Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
மேஷம் மே மாத ராசி பலன் 2024 | May Matha Mesham Rasi Palan 2024
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

மேஷம் மே மாத ராசி பலன் 2024 | May Matha Mesham Rasi Palan 2024

மேஷம் மே மாத பொதுப்பலன்கள் 2024

இந்த மாதம் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிட்டலாம். உங்கள் முயற்சிகளில் நீங்கள் நேர்மறை மாற்றங்களைக் காணலாம். உங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்வில் ஏற்படும் அனுகூலமான மாற்றங்கள் உங்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லலாம். பொருளாதார ரீதியாகவும் நீங்கள் முன்னேற்றம் காண பல வாய்புகள் காணப்படலாம். உங்கள் சேமிப்பு மேம்படலாம். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்ற போதிய பணம் உங்களிடம் இருக்கலாம்.இந்த மாதம்  நீங்கள் மிகுந்த  நம்பிக்கையுடன் செயல்படலாம்.  உங்கள் கனவுகள் யாவும் நனவாகலாம். உங்கள் பெயரும் புகழும் கூடலாம். கடந்த காலத்தில் இருந்து வந்த கவலைகள் நீங்கலாம். மனச்சோர்வு நீங்கலாம். மனதில் அமைதி குடிகொள்ளலாம். இந்த காலகட்டம் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது. உங்களின் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கிட்டும். அதன் மூலம் உங்கள் தொழில் மற்றும் பொருளாதார நிலை மேம்படும் வாய்ப்பு உள்ளது. இளம் வயது மேஷ ராசி அன்பர்கள் மனதில் காதல் மலரும் வாய்ப்புகள் அதிகம். இந்த மாதம் உங்கள் துணையின் ஆதிக்கம் அதிகமாக இருக்கலாம்.  திருமணத்திற்கு முயற்சி செய்பவர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான பலன் கிட்டும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். காயங்களைத் தவிர்க்க உங்கள் பணிச்சூழலிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றவும். விபத்துகள் மற்றும் காயங்கள் போன்ற திடீர் சிரமங்கள் உங்கள் செலவுகளை அதிகரிக்கலாம். ஆன்மிக நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், துர்கா தேவியை வழிபடுவதும் எதிர்மறையான விளைவுகளைக் குறைத்து உங்கள் வளர்ச்சிக்கு உதவும்.

 காதல் / குடும்ப உறவு :

இந்த மாதம் நீங்கள், உங்கள் துணையை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். ஏனெனில் அவர்கள் ஆதிக்கம் ஓங்கி இருக்கலாம். நீங்கள் பொறுமையாக செயல்பட வேண்டிய காலக்கட்டம் இது. உங்கள் காதலைப் பற்றி நீங்கள் குடும்பத்தாருடன் பேச இது ஏற்ற மாதமாக இருக்கலாம். உங்கள் அன்புக்குரியவர்களை உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்தலாம் உங்கள் காதலுக்கு அவர்களின்  அங்கீகாரத்தைப் பெறலாம். எனவே இதுவரை நீங்கள் சந்தித்து வந்த சிரமங்கள் குறையலாம். மேலும் மகிழ்ச்சியையும் திருப்தியையும் பெற முடியும். காதலைப் பற்றிய உங்கள் கனவுகள் இந்த மாதத்தில் நனவாகலாம். உங்கள்காதல் உறவு திருமண உறவாக மாற வாய்ப்பு அதிகம் உள்ளது. இருப்பினும், உங்கள் குடும்பத்தில் தாத்தா, பாட்டி போன்ற வயதானவர்களால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிப்பது கடினமாக இருக்கலாம். எனவே, சிரமங்களைத் தவிர்க்க நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுங்கள். மேலும், உங்கள் பணிச்சூழலில் உள்ள துணை அதிகாரிகள் உங்கள் காதல் உறவுகளை பாதிக்கக்கூடிய பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே, அவர்களுடன் வரம்புகளையும் தூரத்தையும் பராமரிக்கவும். உங்கள் தனிப்பட்ட விஷயங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : புதன் பூஜை

நிதிநிலை :

இந்த மாதம் நிதிநிலை வரவேற்கததக்க வகையில்  இருக்கலாம். நிதிநிலை ஏற்றமுடன் மாற்றம் காணலாம். அதன் மூலம் உங்கள் வருமானம் பெருகலாம். உங்கள் சேமிப்பும் கணிசமாக உயரலாம். அதிர்ஷ்டம் காரணமாக திடீர் பண வரவு இருக்கலாம். வருமானம் கூடலாம். மூதாதையர் சொத்து அல்லது பூர்வீக சொத்து உங்கள் கைக்கு வந்து சேரலாம். குழந்தைகள் நிதி உதவி அளிக்கலாம். உங்கள் வளர்ச்சிக்குத் தேவையான புதிய பொருட்களை நீங்கள் வாங்கலாம். இந்த மாதத்தில் நீண்ட பயணங்கள் நிதி வளர்ச்சியைத் தரும். புதிய சொத்துக்களை வாங்கவும், புதிய வீடு கட்டவும் உதவும் வெளிநாட்டிலிருந்து பணம் பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. சிவபெருமானை வழிபடுவது இந்த மாதத்தில் உங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.

உங்கள் நிதிநிலை மேம்பட : சூரியன் பூஜை

உத்தியோகம் :

இந்த மாதத்தில் உங்கள் உத்தியோகத்தில் மாற்றங்கள் இருக்கலாம். அது உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் தரும் வகையில் இருக்கும். உங்கள் உத்தியோக முன்னேற்றத்திற்காக, நீங்கள் பிற  மாநிலங்கள் அல்லது வெளிநாடு போன்ற புதிய இடங்களுக்கு இடம் பெயர்வதற்கு இது மிகவும் உறுதுணையான காலகட்டமாகும். புதிய இடங்கள் உங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மிகவும் சாதகமாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு, நேர்முகத் தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்வு பெற முடியலாம். மேலும், நீங்கள் உயர்மட்ட நிறுவனங்களால் பணியமர்த்தப்படலாம். இது உங்களுக்கு சமூகத்தில் ஒரு பெயரையும் புகழையும் பெற்றுத் தரலாம். உங்களது திறமைகளை நிரூபித்து நீங்கள் வெற்றியை அடைய முடியும்.

தொழில்:

நீங்கள் தொழில் அல்லது வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர் என்றால், உங்கள் தயாரிப்புகளில் மாற்றங்களைச் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. வணிக வளர்ச்சிக்காக,  சொத்துக்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது பெரிய வருமானத்தை வழங்கலாம். உங்கள் வணிகத்திற்கு இது மிகவும் சாதகமான மாதமாக இருக்கலாம்.

உத்தியோகம் / தொழிலில் மேன்மை பெற : கருப்பசாமி பூஜை

ஆரோக்கியம் :

இரத்தம், எலும்பு, மூட்டு வலி, பைல்ஸ், குடல் மற்றும் மலச்சிக்கல் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து மீள ஏப்ரல் ஒரு நல்ல காலமாகும். எனவே, நீங்கள் இந்த பகுதிகளில் சிக்கல்களை எதிர்கொண்டால்  சிகிச்சைக்கு செல்லலாம். காயங்கள் மற்றும் விபத்துக்கள் இருக்கலாம். எனவே, வாகனங்களை ஓட்டும் போதும், வேலை செய்யும் போதும் பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். துர்கா தேவியை தவறாமல் வழிபடுவது எதிர்மறை விளைவுகளைக் கடந்து உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : அங்காரகன் பூஜை

 மாணவர்கள் :

இந்த மாதம் மாணவர்கள் சிறப்பாகக்  கல்வி பயில்வார்கள். உயர் கல்வியில் சேர விரும்பும் சில மாணவர்கள்  வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு பெறலாம். நீங்கள் சிறப்பாகக் கல்வி பயின்று வெற்றியைக் காண்பீர்கள். உங்களின் அனைத்துச் செயல்களிலும் முழுமையைப் பேண முடியும். இருப்பினும், பொறுமையைக் கடைப்பிடிக்கவும், உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தவும். மற்றவர்களிடம் கடுமையான வார்த்தைகளைப் பேசுவதைத் தவிர்க்கவும். காயங்களைத் தவிர்க்க  விளையாடும்போது கவனமாக இருங்கள்.

கல்வியில் சிறந்து விளங்க : ஹயக்ரீவர் பூஜை

சுப தேதிகள்: 2,3,8,9,10,13,14,15,16,17,25,26,29,30,31.

அசுப தேதிகள் : 4,5,6,7,18,19,23.24.