நாடி ஜோதிடமும் உங்களுக்கான துல்லியமான பலனும் - Astroved Tamil | AstroVed.com
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

நாடி ஜோதிடமும் உங்களுக்கான துல்லியமான பலனும்

Posted DateJune 26, 2025

பொதுவாக நாடியில் மொத்தம் பன்னிரண்டு காண்டங்கள் உள்ளன. அவற்றின் மூலம் நமது எதிர்காலப் பலன்களை துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.  ஆனால் அவற்றை அறிய, முதலில், முதல் காண்டமான பொதுக் காண்டத்தினைப் பார்க்க வேண்டும்.  அதில் ஒருவரைப் பற்றிய பொதுவான செய்திகள் காணப்படும்.  அதாவது ஒருவரது பெயர், தொழில், மற்றும் குடும்ப விபரங்கள் போன்ற பொதுவான விஷயங்கள் பொதுக் காண்டத்தில் காணப்படும். திருமணம், குழந்தைகள், கல்வி,  வேலைவாய்ப்பு,  தொழில், வழிபாடு  போன்ற விரிவான பலன்களை அறிய அததற்கென உள்ள தனித்தனிக் காண்டங்களைப் பார்க்கவேண்டும்.

1 -வது காண்டம்

ஒருவரின் கை ரேகையைக் கொண்டு அந்த நபரின்  பெயர், பெற்றோர், உடன்பிறந்தோர், தொழில் மற்றும் பன்னிர ண்டு பாவ பலன்களை ஆயுட்காலம் வரை சுருக்கமாகக் கூறுவது. இது அவசியம் பார்க்க வேண்டும்.

2- வது காண்டம்

தனம், குடும்பம், வாக்கு, கல்வி, கண் முதலியவைகளைப் பற்றிக் கூறுவது

3 – வது காண்டம்

சகோதரர், சகோதரிகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களால் ஏற்படும் நன்மை தீமைகள்

4-வது காண்டம்

தாயார், மனை, நிலங்கள், வீடு, வாகனம், வாழ்க்கையில் அடையும் சுகங்கள், புதையல் மற்றும் வாழ்வின் மகிழ்ச்சி பற்றிக் கூறுவது.

5 – வது காண்டம்

குழந்தைகள் பிறப்பு, இறப்பு, குழந்தைகளால் ஏற்படும் நன்மைகள், குழந்தைகள் இன்மைக்கு காரணம் பற்றிக் கூறுவது

6 – வது காண்டம்

விரோதி, வியாதி, கடன், வழக்கு, எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள், அவற்றை நீக்கும் வழி முறைகள் பற்றிக் கூறுவது

7 – வது காண்டம்

திருமண காலம், திருமண தாமதம், எந்த திசையில், எப்படிப்பட்ட வரன் அமையும் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பவற்றைப் பற்றிக் கூறுவது

8 – வது காண்டம்

ஆயுள், உயிர் வாழும் காலம், இடையில் ஏற்படும் கண்டங்கள், விபத்துகள் ஆகியவற்றைப் பற்றிக் கூறுவது

9 – வது காண்டம்

தகப்பனார், செல்வம், யோகம், ஆலய தரிசனம், தீட்சை மற்றும் குருவிடம் உபதேசம் பெறுதல் போன்றவற்றைப் பற்றிக் கூறுவது

10 – வது காண்டம்

தொழில், வியாபாரம், உத்தியோகம், எந்தவிதமான வியாபாரம் அல்லது தொழில் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்பதைப் பற்றிக் கூறுவது

11 – வது காண்டம்

லாபம், எந்த வகையில் அதிக லாபம் கிடைக்கும் என்பதைப் பற்றியும், 2-வது திருமணம் மற்றும் அதன் மூலம் ஏற்படும் நன்மைகள் பற்றிக் கூறுவது

12 – வது காண்டம்

செலவு, எந்த வகையில் செலவுகள் ஏற்படும், செலவு ஏற்படக் காரணம், வெளிநாடு செல்வது பற்றியும் அதனால் அடையும் நன்மைகள் பற்றியும் கூறுவது

இதுதவிர சாந்தி காண்டம், தீட்சை காண்டம், ஔஷத காண்டம், என மேலும் சில  காண்டங்கள் உள்ளதாக நாடி ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

ஆஸ்ட்ரோவேத் நாடி ஜோதிடம்

ஆஸ்ட்ரோவேத்  நிறுவனத்தில் பல வருட அனுபவங்கள் வாய்ந்த நாடி வாசிப்பு ஜோதிடர்கள் உள்ளனர். ஓலைச் சுவடிகள்  பழங்கால தமிழ் மொழியில் கவிதை வடிவில் பொறிக்கப்பட்டிருக்கும்.  ஒரு சிலரால் மட்டுமே அவற்றை வாசித்து விளக்க முடியும். இது  ஒரு ரகசிய கலை ஆகும். இந்த நாடி வாசிப்பு கலை,  ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு கற்பிக்கப்படுகிறது. எங்களது நாடி வாசகர்கள் தங்கள் பெரியவர்கள் மற்றும் முன்னோர்கள் மூலம் இந்தப் பயிற்சியைப் பெற்றவர்கள். ஓலைச் சுவடியைப் படித்து அதன் துல்லியமான பலன்களை உங்களுக்கு மிகவும் சிறப்பான வகையில்  வழங்குவார்கள்.

நாடி ஜோதிடம் மூலம் உங்கள் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களுக்கான பலன்களை துல்லியமாக அறிய  ஆஸ்ட்ரோவேத் ஜோதிட நிறுவனத்தை நாடுங்கள்.