மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என பகவத் கீதையில் கிருஷ்ண பகவான் சொல்லி இருக்கிறார். மார்கழி மாதத்தை பீடுடை மாதம் என்று கூறுவார்கள். அதாவது சிறப்பு மிக்க மாதம் என்று பொருள். அது மருவி பீடை மாதம் என்று தவறாக கருதப்படுகிறது. தெய்வ வழிபாடுகளை செய்ய மார்கழி மாதம் மிகவும் உகந்தது.
மார்கழி மாதம் அறிவியல் ரீதியாகவும் சரி, ஆன்மிக ரீதியாகவும் சரி பல நன்மைகளை தரக் கூடிய மாதமாகும். இந்த மாதத்தில் தான் ஆக்சிஜன் அதிகம் நிறைந்த ஓசோன் படலம் பூமிக்கு மிக அருகில் வருவதால் அந்த சமயத்தில் அதிகாலையில் எழுந்து கோலமிடுவது, பஜனை செய்வது, கோவிலுக்கு செல்வது உடலுக்கும், மனதிற்கும் சிறப்பானதாகும்.
சூரியன் மாதம் ஓரு முறை ஒரு ராசியில் சஞ்சாரம் செய்யும். மார்கழி மாதத்தில் சூரிய பகவான், குருவின் வீடான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்கிறார்.தனுசு ராசி குரு பகவானின் ஆட்சி வீடாகும். எனவே இந்த மாதம் குருவின் ஆதிக்கம் அதிகம் நிறைந்த மாதமாகும். எனவே இந்த மாதம் அவசியம் ஆலயம் செல்வது சாலவும் நன்று.
பெரியாழ்வாரின் மகளான, கோதை என்றும் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்றும் அழைக்கப்படும் ஆண்டாள், திருப்பாவையில் 30 பாசுரங்களை இயற்றி அதில் முதலில் பகவானின் பக்தர்களாக நாம் என்ன செய்யலாம் என்ன செய்யக் கூடாது என்று தனது பாசுரத்தில் கூறியுள்ளார். நெய்யுண்ணோம் பாலுண்ணோம் மையிடோம் மலரிட்டு முடியோம் என்று செய்யக் கூடாதவைகளைப் பற்றிக் கூறுகிறார். ஆண்டாள் வழியில் நாமும் பகவான் திருவடிகளைப் பற்றி நடக்க வேண்டிய மாதம் இது வழக்கமாக கோவில்களில் காலையில் திருப்பள்ளி எழுச்சி எனப்படும் சுப்ரபாதம் பாடித் தான் இறைவனை துயில் எழுப்புவார்கள்.. ஆனால் பக்தர்கள் அனைவரும் தேடிச் சென்று, பகவானை புகழ்ந்து பாடி எழுப்பும் மாதம் மார்கழி மாதமாகும்.
மார்கழி மாதத்தில் அனைவரும் கண்டிப்பாக செய்ய வேண்டியது, தவிர்க்க வேண்டியது என சில விதிமுறைகள் உள்ளன. இது தவிர இந்த மாதத்தில் ள் கண்டிப்பாக செய்ய வேண்டியதும், தவிர்க்க வேண்டியதுமான விஷயங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
1.பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, குளிக்க வேண்டும்.
2.வாசலில் சாணம் / மஞ்சள் கலந்த நீரை தெளிக்க வேண்டும்.
3.வாசலில் கோலமிட்டு, விளக்கேற்ற வேண்டும்.
4.பகவானுக்கு பூஜை மற்றும் நெய்வேத்தியங்களை செய்ய வேண்டும்.
5.மாதம் முழுவதும் தினமும் காலையில் ஆலயம் சென்று வழிபட வேண்டும்.
6.தினமும் திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்களை பாட/படிக்க/கேட்க வேண்டும்.
7.திருமணத்திற்குக் காத்திருக்கும் பெண்கள் ஆண்டாள் பாசுரத்தில் கூறியபடி விரதம் இருக்க வேண்டும். இதனை பாவை நோன்பு என்று கூறுவார்கள்.
8.மாலையிலும் தீபம் ஏற்ற வேண்டும்.
9.ஆலயத்திற்கு கைங்கரியம் செய்ய வேண்டும்.
10.தான தருமங்களை மேற்கொள்ள வேண்டும்
1. பிரம்ம முகூர்த்த நேரத்திற்கு பிறகு தூங்கக் கூடாது.
2. மற்றவர்கள் பற்றி புறம் பேசுவதை தவிர்க்க வேண்டும்.
3.விளக்கேற்றும் வேளையில் சத்தமாக பேசுவது, அமங்கலமான வார்த்தைகளை பேசுவது, கோபப்படுவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
4. மார்கழி மாதத்தில் அசைவம் சாப்பிடக் கூடாது.
5. விளக்கேற்றும் நேரத்தில் சாப்பிடுவது கூடாது.
6. புது வீடு குடி போவது, பால் காய்ச்சுவது, வீடு காலி செய்வது போன்ற வீடு தொடர்பான பணிகளை செய்யக் கூடாது.
7. முதல் நாள் இரவே வாசலில் கோலமிடுவதை பெண்கள் தவிர்க்க வேண்டும். காலையில் தான் கோலமிட வேண்டும்.
8. குளிக்காமல் சமைப்பதோ சாப்பிடுவதோ கூடாது.
9.இறைவனுக்கு நிவேதனம் செய்யாமல் சாப்பிடுவது கூடாது.
10. சுப நிகழ்சிகளை நடத்துவது கூடாது. ஏனெனில் இது பகவானுக்கு சிறப்பான மாதம். இந்த மாதம் இறைவனை வழிபடுவதற்ரகாகவே ஒதுக்க வேண்டும்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025