Skanda Shasti 2025: Invoke Warrior-God Muruga during the Six Power Days for Victory & Transformation Blessings Join Now
சிம்மம் மே மாத ராசி பலன் 2024 | May Matha Simmam Rasi Palan 2024
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

சிம்மம் மே மாத ராசி பலன் 2024 | May Matha Simmam Rasi Palan 2024

Posted DateApril 16, 2024

சிம்மம் மே மாத பொதுப்பலன்கள் 2024

இந்த மாதம்  நீங்கள் பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் வளர்ச்சி காண இயலும். நீங்கள் தொழிலில் புதிய உத்திகள் மற்றும் தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு இருக்கும். இந்த மாத ஆரமபத்தில் உங்கள் தனிப்பட்ட வாழ்வில் சில சிரமங்கள் காணப்படலாம். என்றாலும் இந்த மாதத்தின் இரண்டாம் பகுதியில் அவற்றை சமாளித்து ஆறுதல் பெறுவீர்கள். அதன் காரணமாக திருப்திகரமான மனநிலை காணப்படலாம். இந்த மாதம் நீங்கள் பொறுமையைக் கடைபிடித்தால் சிரமங்களை வெல்லலாம். உங்கள் வழக்கமான நடவடிக்கைகளில் மட்டும் ஈடுபடுங்கள். மாற்றங்கள் எதுவும் செய்யாதீர்கள். குறிப்பாக உத்தியோகத்தில். வேலை மாற்றம் வேண்டுபவர்கள் உங்கள் எண்ணங்களை சிறிது காலத்திற்கு தள்ளிப் போடுங்கள். இந்த மாதம் அதற்கு ஆதரவாக இல்லை. இந்த மாதத்தின்  இரண்டாம் பகுதிக்குப் பிறகு நிலைமை சற்று சீராகும். வருமானத்தை பெருக்க வேண்டும் என்ற எண்ணம் எழலாம். அதற்கான முயற்சிகள் இழப்புகளை அளிக்கும் என்பதால் அதனை தள்ளிப் போடவும். தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலில் முன்னேற்றம் காண இயலும். நிதி இழப்புகள் மற்றும் சட்ட சிக்கல்களைத் தவிர்க்க வீடுகள், நிலங்கள், வாகனங்கள் மற்றும் சொத்துக்களை வாங்குவதைத் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் சொத்துக்களை விற்று பணம் பெறுவதற்கு இந்த மாதம் அனுகூலமாக இருக்கும். சகோதர சகோதரிகள் பிற  இரத்த உறவுகள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுடன் உறவு பிரச்சினைகளை எதிர்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. எனவே, உங்கள் உணர்ச்சி வசப்படாமல் செயல்பட வேண்டும்.  சுமூகமான உறவைப் பேணுவதற்கு மனதில் அமைதியை வளர்த்துக் கொள்ளவும். தியானம் மேற்கொள்ளவும்.

கணவன் மனைவிக்கு இடையே ஈகோ பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இது உறவின் பிணைப்பு மற்றும் நெருக்கத்தை பாதிக்கும். இது திருமண வாழ்க்கையில் சிரமங்களை அதிகரிக்கும். எனவே, உங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்து, உங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க உங்கள் வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்லுங்கள். இந்த மாதம் காதல் உறவுகளில் தோல்விகள் மற்றும் முறிவுகளைக் காணலாம், மேலும் காதல் உறவுகளில் வெற்றியையும் மகிழ்ச்சியையும் அடைவது கடினம். எனவே, உங்கள் அன்புக்குரியவர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு அவசியம். கல்வியில் தடைகளை கொண்டு வரும் தற்காலிக சிரமங்கள் இருக்கலாம். எனவே, அவற்றைக் கடந்து கல்வியில் வளர்ச்சி பெற பெற்றோரின் ஆதரவைப் பெறுங்கள்.

 காதல் / குடும்ப உறவு :    

காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள்  எழலாம்.  இது காதல் உறவுகளில் சிக்கல்களை அதிகரிக்கும் மற்றும் உங்கள் துணையுடன் முறிவை ஏற்படுத்தும். மேலும், சிரமங்களைத் தவிர்க்க உங்கள் காதல் உறவில் மூன்றாவது நபரின் தலையீட்டை அனுமதிக்காதீர்கள். மூன்றாம் நபர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் பெரிய சிரமங்களை எதிர்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. இது உறவுகளில் முறிவைக் கூட ஏற்படுத்தலாம்.  எனவே, உங்கள் அன்புக்குரியவருடன் தொடர்பு கொள்ளும்போது உணர்ச்சி வசப்படாமல் பொறுமையைக் கடைப்பிடிக்கவும் மிகவும் கவனமாகவும் இருக்க பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், காதல் உறவுகளில் சிரமங்களைத் தவிர்க்க தனிமையை பராமரிக்கவும். பொது இடங்களில் சந்திப்பதைத் தவிர்க்கவும், உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருக்க உங்கள் காதல் உறவைப் பற்றிய விவரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். மேலும், மூன்றாவது நபர் உங்கள் அன்புக்குரியவர்களை சோதிக்க சில யோசனைகளை வழங்கலாம், இது உங்கள் துணையை கோபப்படுத்தலாம். காதலர்கள் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை கொள்ள வேண்டும். உங்கள் அன்புக்குரியவரைப் பற்றி மற்றவர்கள் சொல்வதை நம்பாதீர்கள். நீங்களே ஆராய்ந்து தெரிந்து கொள்ளுங்கள்.  உங்கள் அன்பை வெளிப்படுத்தவும் வெற்றியை அடையவும் இது உறுதுணையான மாதம் அல்ல. மேலும், திடீர் வீழ்ச்சி மற்றும் அவமானம் ஏற்படலாம், இது மனக் கவலைகளை அதிகரிக்கும்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண  : பிருகஸ்பதி பூஜை

நிதிநிலை :

இந்த மாதம் உங்கள் பொருளாதார நிலை சற்று ஆட்டம் காணலாம். சில நிதி நெருக்கடிகளை நீங்கள் சந்திக்க நேரலாம். சிரமங்களும் போராட்டங்களும் அதிகரிக்கலாம். எனவே, நிதி இழப்புகளைத் தவிர்க்க உங்கள் அனைத்து நடவடிக்கைகளிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.  உங்களில் ஒரு சிலர் வேலை இழப்பு காரணமாக வருமானத்தை இழக்க நேரலாம். இது நிதிப் நெருக்கடிகளை மேலும் அதிகரிக்கும். எனவே, முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன், நலம் விரும்பிகளின் ஆதரவைப் பெறுங்கள். அதிர்ஷ்டத்தைப் நம்பி எந்தவிதமான பண முதலீடுகளையும் மேற்கொள்ளதீர்கள்.  இது பெரிய நிதி இழப்புகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, நஷ்டத்தைத் தவிர்க்க எந்த விதமான திட்டங்களிலும் முதலீடு செய்வதிலிருந்து விலகி இருங்கள். உங்கள் வருமானம் மற்றும் சேமிப்பை மேம்படுத்துவது கடினமாக இருக்கும். மேலும், உங்கள் தனிப்பட்ட வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளால் உங்கள் சேமிப்புகள் குறையும். உங்கள் குடும்பத்தினரின் அவசிய மற்றும் அவசர தேவைக்காக பணத்தை செலவு செய்ய நேரலாம். உற்றார் உறவினர்களுக்காக பணம் செலவழிக்கும் வாய்ப்பும் உண்டு. எனவே, எல்லோரிடமிருந்தும் உங்கள் வரம்புகளையும் தூரத்தையும் பேணுங்கள், மற்றவர்களுக்கு கடன் கொடுக்காதீர்கள். வீடு, நிலம், வாகனம், சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளால் இழப்புகளைச் சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன. முருகப் பெருமானை வழிபடுவது இழப்புகளைக் குறைத்து, உங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.

உங்கள் நிதிநிலை மேம்பட : அங்காரகன் பூஜை

உத்தியோகம் :

இந்த மாதம் பணியிடச் சூழல் திருப்தி அளிக்கும் வகையில்  இருக்க வாய்ப்பில்லை. அதிக பணிகள் காணப்படலாம். குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க வேண்டிய கவலை உங்களுக்கு இருக்கலாம். நீங்கள் மனச்சோர்வுடன் காணப்படலாம். பொறுமையுடன் செயல்படுங்கள். வழக்கமான நடவடிக்கைகளில் மட்டும் ஈடுபடுங்கள். பிறரின் செயல்பாடுகளில் குறுக்கிடாதீர்கள். மேலதிகாரி மற்றும் கீழ் பணிபுரிபவர்களால் சிரமங்களை எதிர்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் உங்கள் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படலாம். இந்த மாதம் வேலை மாற்றம் செய்யாதீர்கள். தவறாமல் தியானம் மேற்கொள்ளுங்கள், அதன் மூலம் மன அமைதி கிட்டும்.இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் உங்கள் உத்தியோகத்தில் சிரமங்களை சமாளித்து முன்னேற முடியும்.

 தொழில் :

தொழில் விரிவாக்கம் அல்லது  அபிவிருத்தி நடவடிக்கைகளில் உங்கள் பணத்தை முதலீடு செய்வதிலிருந்து விலகி இருப்பது நல்லது. கூட்டுத் தொழில் இந்த மாதம் சிறப்பாக இருக்க வாய்ப்பில்லை. கூட்டாண்மைகளில் முறிவுகள் மற்றும் வியாபாரத்தில் வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது. சிவபெருமானை தொடர்ந்து வழிபடுவது உங்கள் வியாபார வளர்ச்சிக்கு உதவும்.

உத்தியோகம் / தொழிலில் மேன்மை பெற : சூரியன் பூஜை

ஆரோக்கியம் :

மார்பு, நுரையீரல், இதயம், தொடைகள் மற்றும் தலை தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு, மே மாதம் துணைபுரியும் காலமாகும். எனவே, முழுமையான மீட்புக்காக இந்த பகுதிகளில் சிக்கல்களை எதிர்கொண்டால் நீங்கள் சிகிச்சைக்கு செல்லலாம். சிரமங்களைத் தவிர்க்க உங்கள் எல்லா நடவடிக்கைகளிலும் கவனமாக இருங்கள். முருகப்பெருமானை தவறாமல் வழிபடுவது உடல்நலப் பிரச்சனைகளை சமாளித்து ஆரோக்கியத்தைப் பேண உதவும்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : அங்காரகன் பூஜை

மாணவர்கள் :

இந்த மாதம் மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்திப் படிக்க வேண்டியிருக்கும். மனதை ஒருமுகப்படுத்தி கவனச் சிதறலை தவிர்க்க வேண்டும். வெற்றியை அடைய அர்ப்பணிப்பு தேவை. குடும்பச் செயல்பாடுகள், பொழுதுபோக்கு, நண்பர்களுடன் பயணம் போன்ற  செயல்களை தவிர்த்துவிட்டு, படிப்பில் கவனம் செலுத்தி படிப்பதன் மூலம் வெற்றிக் கனியை பறிக்க இயலும். உயர் படிப்புக்கு விரும்பிய கல்வி நிறுவனத்தில் தேர்வு பெறுவது கடினமாக இருக்கும். உங்கள் இலக்குகளை அடைய ஆசிரியர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் ஆதரவைப் பெறுங்கள்.

கல்வியில் சிறந்து விளங்க : ஹயக்ரீவர் பூஜை

சுப தேதிகள் : 2,6,7,8,9,10,11,12,19,22, 23,24,25,26

அசுப தேதிகள் : 1,4,5,13,14,15,16,17,18,27,28.