Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
மார்கழி சனிக்கிழமை பிரதோஷ வழிபாடு
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

மார்கழி சனிக்கிழமை பிரதோஷ வழிபாடு

Posted DateJanuary 2, 2025

சிவபெருமானுக்கு  உரிய வழிபாடுகளில் மிகவும் முக்கியமானது பிரதோஷ வழிபாடு ஆகும். சூர்ய அஸ்தமனத்துக்கு முன்பாக வரும் 1.30 மணிநேரமே பிரதோஷ காலமாகும். தினமும் வரும் இந்தப் பிரதோஷவேளை சிவவழிபாட்டுக்கு உகந்தது. மாலையில் 4.30 மணி முதல் 6 மணி வரையிலான நேரத்தில் சிவபெருமானை வழிபடுவது மிகவும் விசேஷம். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த பொழுது வெளிப்பட்ட  ஆலகால விஷத்தை குடித்து உலக உயிர்களை காக்க சிவபெருமான் நீல கண்டனாக காட்சி அளித்த சமயத்தில், தேவர்கள் சிவனை வழிபட்டனர். அவர்களுக்கு நந்தியின் இரு கொம்புகளுக்கு  இடையே சிவன் காட்சி தந்த காலமே பிரதோஷ காலம் எனப்படுகிறது. அனைத்து விதமான பாவங்களையும், தோஷங்களை நீக்கக் கூடிய வழிபாட்டையே பிரதோஷம் என்கிறோம். ஆலயம் சென்று வழிபட முடியாதவர்கள், அந்த வேளையில் வீட்டிலேயே விளக்கேற்றி சிவனை நினைத்து வணங்கலாம்.

நித்தியப் பிரதோஷப் பெயர்கள் :

ஞாயிற்றுக் கிழமை வரும் பிரதோ‌ஷம் ‘ஆதிப் பிரதோ‌ஷம்’ என்றும், திங்கட்கிழமை வரும் பிரதோ‌ஷம் ‘சோமவாரப் பிரதோ‌ஷம்’ என்றும், செவ்வாய்க்கிழமை வரும் பிரதோ‌ஷம் ‘மங்கள வாரப் பிரதோ‌ஷம்’ என்றும், புதன்கிழமை வரும் பிரதோ‌ஷம் ‘புதவாரப் பிரதோ‌ஷம்’ என்றும், வியாழக் கிழமை வரும் பிரதோ‌ஷம் ‘குருவாரப் பிரதோ‌ஷம்’ என்றும், வெள்ளிக்கிழமை வரும் பிரதோ‌ஷம் ‘சுக்ர வாரப் பிரதோ‌ஷம்’ என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் மற்ற நாட்களில் வரும் பிரதோஷத்தை காட்டிலும் சனி பிரதோஷத்திற்கே சிறப்புக்கள் அதிகம். இந்த பிரதோஷத்தைத்தான் ‘மகா பிரதோஷம்’ என்று அழைக்கிறோம். சனிதான் அதிகமான தோஷத்தையும், துன்பங்களையும் கொடுக்கக்கூடியவர். எனவே அந்தக் கிழமையில் பிரதோஷம் வந்துவிட்டால், சனியால் ஏற்படக்கூடிய பெரிய பாதிப்புகள் விலகும் என்பது நம்பிக்கை.

 நாளைய தினம் 28.12.2024 மார்கழி மாதம் வரக் கூடிய பிரதோஷம்  சனி மகா பிரதோஷம் ஆகும். இந்த நாளில் ஈசனை வழிபடுவதன் மூலம் சகல பாவங்களு நீங்கும். கிரக தோஷங்கள் நீங்கும். சனி மகா தசை நடப்பவர்கள், அஷ்டம சனி, கண்ட சனி நடப்பவர்கள் சனி பிரதோஷ வழிபாட்டை மேற்கொள்ளலாம். அதிலும் குறிப்பாக ஜென்ம சனி நடக்கும் கும்பம் ராசி அன்பர்களும், அஷ்டம சனி நடக்கும் கடகம் ராசி அன்பர்களும் நாளைய தினம் கோவிலுக்கு சென்று சிவனை வழிபட வேண்டும். அதன் மூலம் உங்கள் வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் நிச்சயம் விலகும். கடந்த சில மாதங்களாக உங்கள் வாழ்க்கையில் படாத கஷ்டமே இருந்திருக்காது. அந்த கஷ்டத்தில் இருந்து விலக வேண்டும் என்றால், நாளைய தினம் ஈசனின் பாதங்களை சரண் அடைவது தான் ஒரே வழி.

பிரதோஷ வழிபாடு

இன்றைய தினம் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம். பிரதோஷ நாளன்று மாலை  4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள்  அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு செல்லுங்கள். முதலில் நந்தியம்பெருமானை வணங்குங்கள். ஆலயங்களில் நந்திக்கு அபிஷேகம் செய்வார்கள். அதில் கலந்து கொள்ளுங்கள். முடிந்தால் அபிஷேகப் பொருட்களை வாங்கி அளியுங்கள். சிவ பெருமானுக்கும் அபிஷேகம் நடை பெறும். அதற்கும் தேவைப்படும் பொருட்களில் உங்களால் முடிந்தவற்றை வாங்கி அளியுங்கள். எதுவும் முடியாவிட்டால் சிறிது வில்வ இலைகளை வாங்கி சிவனுக்கு சமர்ப்பணம் செய்யுங்கள். ஆலயத்தில் நடை பெறும் அபிஷேகம் மற்றும் அர்ச்சனையில் பங்கு கொள்ளுங்கள். பிரதோஷ நேரத்தில் ஆலயத்தை சுற்றி வாருங்கள். கோவிலில் அமர்ந்து “ஓம் நமசிவாய” மந்திரத்தை சொன்னாலே போதும். உங்களுக்கான பிரச்சனைகள் அன்றோடு தீர்ந்துவிடும்.

 ஒரு பிரதோஷத்தில் சிவனை  தரிசித்து வழிபட்டால், ஒரு வருட கால தீவினைகள் அகலும் என்று கூறுவார்கள். அதிலும்  சனி  மகா பிரதோஷத்தில் சிவனை வழிபட்டால்  ஐந்து வருடம் வழிபட்ட பலனை பெறலாம். இத்தகைய அற்புதமான பலனை தரக்கூடிய பிரதோஷ நாளில் சிவன் அருளை பெற  நாம் கட்டாயம் சிவ வழிபாடு மேற்கொள்ள வேண்டும். ஆலயம் செல்ல இயலாவிட்டாலும் கவலை வேண்டாம். பிரதோஷ நேரம் என்பது மாலை நான்கு முப்பதிலிருந்து ஆறு மணி வரையிலான காலம். இந்த நேரத்தில் வீட்டில் பூஜை அறையில் சிவன் படம் அல்லது லிங்கம் இருந்தால் எடுத்து சுத்தமாக துடைத்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து மலர் சூட்டி அலங்காரம் செய்து விடுங்கள். படம் இல்லாதவர்கள் ஒரே ஒரு தீபம் ஏற்றி வைத்து விட்டு தீபத்தின் முன்  வழிபாடு செய்யுங்கள். வில்வ இலைகளால் உங்கள் வீட்டில் இருக்கும் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யலாம். “ஓம் நமசிவாய” மந்திரத்தை 108 முறை ஜெபியுங்கள்.