Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
மார்கழி வெள்ளி வாசலில் தெளிக்க வேண்டிய தண்ணீர்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

மார்கழி வெள்ளி வாசலில் தெளிக்க வேண்டிய தண்ணீர்

Posted DateDecember 19, 2024

மாதங்களில் நான் மார்கழி என்பது கண்ணன் கூற்று. மார்கழி மாதம் தேவர்களின் விடியற்காலைப் பொழுது ஆகும். இந்த மாத விடியற்காலை பனிமற்றும் காற்று நமது உடலுக்கு நல்லதையே தான் செய்யும். எனவே தான் மார்கழி மாதம் விடியற்காலையில் எழுந்து கோலம் பெண்கள் போடுவதை வழக்கத்தில் வைத்திருந்தார்கள். ஆண்கள் வீதிகளில் பஜனைப் பாடல்களை பாடி வீதி வலம் செல்வார்கள்.

நமது முன்னோர்கள் சாணம் கலந்த நீரை வாசலில் தெளிப்பதை ஒரு சிலர் அறிவோம். அது கிருமிகளை போக்கக் கூடியது. எனவே அதனை தெளிப்பார்கள். பிறகு பெரிய பெரிய கோலம் இடுவார்கள். ஒரு சிலர் அதை வர்ணப் பொடிகள் கொண்டு அலங்கரிப்பார்கள். பிறகு அதன் மத்தியில் சிறிது சாணம் வைத்தது அதன் மேல் பூசணி பூவை வைப்பார்கள். பிறகு நிலை வாசலில் விளக்கு ஏற்றி வைப்பார்கள். இதெல்லாம் அவர்கள் வீட்டிற்கு லட்சுமி கடாட்சம் சேர்த்தது.

இன்று நாம் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிக்கிறோம். மேலும் பல பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள். கோலம் போட இடமும் இல்லை. நேரமும் இருப்பதில்லை என்று விட்டு விடுகிறார்கள். அப்படியே இருந்தாலும் ஒரு சிலர் இரவிலேயே கோலம் போட்டு விடுகிறார்கள். அது மிகவும் தவறானது. மார்கழி மாதம் காலையில் எழுந்து தான் கோலம் போட வேண்டும்.

சிறிய இடமாக இருந்தாலும் கண்டிப்பாக வாசலை கூட்டி நீர் தெளித்து கோலம் போட வேண்டும். நம்மால் சாணம் கரைத்து  தெளிக்க முடியாது. அதற்கு மாற்றாக காலத்திற்கு தகுந்தவாறும் நன்மை பெறக் கூடிய வகையிலும் எவ்வாறு நீர் தெளிக்க வேண்டும் என்று காணலாம் வாருங்கள்.

நல்ல மஞ்சள் தூள், சிறிது  ஏலக்காய் தூள் மற்றும் பச்சை கற்பூரம் சிறிது, சிறிது தூள் செய்த கிராம்பு இவற்றை கலந்து ஒரு பொடியை தயாரித்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூன் என்ற அளவில் ஒரு மாதத்திற்கு தேவையான அளவில் கலந்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடி வாசனை மிக்கதாக இருக்கும். தினமும்  வீட்டிலும் வாசலிலும் தெளிக்க தேவையான அளவு நீர் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த நீரில் சிறிது கல் உப்பு போட்டுக் கொள்ளுங்கள். அத்துடன் இந்த பொடியை ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை  இரவு படுக்கப் போகும் முன் தண்ணீரில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது தான் தண்ணீர் வாசனையாக இருக்கும்.இந்த தண்ணீரை  வாசலில் தெளித்து, கூட்டி பிறகு கோலம் போட்டு பாருங்கள். உங்கள் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் கிடைக்கும். வீட்டின் உள்புறத்திலும் கூட தெளிக்கலாம். இந்த நீர் எதிர்மறை ஆற்றலை விலக்கக் கூடியது. மஞ்சள் மற்றும் உப்பு இருப்பதால் கிருமிகள் அண்டாது. இந்த நீரைத் தெளித்து கோலம் இட்டு, வாசலில் விளக்கு ஏற்றிப் பாருங்கள். உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.