Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
மீனம் மே மாத ராசி பலன் 2024 | May Matha Meenam Rasi Palan 2024
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

மீனம் மே மாத ராசி பலன் 2024 | May Matha Meenam Rasi Palan 2024

Posted DateApril 17, 2024

மீனம் மே மாத பொதுப்பலன் 2024:

இந்த மாதம் கடினமான சூழ்நிலைகள் இருக்கலாம். என்றாலும் நீங்கள் நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் செயல்படலாம். குடும்ப வாழ்வில் சில பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். இளைய உடன்பிறப்புகளுடன் மோதல்கள் ஏற்படலாம். அதிக கோபமும், கவலையும் உங்களை ஆட்கொள்ள நேரலாம். உங்கள்  தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பதட்டங்கள் அதிகரிக்கலாம். நீங்கள்  தொழிலில் புதிய முயற்சிகளில் கவனம் செலுத்தலாம். அதிக பணிகள் காரணமாக உங்கள்  தனிப்பட்ட வாழ்க்கையில்  மன அழுத்தம் இருக்கலாம். வாகனம் மற்றும் அசையா சொத்தை விற்கும் முயற்சியை நீங்கள் மேற்கொள்ளலாம். இந்த விஷயத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கலாம். என்றாலும் சில சிறிய  பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரலாம்.  இந்த மாதம் நீங்கள் தூக்கமின்மையால் அவதிப்பட நேரலாம். அதனால் நீங்கள் மன அமைதி இழக்கலாம். மே மாதத்தில் அதிக செலவுகள் மற்றும் நஷ்டங்கள் ஏற்படலாம்.

காதல் / குடும்ப உறவு :

இந்த மாதம் குடும்பத்தில் சுமுக நல்லிணக்க உறவு இருக்க வாய்ப்பில்லை.  உறவு விவகாரங்கள் கடினமாக இருக்கலாம். குடும்ப உறுப்பினர்களுடன் எழும் பிரச்சினைகள் உங்கள் அமைதியை கெடுக்கலாம். மனைவி / துணையுடன் பிரச்சினைகள் அல்லது தவறான புரிதல்களை சந்திக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பணம் சம்பந்தப்பட்ட விஷயமாக கருத்து மோதல்கள் வரலாம். எனவே பண  விஷயங்களில் சரியான பேச்சு வார்த்தை நடத்துவது நல்லது. கணவன் மனைவி பரஸ்பரம் அனுசரித்து செல்வது நல்லது. இருவருக்கும் இடையே மேற்கொள்ளும் தேவையற்ற வார்த்தைகள் திருமண வாழ்க்கையில் சர்ச்சைகள் மற்றும் வாக்குவாதங்களைத் தூண்டும். இந்த மாதம்  வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும்.  குடும்பத்தில் மூன்றாம் தரப்பினரின் தலையீடு  நல்லிணக்கத்தை சீர்குலைக்கும். ஒரு சிலருக்கு தங்கள் துணையை பிரியும் மனப்பான்மை இருக்கலாம்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண  : புதன் பூஜை

நிதிநிலை :

இந்த மாதம் முழுவதும் உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கலாம். நீங்கள் எதிர்பாராத செலவுகளை மேற்கொள்ள நேரலாம். செலவுகள் அதிகம் என்பதால் உங்களால் கணிசமான பணத்தை சேமிக்க இயலாமல் போகலாம். வருமானமும் சுமாராகத்தான் இருக்கும்.  புதிய முயற்சிகள் மூலம் தொழிலில் வருமானத்தில் சிறிதளவு அதிகரிப்பை மட்டுமே பெறலாம். இந்த மாதம் கடன் சுமை மலை போல அதிகரிக்கலாம். மற்றும் அதைச் சமாளிப்பது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். .மருந்துகள் மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கும் தொடர்புடையதாக செலவுகள் இருக்கலாம். இந்த மாதம் எதிர்பாராத விலைமதிப்பற்ற பொருட்களை நீங்கள்  இழக்கும் வாய்ப்புகள் உள்ளன. தேவையற்ற பயணங்கள் காரணமாக பணமும் நேரமும் செலவாகலாம்.  பங்குச் சந்தையில் வர்த்தகம் மற்றும் முதலீடு நஷ்டத்தைத் தரக்கூடும். இது உண்மையில் நிதி வளர்ச்சிக்கு சாதகமான காலம் அல்ல. நிதி விஷயங்களைப் பொருத்தவரை பொறுமை மற்றும் ஸ்திரத்தன்மையில் கவனம் செலுத்த வேண்டிய காலம் இது.

உங்கள் நிதிநிலை மேம்பட  : சனி பூஜை

உத்தியோகம் :

இந்த மாதம் நீங்கள் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும். மேலும் அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதிக முயற்சிகள் மட்டுமே உத்தியோகத்தில் எதிர்பார்த்த பலன்களைப் பெற ஒரே வழி. பணியிடத்தில் பெண் பணியாளர்களால் நன்மை உண்டாகும். நீங்கள் கடினமாக உழைத்தாலும் அதற்கேற்ற  அங்கீகாரத்தைப் பெறுவது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். நீங்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிட்ட தாமதமாகலாம்.  வேலையில் பயமும், பதட்டமும் இருந்து கொண்டே இருக்கும். தொழில் சார்ந்த விஷயமாக குறுகிய தூரப் பயணங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாதம் பணியிடத்தில் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். பணியிடத்தில் உத்தியோகபூர்வ பொறுப்புகளை நிறைவேற்ற உங்களை சக ஊழியர்கள் தூண்டலாம்.புதிய வேலை தேடுபவர்கள் இன்னும்  சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.  இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் மேலதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள் முதல் பாதியில் அதிகாரிகளுடனும் நிர்வாகத்துடனும் சில தவறான புரிதல்கள் இருக்கலாம். தொழிலில் தொல்லைகள் குறையலாம்.

 தொழில் :

இந்த மாதம் தொழிலில் முன்னேற்றம் மந்தமாக இருக்கலாம். தொழிலில் தேக்க நிலை கூட எதிர்பார்க்கலாம்.  நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் தொழிலில் காண இயலாது போகலாம். வணிகச் சூழலில் வெளிப்புற காரணிகளால் வருமானம் செலவாக வாய்ப்புள்ளது. ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மற்றும் சப்ளையர்கள் போன்ற உள் காரணிகளும் வணிகத்தில் இழப்பு அல்லது தற்காலிக வீழ்ச்சிக்கு பங்களிக்கக்கூடும். தொழிலில் நம்பிக்கை மிக்க நபர்கள்  தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாத நிலை இருக்கும். அதன் காரணமாக வணிகச் செயல்பாடுகளை நிர்வகிப்பதில் சிரமங்கள் ஏற்படலாம். இந்த மாதம் தொழிலில் அதிக போட்டியாளர்களை நீங்கள் சந்திக்க நேரும். தொழில் விரிவாக்கம் சற்று சிரமமாக இருக்கும்.  தடைகளை சந்திக்க நேரும். தொழிலில் தற்போதைய தொழில் அமைப்பில் மாற்றங்கள் ஏற்படலாம். மீன ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் வணிக செயல்திறனை மறுசீரமைக்க / புத்துயிர் பெற நிபுணர்கள் மற்றும் வழிகாட்டிகளின் கருத்துகள் மற்றும் வழிகாட்டுதலைப் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உத்தியோகம் / தொழிலில் மேன்மை பெற  : பிருகஸ்பதி பூஜை

ஆரோக்கியம் :

போதிய தூக்கம் இன்மை காரணமாக சில உடல் உபாதைகளை சந்திக்க நேரலாம். உஷ்ணம்  சம்பந்தமான  உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும். இதன் விளைவாக உங்கள் மன அமைதியும் பாதிக்கப்படலாம்.  இந்த மாதத்தில் தலைவலி மற்றும் கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். தாய் மற்றும் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு உடல்நலக்குறைவு காரணமாக பிரச்சினைகள் இருக்கலாம். மீன ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் முக்கியப் பெயர்ச்சிகள் சாதகமாக இல்லாததால்  மன ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட  : துர்கா பூஜை

மாணவர்கள் :

மீன ராசி மாணவர்களுக்கு இந்த மாதம் கல்வி விஷயத்தில் மிதமான பலன்களே கிட்டும்.  இந்த முக்கியமான நேரத்தில் சமூக ஊடகங்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு கேஜெட்டுகள் மூலம் கவனச்சிதறல்களைத் தவிர்ப்பது நல்லது. ஒரு  சிலருக்கு ஞாபகத் திறன் குறைய வாய்ப்புள்ளது.  கவனம்  இல்லாமல் இருக்கலாம். இருப்பினும், தெய்வீக அருளும் அதிர்ஷ்டமும் மீன ராசி மாணவர்களுக்கு  கல்வியில் சிறப்பாக செயல்பட உதவலாம். வெளிநாட்டில் உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இந்த மாத தொடக்கத்தில் சில இடையூறுகள் ஏற்படலாம். இந்த மாதத்தில் நீங்கள் விரும்பும்  புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற அதிக பணம்  செலவழிக்க வேண்டியிருக்கும்.

கல்வியில் சிறந்து விளங்க  : அங்காரகன் பூஜை

சுப தேதிகள் : 1, 9, 10, 11, 12, 16, 17, 18, 19, 26, 27, 28 & 29.

அசுப தேதிகள் : 2, 3, 4, 5, 6, 20, 21, 22, 30 & 31.