காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரம்ம முகூர்த்தம் என்று கூறுவார்கள். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே சற்றேறக்குறைய மறு பிறவி என்று கூறலாம். எனவே ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி நாம் பெறுவதை சிருஷ்டி என்று சொல்லலாம். இத் தொழிலை செய்பவர் பிரம்மா எனவே இவரது பெயரால் விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளார்கள். பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார நட்சத்திர யோக தோஷங்கள் கிடையாது. இது எப்போதுமே சுப வேளை தான். இந்த நேரத்தில் எழுந்து குளித்து இறை வழிபாடு செய்து நமது வேலைகளை செய்ய துவங்கினால் அன்றைய நாள் முழுவதும் வெற்றி கிட்டும்.
மற்ற நேரத்தில் வரும் காற்று விஷக் காற்று. பிரம்ம முகூர்தத்தில் வரும் காற்று அமுதக் காற்று எனப்படும். காலையில் சித்தர்கள், மகான்கள் மற்றும் யோகிகளின் அருள் கிட்டும். அந்த நேரத்தில் நாம் என்ன செயல்கள் செய்கிறோம் என்பதைப் பொறுத்து நமது வாழ்க்கை மாறும். இந்த நேரத்தை சரியாகப் பயன்படுத்தி அதிலும் குறிப்பாக 21 அல்லது 48 நாட்கள் பயன்படுத்திக் கொண்டால் அதுவே பழக்கமாகி நம்மை வெற்றியின் பக்கம் அழைத்துச் செல்லும்.
இந்த நேர வழிபாட்டின் மூலம் வீட்டில் இருந்த கஷ்ட நிலை மாறும். கடன் தொல்லை தீரும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றமை மேலோங்கும். பிரம்ம முகூர்தத்தில் இறை வழிபாடு மேற்கொள்வது பல மடங்கு புன்னியத்தை நமக்கு தேடித் தரும். பிரம்ம முகூர்த்தத்தில் தேவர்கள் தேவதைகள் திருமால், சிவபெருமான், மகாலஷ்மி போன்ற தெய்வங்கள் நமக்கு அருள் பாலிப்பதாக ஐதீகம். இந்த நேரத்தில் தெய்வங்களின் பார்வை நம் மீது படும் போது நமது துன்பங்கள் அனைத்தும் மறைந்து விடும். வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.
பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுவது மட்டும் போதாது. அந்த நேரத்தில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்து வர வேண்டும். தொடர்ந்து நீங்கள் 48 நாள் ஒரே ஒரு வேண்டுலை நினைத்து விளக்கு ஏற்றினால், அந்த விஷயம் அப்படியே நடக்கும் என்பது நம்பிக்கை மட்டும் அல்ல, இது உண்மையும் கூட.
சிறப்பான பிரம்ம முகூர்த்த தீப வழிபாடு ஒன்றை மேற்கொள்வதன் மூலம் உங்கள் வாழ்வில் வளமும் நலமும் பெருகும். நல்ல அகல் விளக்கு ஒன்று எடுத்துக் கொள்ளுங்கள். நல்லெண்ணய் ஊற்றி விளக்கு ஏற்றுங்கள். 48 வது நாள் முடியும் போது, நீங்கள் எதை நினைத்து விளக்கு ஏற்ற தொடங்கினீர்களோ, அது நிச்சயம் நடக்கும். திருமண தடை விலக, நல்ல வேலை கிடைக்க, கடன் சுமை குறைய, நல்ல கணவன் அமைய, நல்ல மனைவி அமைய, குழந்தை பாக்கியம் பெற, இப்படி என்ன வேண்டுதல் உங்கள் மனதில் இருந்தாலும் அதை நினைத்து இந்த விளக்கை ஏற்ற தொடங்கலாம்.
இந்த பரிகாரத்திற்கு நமக்கு முக்கியமாக தேவைப்படும் பொருள் கருப்பட்டி. பெரும்பாலும் சுத்தமான கலப்படம் இல்லாத கருப்பட்டியாக வாங்கிக்கொள்ளுங்கள். அதை தூள் செய்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். தினமும் அதிகாலை வேலை 4:00 மணியிலிருந்து 5:00 மணி வரை இந்த விளக்கு உங்கள் வீட்டில் எரிய வேண்டும். காலையில் எழுந்து குளித்துவிட்டு தான் இந்த விளக்கை ஏற்ற வேண்டும். பூஜையறையில் ஒரு மண் அகல் விளக்கை வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி, 2 சிட்டிகை கருப்பட்டி தூள் போட்டு பஞ்சு திரி போட்டு, விளக்கு ஏற்றனும். தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த விளக்கு ஏற்றப்பட வேண்டும். –
அந்த விளக்கிற்கு முன்பு அமர்ந்து, குலதெய்வத்தை நினைத்து, உங்கள் வேண்டுதல் பலிக்க நம்பிக்கையோடு பிரார்த்தனை வைக்கணும். தினமும் அந்த விளக்கை ஒரு துணி கொண்டு சுத்தம் செய்துவிட்டு, அதே விளக்கில் தினமும் புதுசாக நல்லெண்ணெய், கருப்பட்டி தூள், புதுசாக திரி போட்டு விளக்கு ஏற்றலாம். 48 நாளும் புது திரி தான் போடணும். விளக்கை ஒரு துணி கொண்டு துடைத்து சுத்தம் செய்துவிட்டு தான் மீண்டும் விளக்கு ஏற்றனும் என்பது குறிப்பிடத்தக்கது. எளிமையான வழிபாடு தான் ஆனால் இந்த வழிபாடு ரொம்ப ரொம்ப சக்தி வாய்ந்தது. 48 நாள் விடாமல் இந்த வழிபாட்டை மேற்கொண்டீர்கள் என்றால் இந்த சக்தி உங்களுக்கே தெரியும். ஒரே ஒரு கோரிக்கையை மனதில் நினைத்து 48 நாளும் வழிபாட்டை தொடரவும்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025