இந்த மாதம் உங்கள் பணியிட சூழல் சிரமங்கள் மிக்கதாக இருக்கும். நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். என்றாலும் உங்கள் உழைப்பிற்கேற்ற வெகுமானம் மற்றும் அங்கீகாரம் கிடைக்க தாமதம் ஆகலாம். தொழில் தொடங்க நினைக்கும் நபர்களுக்கு இது வரவேற்கத்தக்க மாதமாக இருக்கும். ஏற்கனவே தொழில் நடத்துபவர்கள் தங்கள் தொழில் மூலம் அதிக லாபம் காணலாம். உங்கள் பொருளாதார நிலை இந்த மாதம் சராசரியாக இருக்கும். நீங்கள் அதிகமாக செலவு செய்ய நேரலாம் மற்றும் அவை தேவையற்ற செலவுகளாக இருக்கலாம். உங்கள் ஆரோக்கியம் சிறிய அளவில் பாதிக்கப்படலாம். குறிப்பாக முழங்கால் வலி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. திருமண முயற்சிகள் சில தடைகளைத் தாண்டி வெற்றி பெறும். கணவன் மனைவி உறவில் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். காதலர்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். பள்ளி மாணவர்கள் சில சிரமங்களை சந்திக்க நேரலாம். கல்லூரி மாணவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். முதுகலை மாணவர்கள் கல்வியில் திடீர் உயர்வைக் காண்பார்கள். ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மாணவர்கள், நம்பிக்கையுடன் செயல்பட்டு தங்கள் ஆய்வறிக்கைப் பணிகளை முடித்து வெற்றி காண்பார்கள.
வீட்டில் இருக்கும் பெரியவர்களுடன் நீங்கள் சிறந்த உறவை பராமரிப்பீர்கள். அது உங்களுக்கு மகிச்சியை அளிக்கும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணக்கமான உறவை பராமரிப்பீர்கள். அவர்களின் அன்பும் அரவணைப்பும் உங்களுக்கு கிடைக்கும். குடும்ப விவகாரங்களில் பெற்றோரின் உதவி கிட்டும். உங்கள் தேவைகளை அவர்கள் பூர்த்தி செய்வார்கள். கணவன் மனைவி உறவில் சில சவால்கள் எழலாம். என்றாலும் பொறுமையுடன் செயல்பட்டால் இந்த சூழலை நீங்கள் கடந்து செல்லலாம். இந்த கடினமான காலங்களில் உங்கள் துணையுடன் வெளிப்படையாகப் பேசுங்கள். சிரமங்கள் இருந்தபோதிலும், அன்பு மாறாமல் இருக்கும். நீங்கள் இருவரும் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து ஒவ்வொரு தருணத்தையும் நன்கு அனுபவிப்பீர்கள். உங்கள் துணையுடன் பசுமையான நினைவுகளை உருவாக்கிக் கொள்வீர்கள்.
திருமண உறவில் நல்லிணக்கம் காண : அங்காரகன் பூஜை
இந்த மாதம் உங்கள் நிதிநிலையில் நீங்கள் அதிக ஏற்றம் காண இயலாது. எனவே உங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் பட்ஜெட் அமைத்து வரவு செலவு மேற்கொண்டாலும் சில சமயங்களில் உங்கள் செலவு பட்ஜெட்டுக்குள் அடங்க வாய்ப்பில்லை. நீங்கள் கூடுதல் செலவுகளை மேற்கொள்ள நேரும். திட்டமிடாத செலவுகள் உங்கள் கையைக் கடிக்கலாம். எனவே கவனமாகக் கையாளுங்கள். தேவையற்ற செலவுகளில் கவனமாக இருங்கள். முக்கியம் என்றால் மட்டும் செலவு செய்யுங்கள். அதன் மூலம் அதிக செலவு வராமல் காத்துக் கொள்ளலாம்.பாதுகாப்பான பொருளாதார நிலையை உறுதி செய்ய சுயக் கட்டுப்பாடு அவசியம்.
உங்கள் நிதிநிலை மேம்பட : புதன் பூஜை
உத்தியோகத்தில் வேலைப் பளு அதிகமாக இருக்கும் என்றாலும், பணியில் உங்கள் ஆர்வமும் ஈடுபாடும் வெளிப்படும். பணியிடத்தில் உங்கள் மேலதிகாரிகள் ஆதரவாக இருக்கலாம். தகவல் தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்களுக்கு இது மிகவும் கடினமான காலகட்டமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் சக ஊழியர்களின் ஆதரவை நீங்கள் எதிர்பார்க்க இயலாது. உற்பத்தித் துறையில் பணிபுரிபவர்கள் இந்த மாதம் சிறந்த பலன் அளிக்கக் காண்பார்கள். நீங்கள் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் காண்பீர்கள்.ஆசிரியர் மற்றும் பேராசிரியர்களாக இருப்பவர்களுக்கு இந்த மாதம் அற்புதமான காலமாக இருக்கும், மேலும் உங்கள் பணி நிர்வாகத்தால் மிகவும் பாராட்டப்படும். மருத்துவத் துறையில் இருப்பவர்கள் மிகவும் பரபரப்பான நேரத்தைக் காணலாம். இதில் சுகாதார வல்லுநர்கள் மிகப்பெரிய மன அழுத்தத்தை எதிர்கொள்வார்கள். சினிமா மற்றும் மீடியா துறையைச் சேர்ந்தவர்களும் தங்கள் துறைகளில் பிரகாசிப்பார்கள். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் பணி புரிபவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்.
உத்தியோகத்தில் மேன்மை பெற : சனி பூஜை
புதிய தொழில் தொடங்கும் எண்ணம் இருந்தால், இந்த மாதம் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். ஏனெனில் கிரக நிலை உங்களுக்கு சாதகமாக உள்ளது. ஒரு நிறுவனத்தைத் தொடங்கும் எண்ணம் உங்கள் மனதில் நீண்ட காலமாக இருந்தால், அதைச் செய்ய வேண்டிய நேரம் இது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் நம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றமும் வெற்றியும் காணலாம். ஏற்கனவே சொந்த தொழில் செய்பவர்களுக்கும் இந்த மாதம் நல்ல நேரமாக இருக்கும். உங்கள் தொழில் மூலம் நீங்கள் லாபம் காண்பீர்கள். விற்பனை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. உங்கள் கடின உழைப்பு மூலம் உங்களின் பொருளாதார நிலையை எளிதில் எட்டுவீர்கள்.
இந்த மாதம் நீங்கள் உடல் உபாதைகளை சந்திக்கலாம். அது உங்களின் அன்றாட நடவடிக்கைகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே நீங்கள் அசௌகரியமாக உணரலாம். முழங்கால் மூட்டு வலி போன்ற உபாதைகள் வரலாம். நடைபயிற்சி, உடற்பயிற்சி அல்லது நீங்கள் செய்ய விரும்பும் பிற செயல்களில் இது தாக்கத்தை ஏற்படுத்தலாம்.. எனவே கவனமாக இருக்கவும்.. சிறிய சிக்கல்கள் இருந்தாலும் உடனடி மருத்துவ சிகிச்சை சிறந்த ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.
உங்கள் ஆரோக்கியம் மேம்பட : சனி பூஜை
பள்ளி மாணவர்களுக்கு இந்த மாதம் சற்று கடினமான காலக்கட்டமாக இருக்கும். கல்லூரி மாணவர்கள் கல்வியில் வெற்றி காணலாம். முதுகலை மாணவர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு இருபதைக் காணலாம். அதை சரியாக பயன்படுத்துவதன் மூலம் வெற்றி காணலாம். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் உள்ள மாணவர்கள் சில சலுகைகள் காரணமாக தங்கள் ஆய்வறிக்கையை இந்த நேரத்தில் முடித்துவிடுவார்கள்.
கல்வியில் சிறந்து விளங்க : அங்காரகன் பூஜை
சுப தேதிகள்: 1,2,4,6,7,8,9,10,12,14,16,18,19,20,21,22,23,25,26,27,28,29,31
அசுப தேதிகள் : 3,5,11,13,15,17,24,30
September 19, 2025
September 17, 2025
September 15, 2025