷ‌ம் ஹ்ருʼதயம் ச அபி அதோமுகம்   6

அதோ நிஷ்ட்யா விதஸ்த்யாந்தே நாப்யாம் உபரி திஷ்டதி

ஜ்வாலாமாலாகுலம் பாதீ விஷ்வஸ்யாயதனம் மஹத்   7

ஸந்ததம் ஷ‌ிலாபிஸ்து லம்பத்யா கோஷ‌ஸன்னிபம்

தஸ்யாந்தே ஸுஷிரம் ஸூக்ஷ்மம் தஸ்மின் ஸர்வம் ப்ரதிஷ்டிதம்   8

தஸ்ய மத்யே மஹானக்னி: விஷ்வார்சி: விஷ்வதோ முக:

ஸோஸக்ரவிபஜந்திஷ்டன் ஆஹாரம் அஜர: கவி:   9

திர்யகூர்த்வமதஷ்ஷ‌ாயீ ரஷ்மய: தஸ்ய ஸந்ததா

ஸந்தாபயதி ஸ்வம் தேஹமாபாததலமாஸ்தக:

தஸ்ய மத்யே வஹ்னிஷ‌ிகா அணீயோர்த்வா வ்யவஸ்திதா:   10

நீலதோயத-மத்யஸ்த-த்வித்யுல்லேகேவ பாஸ்வரா

 நீவாரஷூகவத்தன்வீ பீதா பாஸ்வத்யணூபமா   11

தஸ்யா: ஷ‌ிகாயா மத்யே பரமாத்மா வ்யவஸ்தித:

ஸ ப்ரஹ்ம ஸ ஷ‌ிவ: ஸ ஹரி: ஸ இந்த்ர: ஸோஸக்ஷர: பரம: ஸ்வராட்   12

ருʼதம் ஸத்யம் பரம் ப்ரஹ்ம புருஷம் க்ருʼஷ்ண பிங்கலம்

ஊர்த்வரேதம் விரூபாக்ஷம் விஷ்வரூபாய வை நமோ நம:   13

ௐ நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி

தன்னோ விஷ்ணு: ப்ரசோதயாத்

ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி: