Vishnu Power Saturdays 2025 - Invoke Vishnu as Venkateshwara for Wealth, Well-Being & Affluence Join Now
மார்கழி குபேர தேய்பிறை பஞ்சமி வழிபாடு.
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

மார்கழி குபேர தேய்பிறை பஞ்சமி வழிபாடு.

Posted DateDecember 24, 2024

தமிழ் மாதம் ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு சிறப்புகள் உண்டு. அந்த வகையில் இப்பொழுது நாம் மார்கழி மாதத்தில் இருக்கிறோம். மார்கழி மாதத்தை பீடை மாதம் என்று கூறி அதனை சுப காரியங்களுக்கு ஒதுக்குவார்கள். ஆனால் உண்மையில் அது பீடை மாதம் அல்ல. அதனை பீடுடைய மாதம் என்று கூறுவார்கள்.   பீடுடைய என்றால் சிறப்புகள் உடைய மாதம் என்று பொருள். இந்த மாதம் தேவர்களுக்கு விடியற்காலை பொழுதாகும். அவர்களின் பிரம்ம முகூர்த்த காலம் தான் நமக்கு மார்கழி மாதம் ஆகும். இந்த மாதம் இறை வழிபாட்டிற்கு மிகவும் உகந்த மாதம் ஆகும்.

இன்றைய தினம் தேய்பிறை பஞ்சமி. பஞ்சமி வழிபாடு மிகவும் சிறப்பு வாயந்தது. பொதுவாக வியாழக்கிழமை வரும் பஞ்சமியை குபேர பஞ்சமி என்று கூறுவார்கள். குபேரன் நிதிகளுக்கு அதிபதி. அவருக்கு உகந்த நாள் வியாழக்கிழமை ஆகும். வளர்பிறை பஞ்சமி நன்மை வேண்டி வழிபாடு செய்யலாம். தேய்பிறை பஞ்சமி நமது கஷ்டங்கள் நீங்கவும், செல்வம் பெறுவதில் இருக்கும் தடைகள் நீங்கவும் வழிபாடு செய்வது நல்லது.

பஞ்சமி வழிபாடு வாரஹி அன்னைக்கு உகந்த நாள் ஆகும்.  இன்று டிசம்பர் மாதம் 19ஆம் தேதி வியாழக்கிழமை மதியம் ஒரு மணிக்கு பஞ்சமி திதியானது பிறக்கவிருக்கிறது. நாளை வெள்ளிக்கிழமை மதியம் 1:55 மணி வரை இந்த பஞ்சமி திதி இருக்கிறது. இந்தப் பதிவில் இன்று கூற இருக்கும் பரிகாரம்  மூலம் உங்கள் கடன் தீரும். மற்றும் செல்வம் சேரும். வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை என இரண்டு நாட்களிலும் பஞ்சமி திதி இருப்பதால் இந்த இரண்டு பலன்களையும்  இந்தப் பரிகாரத்தின்  மூலம் ஒருங்கே பெற முடியும்.

பொதுவாக நாம் அனுபவிக்கும் இன்பம் துன்பம் இரண்டும் பணத்தை பிரதானமாக வைத்தே இருக்கும். பணப் பிரச்சினை தீர்ந்து விட்டால் பாதி பிரச்சினைகள் தானாக தீர்ந்து விடும். இந்த இரண்டு பரிகாரத்தையும் ஒரு சேர சேர்த்து செய்பவர்களுக்கு ஒரு போதும் பணத்தால் வாழ்வில் பிரச்சனை வரவே வராது. முதலில் இன்று 19-12-2024 வியாழன் மாலை செய்ய வேண்டிய பரிகாரத்தை பார்த்து விடுவோம்.

நாம் அனுபவிக்கும் இன்ப துன்பம் அனைத்திற்கும் ஆன்மீக மற்றும் ஜோதிட ரீதியாக நவகிரகங்களே காரணம் ஆகும். நாம் பிறக்கும் போது காணப்படும் கிரக நிலைகள் தான் நமது வாழ்க்கையை தீர்மானிக்கின்றன. நவகிரகங்களை சாந்திபடுத்துவதன் மூலம் நமது பாவ கர்ம வினைகள் நீங்குகின்றன என்பது ஐதீகம். நவகிரகங்களுக்கு உரிய பொருள் நவதானியம். இவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த நவதானியங்களை வாங்கிக் கொள்ளுங்கள். அதனை ஒரு தாம்பூலத் தட்டில் பரப்பிக் கொள்ளுங்கள். மாலை ஏழு மணிக்கு இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நவதானியம் பரப்பிய தட்டின் மீது அகல் விளக்கில் பஞ்சு திரி போட்டு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.  பிறகு  தீபம் ஏற்றி மனம் உருக வேண்டி கடன் தீர பிரார்த்தனை வைத்தால் நிச்சயம் கடன் சுமை தீரும். தீபம் எரிந்து முடிந்த பிறகு மறுநாள் அந்த நவதானியங்களை எடுத்து காக்கை குருவிகளுக்கு பசுமாட்டிற்கு சாப்பிட கொடுத்து விடலாம்.

 அடுத்த நாள் வெள்ளிக்கிழமை அன்றும் பஞ்சமி திதி இருக்கிறது. காலை பிரம்ம முகூர்த்ததில் எழுந்து நன்னீராடி தூய ஆடை உடுத்திக் கொள்ளுங்கள். மார்கழி மாதம் என்பதால் வாசலில் நன்றாக கோலம் இட்டு இரண்டு விளக்குகளை நிலை வாசல் முன் வைத்து விடுங்கள். பிறகு பூஜை அறையிலும் வழக்கம் போல விளக்கை ஏற்றி வழக்கமான பூஜை மேற்கொள்ளுங்கள். வாராஹி அம்மன் விக்கிரகம் அல்லது படத்தை அலங்கரித்து வைத்துக் கொள்ளுங்கள். இரண்டும் இல்லாதாவர்கள் ஓரு தீபம் ஏற்றி அதில் வாராஹி அம்மனை ஆவாகனம் செய்து கொள்ளுங்கள். பிறகு ஒரு அகல் விளக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு விளக்கு ஏற்றுங்கள். மனதார அம்மனை வணங்கிக் கொள்ளுங்கள். உங்கள் வேண்டுதல் மற்றும் நியாயமான கோரிக்கைகளை அம்மன் முன் வைத்து வேண்டிக் கொள்ளுங்கள்.

பிறகு “ஓம் வாரஹி அன்னையே போற்றி “ என்ற மந்திரத்தை 108முறை ஜெபியுங்கள். உங்கள் வேண்டுதல் பலிக்கும். வாராஹி வழிபாடு எந்த நாளிலும் செய்யலாம் என்றாலும் இறை வழிபாட்டிற்கு உரிய மாதமாக மார்கழி மாதத்தில் செய்வதன் மூலம் உங்களுக்கு பல மடங்கு நன்மைகள் கிட்டும்.