Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
தனுசு மே மாத ராசி பலன் 2024 | May Matha Dhanusu Rasi Palan 2024
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

தனுசு மே மாத ராசி பலன் 2024 | May Matha Dhanusu Rasi Palan 2024

Posted DateApril 16, 2024

தனுசு மே மாத பொதுப்பலன்கள் 2024

 இந்த மாதம் உங்கள் உத்தியோகம் மற்றும் தனிப்பட்ட வாழ்வில் நீங்கள் மாற்றங்களைக் காண வாய்ப்புள்ளது. இந்த மாற்றங்கள் நேர்மறையான பலன்களை அளிக்காது. எனவே உங்கள் வீடு, உத்தியோகம், கல்வி, போன்ற வாழ்வின் எந்தவொரு அம்சங்களிலும் நீங்கள் மாறுதலை ஏற்படுத்திக் கொள்ளாமல்  உங்கள் வழக்கமான செயல்களை மட்டும் செய்யுங்கள். பணியிடத்தில் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். பிறருடனான உறவில் ஒரு வரம்பை வரையறுத்துக் கொள்ளுங்கள். யாரையும் நம்பி உங்கள் தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். கண்மூடித்தனமாக பிறரை நம்புவதன் மூலம் நீங்கள் சில இழப்புகளை சந்திக்க நேரும்.

நீங்கள் அதிகம் நம்பும் நபர்களே உங்களை ஏமாற்றலாம். எனவே மிகவும் கவனம் தேவை. சமூக சேவைகள், அனாதைக் குழந்தைகளுக்கு  உதவிகள் செய்வதன் மூலம் உங்கள் எதிர்மறை தாக்கங்கள் குறையும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே குடும்பத்தில் எந்தவொரு விஷயத்தையும் பொறுமையுடன் கையாளுங்கள். வாழ்க்கைத் துணையை அனுசரித்து நடந்து கொள்ள முயலுங்கள். கூட்டுத் தொழில் மூலம் ஆதாயம் காண இயலாது. காதலர்களுக்கு இந்த மாத ஆரம்பத்தில்    அனுகூலமான நிலை காணப்படம்.

ஆனால் மாதத்தின் பிற்பாதியில் உறவில் கவனமாக செயல்பட வேண்டும். ஒரு சிலர் வாழ்வில் உறவில் முறிவு ஏற்படக் கூட வாய்ப்புள்ளது. புது திருமண தம்பதிகள் வாழ்வில் மகிழ்ச்சி இருக்கும். இரண்டாம் திருமணம் செய்து கொள்ள நினைப்பவர்களுக்கு இது அனுகூலமான மாதம். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற சில பிரச்சிணைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.  சக மாணவர்கள் மற்றும் ஆசிரியருடன் கருத்து மோதல்கள் இருக்கலாம். இது உங்கள் கல்வியில் சில தடைகளை ஏற்படுத்தலாம். உங்கள் கவனம் சிதறலாம்.  எதிர்பானத்தாருடன் விலகி இருக்கவும். பிறருடனான உறவில் வரம்பை பராமரிக்கவும்.

காதல் / குடும்ப உறவு :           

இந்த மாத முதல் பகுதியில் உறவு நிலை சீராக இருக்கும். உங்கள் மனதிற்கு பிடித்த நபருடன் நீங்கள் நீண்ட தூர பயணம் மேற்கொள்ளலாம். அது உங்களுக்கு மகிழ்ச்சி மற்றும் திருப்தி அளிக்கும். மாதத்தின் இரண்டாம் பகுதியில் வழக்கு விவகாரங்கள் இருக்கலாம். எனவே உங்கள் துணையுடன் பிரிவு வராத வகையில் கவனமாகப் பழகவும். ஒற்றையர்கள் தங்கள்  துணையை  தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும். இந்த மாதம் பொறுமை காக்க வேண்டும்.  நீங்கள் அதிகம்  நம்பும் நபர் உங்களை ஏமாற்றலாம்.  அதனால் நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரலாம். ஒரு சிலர் உறவில் பிரிவினையை சந்திக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாகுவாதங்களைத் தவிர்க்கவும். ஒரு சிலருக்கு இரண்டாவது திருமண வாய்ப்பு கிட்டும்.

திருமண உறவில் நல்லிணக்கம் காண : அங்காரகன் பூஜை

நிதிநிலை :

இந்த மாதம்  உங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை தான தருமம் செய்வதன் மூலம் நேர்மறையான பலன்களைக் காணலாம். தொண்டு நிறுவனங்களுக்கு உதவுவதன் மூலம் பொருளாதார முன்னேற்றம் காணலாம். அரசியலில் இருப்பவர்கள் இந்த மாதம் தங்கள் சேவை மூலம் நல்ல பண வரவைக் காணும் வாய்ப்பு உள்ளது. உங்கள் வருமானம் உயரும். உங்களால் கணிசமான பணத்தை சேமிக்க இயலும்.     என்றாலும் இந்த மாதம் நீங்கள் சில பண இழப்புகளை சந்திப்பீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள் காரணமாக உங்கள் சேமிப்புப் பணம் குறையலாம்.  உங்கள் தாய் அல்லது குடும்பத்தில் உள்ள வயதான மூத்த உறுப்பினர்களின் உடல் நலம் கருதி அல்லது மருந்து வாங்குதல் போன்ற வகையில் செலவுகளை மேற்கொள்ள நேரலாம். அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்தது செல்ல பணம் செலவாகலாம்.   கையில் இருக்கும் பணத்தைக்  கொண்டு உங்களின் அனைத்து நடவடிக்கைகளையும் திட்டமிடுங்கள் மற்றும் கடன்களை தவிர்க்கவும். உங்கள் முன்னோர்களை தவறாமல் வழிபடுவது உங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.

உங்கள் நிதிநிலை மேம்பட : ராகு பூஜை

உத்தியோகம் :

பொதுநலச் சேவை சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் தங்கள் உத்தியோக முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளைப் பெறுவார்கள். அதே போல அரசாங்கத் துறையில் இருப்பவர்களும் வளர்ச்சி காண்பார்கள். பிற துறைகளில் இருப்பவர்கள் வழக்கமான நடவடிக்கைளில் ஈடுவதன் மூலம் சங்கடங்களைத் தவிர்க்கலாம்.  உத்தியோக மாற்றம் காரணமாக நீங்கள் சில பிரச்சினைகள் அல்லது வீழ்ச்சிகளை சந்திக்க நேரலாம். பொருளாதார நெருக்கடிகளையும் சந்திக்க நேரலாம். அது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும். எனவே வேலை மாற்றங்களை தவிர்ப்பது நல்லது.

தொழில் :   

கடந்த காலங்களில் நீங்கள் தொழிலில் மேற்கொண்ட முயற்சிகள் மூலம் இந்த மாதம் திடீர் வருமானம் பெற இயலும். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானம் சார்ந்த துறையில் இருப்பவர்கள் சிறந்த வளர்ச்சி காண்பார்கள். இந்த மாதம் முதலீடுகள் எதையும் மேற்கொள்ள வேண்டாம். பண பரிவர்த்தனையின் போது மிகுந்த கவனம் தேவை. அதே போல நஷ்டங்களை தவிர்க்க பணம்  கொடுக்கல் வாங்கலில் கவனமாகச் செயல்பட வேண்டும்.   துர்கா தேவியை வழிபடுவது உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவும்.

உத்தியோகம் / தொழிலில் மேன்மை பெற : சனி பூஜை

ஆரோக்கியம் :

குடல், பாதங்கள், எலும்புகள், கால்கள் மற்றும் அந்தரங்க பாகங்கள் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்கு இந்த மாதம் உகந்த காலம். எனவே, நீங்கள் இந்த பகுதிகளில் சிக்கல்களை எதிர்கொண்டால்  சிகிச்சைக்கு செல்லலாம். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்து, அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்ளுங்கள். துர்கா தேவியை தவறாமல் வழிபடுவதன் மூலம் உடல்நலப் பிரச்சினைகளை சமாளித்து உங்கள் ஆரோக்கியத்தைப் பேணலாம்.

உங்கள் ஆரோக்கியம் மேம்பட : அங்காரகன் பூஜை

மாணவர்கள் :

மே மாதம், உங்கள் கல்வி வளர்ச்சி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். வெற்றி மற்றும் வளர்ச்சியை அடைவதில் நிறைய சிரமங்களை எதிர்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. மேலும், இந்த மாதம் மூத்தவர்கள் மற்றும் பிற நிறுவனங்களில் படிக்கும் நபர்களுடன் வாக்குவாதங்களைக் காணலாம். நீங்கள் சட்ட மோதல்களையும் சந்திக்க நேரிடலாம். மேலும், வாகனங்களை ஓட்டும் போது காயங்கள் ஏற்படலாம். எனவே, உங்கள் பாதுகாப்பிற்காக பொது வாகனங்கள் அல்லது நிறுவன வாகனங்களைப் பயன்படுத்துங்கள். படிப்பில் கவனம் செலுத்த அனைவருடனும் வரம்புகளையும் தூரத்தையும் பராமரிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

கல்வியில் சிறந்து விளங்க : ஹயக்ரீவர் பூஜை

சுப தேதிகள் : 1,4,6,7,15,16,17,20,21,22,27,28.

அசுப தேதிகள் : 8,9,10,13,14,23,24,25,26.