தமிழ் மாதங்கள் மொத்தம் பன்னிரண்டு. ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அந்த வகையில மார்கழி மாதமும் சிறப்பு பெற்ற மாதம் ஆகும். இது இறை வழிபாட்டிற்கு உரிய மாதம் ஆகும். பொதுவாக எல்லா மாதங்களிலும் கோவில் நடை ஆறு அல்லது ஏழு மணிக்குத்தான் திறப்பார்கள். மார்கழி மாதத்தில் அதிகாலையிலேயே திறந்து விடுவார்கள்.அதிகாலை என்பது பிரம்ம முகூர்த்த வேளை ஆகும். இந்த நேரத்தில் செய்யும் எந்தவொரு செயலும் பல மடங்கு நன்மை அளிக்கும். அதிலும் இறை வழிபாடு மேற்கொள்வதன் மூலம் அந்த பலன்கள் இன்னும் சிறப்பாக இருக்கும். உங்கள் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும். உங்கள் வேண்டுதல்கள் நிறைவேற இந்த அதிகாலையில் நாம் செய்ய வேண்டிய பரிகாரம் ஒன்றைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
நாளை மார்கழி மாத வெள்ளிக்கிழமை. பொதுவாக நாம் ஒரு காரியம் நடக்க வேண்டும் என்றால். ஒரு மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் நாணயம் வைத்து குல தெய்வத்திற்கு முடிந்து வைப்போம். அந்தக் காரியம் முடிந்தவுடன் அதனை கோவில் உண்டியலில் சேர்த்து விடுவோம். அதையே இந்த மாதம் செய்வதன் மூலம் பலன் வெகு விரைவில் கிடைக்கும்.
நாளை வெள்ளிக்கிழமை. மார்கழி மாதம். பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து கொள்ளுங்கள். உங்கள் அன்றாட கடமைகளை முடித்து நன்னீராடி விளக்கு ஏற்றுங்கள். மார்கழி மாதம் என்பதால் வாசலிலும் விளக்கு ஏற்றி வையுங்கள். பிறகு ஒரு நல்ல சுத்தமான மஞ்சள் நிற துணியை (காடா துணியை மஞ்சளில் நனைத்தும் பயன்படுத்தலாம்.) எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து முடிந்து கொள்ளுங்கள். அதனை சுவாமி படத்தின் முன் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு உங்கள் பூஜை முடிந்தவுடன் தவறாமல் அருகில் இருக்கும் கோவிலுக்கு செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது நீங்கள் முடிந்து வைத்த அந்த ரூபாய் முடிச்சையும் எடுத்துச் செல்லுங்கள். அதனை அர்ச்சகரிடம் அளித்து சுவாமியின் பாதத்தில் வைத்து வாங்கிக் கொள்ளுங்கள். அவ்வாறு வைக்கும் போது உங்கள் வேண்டுதலை இறைவன் முன் வேண்டிக் கொள்ளுங்கள். பிறகு அதனை வீட்டில் பூஜை அறையில் வைத்து விடுங்கள். உங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் அதனை குல தெய்வம் கோவில் உண்டியலில் சேர்த்து விடுங்கள்.
என்ன நினைத்து இந்த முடிச்சை நீங்கள் கட்டி வைத்திருக்கிறீர்களோ, அந்த கோரிக்கையை இறைவன் சீக்கிரம் நிறைவேற்றி வைப்பான். திருமண தடை விலக, குழந்தை பாக்கியம் கிடைக்க, வேலை கிடைக்க கடன் சுமை குறைய வருமானம் அதிகரிக்க, என்று என்ன வேண்டுதல் வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம். அது உங்கள் தகுதிக்கு ஏற்ற வேண்டுதலாக இருக்க வேண்டும்.
வேண்டுதல் நிறைவேறிய பிறகு இந்த காணிக்கையை கொண்டு போய் குலதெய்வம் கோவிலில் செலுத்தி விட்டு வந்து விடுங்கள். இவ்வளவு தான் பரிகாரம். இந்த எளிமையான பரிகாரத்தை இந்த மார்கழி மாதத்தில் செய்பவர்களுக்கு நிச்சயம் பல மடங்கு பலன் கிடைக்கும்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025